அண்ணல் விழாவும்...
இன்னல் தீர் பணியும்...
ஏப்ரல் -14
அண்ணல் அம்பேத்கார் அவர்களின் பிறந்த தின விழா வெகு சிறப்பாக
காரைக்குடி NFTE சங்க அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
AITUC மூத்த தோழர் பழ.இராமச்சந்திரன் அவர்கள்
கலந்து கொண்டு விழாவினை சிறப்பாக்கினார்.
பத்து மாத காலமாக சம்பளம் வராமல் துன்பப்படும்
ஒப்பந்த ஊழியர்களுக்கு அண்ணலின் பிறந்த நாளன்று
சிறு பொருளுதவி அளிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற ஊழியர்களும்...
விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களும்...
பணியில் உள்ள ஊழியர்களும்...
மனதார அளித்த நன்கொடையால்...
காரைக்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பணிபுரியும்
ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.2000/=
சிறு உதவியாக நமது தோழர்களால் வழங்கப்பட்டது.
விழாவில்...
AITUC மூத்த தோழர் பழ.இராமச்சந்திரன்...
AIBSNLEA மூத்த தலைவர் தோழர்.மோகன்தாஸ்
SNEA மாநிலச்சங்க நிர்வாகி தோழர். கரு.சண்முகம்
ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்டச்செயலர் தோழர்.முருகன்...
TRC மனமகிழ் மன்றச் செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன்
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி
NFTE கிளைச்செயலர் தோழர்.ஆரோக்கியதாஸ்
மற்றும் திரளான தோழர்கள் கலந்து கொண்டு
ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவித்தொகை வழங்கினர்.
அரசு நிவாரண நிதி என்ற அகன்ற உண்டியலில்...
நிவாரண நிதியினை அள்ளிப் போடாமல்...
நம் கண் முன்னே துயருறும்...
அடிமட்ட ஊழியர்களான ஒப்பந்த ஊழியர்களுக்கு...
தங்கள் உதவிக்கரம் நீட்டிய அன்புத்தோழர்கள்
அனைவருக்கும் நமது நெஞ்சு நிறை நன்றி உரித்தாகுக...
குறிப்பாக...
தோழியர்களின் பங்கு மனமார்ந்த பாராட்டுக்குரியது.
தோழியர்கள்...
காந்திமதி வெங்கடேசன் - ரூ.5000
லெட்சுமி DE - ரூ.5000
ஜோசஃபின் மரிய ஜோதி SDE - ரூ.5000
சரோஜா AO - ரூ.5000
புனிதா SDE - ரூ.5000
என்ற ஐம்பெரும் தோழியர்களின்...தேவியர்களின் ஐயாயிரம் பங்கு
மகத்தானது... மதிப்பானது...
எனவேதான் காரைக்குடி பகுதியில் மட்டும்
ஒரு லட்சம் அளவிற்கு உதவி புரிய முடிந்தது...
அவர்களுக்கு நமது தலைவணங்கிய
வணக்கங்களும்... வாழ்த்துக்களும்...
காரைக்குடி பகுதி போலவே...
இராமேஸ்வரம்... இராநாதபுரம்...
பரமக்குடி மற்றும் சிவகங்கை
பகுதிகளிலும் நமது தோழர்கள்
ஒப்பந்த ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்...
மகிழ்ச்சி வாழ்த்துகள்.
ReplyDelete