தேய்ந்து வரும் அகன்ற அலைவரிசை சேவை
BSNL கடந்த அக்டோபர் மாதத்தில் சுமார்
50,000 BROAD BAND அகன்ற அலைவரிசை
சந்தாதாரர்களை இழந்ததுள்ளதாக
இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான
TRAIன் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் அந்த அறிக்கை...
AIRTEL மற்றும் JIO நிறுவனங்கள் புதிய கூடுதல் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளதாகவும் கூறுகிறது. AIRTEL EXTREME FIBRE சேவையின் பயனர் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதத்தில் 2.6 மில்லியனிலிருந்து அக்டோபரில் 2.67 மில்லியனாக அதிகரித்துள்ளது.
ஆனால் BSNL BROAD BAND சந்தாதாரர்களின் எண்ணிக்கையானது கடந்த செப்டம்பர் இறுதியில் 7.8 மில்லியனிலிருந்து அக்டோபர் இறுதியில் 7.75 மில்லியனாகக் குறைந்துள்ளது. அதாவது 50,000 சந்தாதார்களை BSNL இழந்துள்ளது.
அம்பானி தலைமையிலான JIO நிறுவனம் வயர்லெஸ் பிராட்பேண்ட் பிரிவில் 406.36 மில்லியன் சந்தாதாரர்களுடன் முதலிடத்தில் உள்ளது.
ஏர்டெல் நிறுவனம் 167.56 மில்லியன் சந்தாதாரர்களுடன் இரண்டாவது இடத்திலும்,
வோடபோன் ஐடியா 120.49 மில்லியன் சந்தாதாரர்களுடன் மூன்றாவது இடத்திலும்,
பிஎஸ்என்எல்
18.12 மில்லியன் சந்தாதாரர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளது.
WIRED AND WIRELESS சந்தைப் பங்குகளை பொறுத்தவரை,
JIO ஜியோ அதிக அளவிலான 55.85 சத சந்தைப் பங்கை கொண்டுள்ளது.
AIRTEL 22.86 சதவீத சந்தைப் பங்கோடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
VODOFONE IDEA 16.5 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது.
அரசு நிறுவனமான BSNL 3.42 சதவீதத்தை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
(இணைய செய்தி)
No comments:
Post a Comment