Wednesday, 6 May 2015

ஒப்பந்த ஊழியர் சம்பளம் 

காரைக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 2015 மாத 
ஒப்பந்த ஊழியர் சம்பளம் இன்று 07/05/2015 பட்டுவாடா செய்யப்படும் என உதவிப்பொதுமேலாளர்  நிர்வாகம் உறுதி அளித்துள்ளார். 
நமது முன்கூட்டிய நன்றியை உரித்தாக்குகின்றோம்.

1000 தொழிலாளர்களுக்கு கீழே வேலை செய்யக்கூடிய இடங்களில் 
ஒவ்வொரு மாதம் 7ம் தேதியும், 
ஆயிரத்துக்கும்  அதிகமானோர் வேலை செய்யக்கூடிய இடங்களில் 
பிரதி மாதம் 10ம் தேதியும் 
சம்பளம் வழங்கப்பட வேண்டும் 
என்பது தொழிலாளர் ஊதியச்சட்டமாகும். 
ஆயினும் எங்கும் இது அமுல்படுத்தப்படவில்லை.

 தொழிலாளர் மாதமாகிய மேத்திங்கள் மாதத்திலிருந்தாவது தொழிலாளர்களின் சம்பள பட்டுவாடா 
முறைப்படுத்தப்படும் என நம்புவோம். 

மேலும் காரைக்குடியில் வார விடுப்பு அளிப்பதில் சிக்கல்கள் எழுந்தன. BSNLEU  சங்கத்துடன் இணைந்து சென்று அதிகாரிகளை சந்தித்து பிரச்சினையை சாதகமாக தீர்த்துள்ளோம்.  

நிதி மற்றும் நிர்வாக அதிகாரிகளின் 
மனித நேயப்போக்கு உதவிகரமாக இருந்தது.


  • உரிய தேதியில் சம்பளம் வழங்குதல் 
  • அடையாள அட்டை வழங்குதல்,
  • ESI மருத்துவ அட்டை வழங்குதல், 
  • EPF பிடித்தம் செய்தல்...
  • EPF  UAN எண் ஒதுக்கீடு 
  • அனைவருக்கும் 8 மணி நேரப்பணி வழங்குதல்
  • போனஸ் வழங்குதல் 

ஆகிய பிரச்சினைகளை தீர்க்க கோரி 
நமது TMTCLU தமிழ் மாநிலச்சங்கம் 
மே 19 அன்று சென்னையில் 
அறப்போர் 
நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. 

சென்னை செல்வோம்...
நம் உரிமை வெல்வோம்...
தயாராவீர்.. தோழர்களே...

Tuesday, 5 May 2015

செய்திகள்.. 
செய்திகள்... 
செய்திகள்... 

  • நமது போராட்ட  கோரிக்கைகள் மீது இன்று 06/05/2015 தொழிலாளர் நல ஆணையர் முன்பு முத்தரப்பு சமரச பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

  • நமது  JAC கூட்டமைப்புத்தலைவர்கள்  12/05/2015 அன்று டெல்லியில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கின்றார்கள்.

  • கருணை அடிப்படை வேலை வழங்குவதற்கான  உயர்மட்டக்குழு HPC  கூட்டத்தை 31/05/2015க்குள் நடத்திட வேண்டும் என மாநில நிர்வாகங்களை CORPORATE  அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

  • MANAGEMENT TRAINEE எனப்படும் நிதி மற்றும் நிர்வாகப்பிரிவு அதிகாரிகளுக்கான ஆளெடுப்பு அறிவிப்பை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வெளியில் இருந்தும் BSNLலில் பணி புரியும் குறிப்பிட்ட கல்வித்தகுதி  உள்ள ஊழியர்களில் இருந்தும் ஆளெடுப்பு நடத்தப்படும். (EXTERNAL  AND INTERNAL CANDIDATES). இதனால் முதலாம் பிரிவு STS பதவிகளில் தற்போதுள்ள பதவி உயர்வு மூலம் நமது அதிகாரிகள் அமர்வது  தடுக்கப்படுகிறது.

GPF - வைப்பு நிதி 

இம்மாதம் GPF வைப்புநிதி விண்ணப்பிக்க விரும்புவோர் 15/05/2015க்குள் ESS எனப்படும் ERP  இணையசேவை மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என மாநில நிர்வாகம் கூறியுள்ளது. இணையத்தில் விண்ணப்பித்து விட்டு விண்ணப்பத்தை அச்செடுத்து கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட
 கணக்கு அதிகாரி சம்பளப்பட்டுவாடாவிற்கு அனுப்ப வேண்டும். 


இது சம்பந்தமாக நமக்கு 
இரண்டு  கேள்விகள் எழுவது இயல்பே....

ஆனியிலே சேதி சொல்லி...
 ஆவணியிலே தேதி சொல்லும் மன்னவனைப்போல்... 
மாநில நிர்வாகம் GPF விண்ணப்பிக்க ஒவ்வொரு மாதமும் 
ஒரு தேதி சொல்லி வருகின்றது.  ERP தற்போது இயல்பு நிலைக்குத்திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில்  ஊழியர்கள் 

ஒவ்வொரு மாதமும் 15 தேதிக்குள் 
GPF விண்ணப்பிக்க வேண்டும். 
20 தேதிக்குள் GPF  பட்டுவாடா செய்யப்படும்...
 என மாநில நிர்வாகம்  குறிப்பிட்ட   தேதி  சொல்ல வேண்டும். இதன் மூலம் ஊழியர்களின் மாதாந்திர  வைப்பு நிதி வேதனை களையப்படும்.


ERP என்பது TOWARDS PAPERLESS WORLD  
என கூறப்படுகின்றது.  
தாட்களற்ற தரமான சேவை.. 
இதுவே ERPயின் தாரக மந்திரம்.

இந்நிலையில் GPF விண்ணப்பிக்கும் தோழர்கள் ERPயிலும் விண்ணப்பித்துவிட்டு அதன் அச்செடுத்து கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அச்சிட்ட விண்ணப்பம் கணக்கு அதிகாரிக்கு வரவில்லையெனில் GPF விண்ணப்பம் நிராகரிக்கப்படுகின்றது. சென்ற மாதம் காரைக்குடியில் ஏறத்தாழ 
20 விண்ணப்பங்கள் ESSல் விண்ணப்பித்த பின்னும் PRINTED APPLICATION வரவில்லையென்ற காரணத்திற்காகவே நிராகரிக்கப்பட்டுள்ளது. 

மாநில நிர்வாகம் நடத்திய WEBINARலும் இதுவே  வலியுறுத்தப்பட்டுள்ளது. நம்முடைய தோழர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் பணி புரிகின்றனர். அங்கெல்லாம் அச்செடுக்கும் வசதி இல்லை. பெரிய ஊர்களிலே கூட கணிணி வசதி இல்லை.. 
PRINTER அச்சு இயந்திர வசதி இல்லை. பல JCMகளில் மணிக்கணக்கில் இதுவே பெரும் பிரச்சினையாக அலசப்படுகின்றது. மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் ESSல் விண்ணப்பித்தாலும் அச்சு எடுத்து மாவட்டத்தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவதற்குள் தாமதமாகி விடுகின்றது. 

எனவே நமது கேள்வி...
இணையத்தில் விண்ணப்பிக்கும் வசதி வந்த பின்னும் 
தாட்களில் அச்செடுத்து அனுப்பும் முறை தொடர வேண்டுமா?

ONLINE திருமணத்திற்கு 
அய்யரும்...
அச்சிட்ட பத்திரிக்கையும் தேவையா?
நிர்வாகம் சிந்திக்க வேண்டும்...

Monday, 4 May 2015

மே 5
மாமேதை மார்க்ஸ் 
பிறந்த நாள்  
சுரண்டலை எதிர்த்தவன்
யாரும் சுரண்ட முடியாதவன்  
மண்ணுலகில்....மார்க்ஸ் பிறந்தார்...
படைப்பாளிகளாக இருந்த பாட்டாளிகள் 
படிப்பாளிகளாக மாறினார்கள்...

அரிவாள் சுத்தியல் ஏந்தினார்கள்..
அறிவால் உலகை சுத்திகரித்தார்கள்..

தத்துவத்தை  விதைத்தார்கள்..
சமத்துவத்தை வளர்த்தார்கள்...

சுதந்திரம் போற்றினார்கள்...
சுரண்டலை எதிர்த்தார்கள்..
சுய தன்மை கொண்டார்கள்..

மண்ணில் மனிதன் சுரண்டப்படும் வரை 
மார்க்ஸ் இருப்பார்...
மார்க்ஸ் உள்ளவரை..
மனிதன் இருப்பான்...
வாழ்க மாமேதை... மார்க்ஸ்..
DOTயுடனான பேச்சுவார்த்தை 

01/05/2015 அன்று நமது கூட்டமைப்புத்தலைவர்கள் 
DOT  செயலரை சந்தித்து நமது போராட்டக் கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தினர். 

DOT செயலரோடு... 
தொலைத்தொடர்பு சிறப்புச் செயலர், 
தொலைத்தொடர்பு இணைச்செயலர்,
USO நிதி நிர்வாகி,
பொதுத்துறை இயக்குநர்,
சேவைகள் மற்றும் நிதி உறுப்பினர்கள் 
BSNL CMD என அதிகாரிகள் பட்டாளம் 
கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

DOT சார்பாக கீழ்க்கண்ட உறுதிமொழிகள் தரப்பட்டுள்ளன.
  • 6700 கோடி அலைவரிசைக் கட்டணத்தில் உடனடியாக 800 கோடி திருப்பித்தரப்படும். பாக்கித்தொகை அடுத்த வருட வரவு செலவு அறிக்கையில் வைக்கப்பட்டு பரிசீலிக்கப்படும்.
  • USO நிதியில் இருந்து வரவேண்டிய 2012-13 ஆண்டிற்கான ADC கட்டணம் 1250 கோடி உடனடியாக வழங்கப்படும்.
  • சரியான கணக்கு வழக்கு இல்லாமல் BSNLலிடம் இருந்து கூடுதலாக பிடித்தம் செய்யப்பட 7000 கோடி வருமான வரியை திருப்பித்தருவதற்கான பணி வேகமாக நடைபெற்று வருகின்றது. விரைவில் இந்தப்பணம் திருப்பி அளிக்கப்படும்.
  • ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குதல் சாதகமாக விரைந்து பரிசீலிக்கப்படும்.
  • ஊதிய திருத்தம் மேற்கொள்ளப்படும்போது  ஓய்வு பெறும் ஊழியர்களின்  ஓய்வூதிய திருத்தம் செய்வது பற்றி அரசுடன் கலந்தாலோசிக்கப்படும்.
  • MTNL - BSNL இணைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
  • BSNLக்கு சொந்தமான சொத்துக்கள் விரைவில் BSNL வசம் ஒப்படைக்கப்படும். BSNL கட்டிடத்தில் இயங்கி வரும் DOT அலுவலகங்களுக்கான வாடகையை DOT  வழங்குவது  பற்றி பரிசீலிக்கப்படும்.
  • ஓய்வூதியப் பங்களிப்பு PENSION CONTRIBUTION வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடுவது பற்றி பரிசீலிக்கப்படும்.
ஆக மொத்தத்தில் DOTயுடனான பேச்சுவார்த்தை 
ஓரளவு பலனளிப்பதாக கருதப்பட்டுள்ளது.

நல் வழி காட்டுவது போராட்டம்.. 
நம் வலி தீர்ப்பது போராட்டம்..
ஒன்றுபட்ட போராட்டம்.. 
ஒன்றே நமது துயரோட்டும்...
தாரக மந்திரம் உரத்துச் சொல்வோம்...
ஒன்றாய் நாம் தடம் பதித்துச் செல்வோம்...
பாசமிகு தோழர் திருச்சி.மனோகரன்
அவர்களின் பணி நிறைவு விழா..  
NFTE இயக்கத்தின் தளபதி 
திருச்சி மாவட்டத்தின் தல பதி 
தோழர்.மனோகரன் அவர்களின் 
பணி நிறைவு விழா 02/05/2015 அன்று 
வந்தோர் மகிழ்ந்திட.. வராதோர் வருந்திட..
திருச்சியில் சீர் மிகு வண்ணம் நடைபெற்றது.

தோழர்கள். ஆர்.கே., பட்டாபி,ஜெயராமன்,சேது,தமிழ்மணி 
என தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து 
தோழர்கள் வந்து வாழ்த்துக்களை வழங்கினர்.

தன் இயக்கப் பணியின்  நிறைவுக் காலத்தில் 
அறம் எது? புறம் எது? என்று அறிந்து 
அறவழி நின்று.. புறவழி தவிர்த்து..
இயக்கம் காத்திட்ட..
அன்புத்தோழர்.மனோகரன் 
அவர்களின் பணிநிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்.
மே தினத்திருநாள் காட்சிகள் 
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில்
செஞ்சட்டை அணிந்து
தோழர். ஆர்.கே., சிறப்புரையாற்றும் காட்சி 
காரைக்குடி தொலைபேசி நிலையத்தில்
தோழர்.ஆறுமுகம்
செங்கொடி ஏற்றும் காட்சி 


பரமக்குடியில்
தோழர்.ஆர்.கே., சிவப்புரையாற்றுகின்றார் 

மானாமதுரையில்
தோழர். ஆர்.கே
செங்கொடி ஏற்றும் காட்சி 

சிவகங்கையில்
ஓய்வு பெற்ற தோழர்.சண்முகம்
உற்சாகமுடன் கொடியேற்றும் காட்சி 


மங்கிய வேளையிலும்  இராமநாதபுரத்தில்
நம் வாழ்வு மங்காமல் காத்திடும்
செங்கொடியை
 தோழர்.முனியசாமி ஏற்றும் காட்சி