Monday, 7 August 2017

அஞ்சலி கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்

ஆயிரம் நபிமார்கள் இருந்தும்
ஏன் வாப்பா ஒரு பெண் நபி இல்லை?
என்ற ஒற்றைக்கேள்வியில்…
அடையாளம் காணப்பட்டவர்…
அருமைத்தோழர். ஹெச்.ஜி.ரசூல் அவர்கள்…

அந்த ஒற்றைக்கேள்வி  எழுப்பியதாலே…
ஒற்றை ஆளாய் வாழ நேரிட்டவர்…
ஆனாலும் அவர் ஒற்றை அல்ல….
பொதுவுடமைப் பூங்காவின் சிவப்பு மலர் என…
சிந்தனை வட்டத்தில் சிறப்பிடம் பெற்றவர்…
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின்…
மாநிலத்தலைவர் பொறுப்பை வகித்தவர்….
சமூகக் கசப்பு நோயை எதிர்த்துக் குரல் கொடுத்தார்..
சாதாரண இனிப்பு நோயில் உயிர் நீத்தார்…
தோழர். ஹெச்.ஜி.ரசூல் அவர்களின் மறைவிற்கு
நமது செங்கொடி தாழ்த்திய அஞ்சலி உரித்தாகுக…
தேசிய தொழிலாளர் கருத்தரங்கம்

அனைத்து தொழிற்சங்கங்களின்
தேசிய தொழிலாளர் கருத்தரங்கம்
08/08/2017 – செவ்வாய் – புதுடெல்லி

கோரிக்கைகள்
மத்திய அரசே…
  • விலைவாசியைக் கட்டுப்படுத்து…
  • வேலைவாய்ப்பை உருவாக்கு…
  • தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்து…
  • தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்…
  • குறைந்தபட்சக்கூலி 18000 வழங்கு…
  • குறைந்த பட்ச ஓய்வூதியம் 3000 வழங்கு…
  • பொதுத்துறை பங்கு விற்பனையை நிறுத்து…
  • நிரந்தரப் பணிகளை ஒப்பந்த முறையில் செய்யாதே…
  • போனஸ் உச்சவரம்பை நீக்கு...
  • பணிக்கொடை உச்சவரம்பை உயர்த்து…
  • வைப்புநிதிக்கான சம்பள உச்சவரம்பை நீக்கு…
  • தொழிற்சங்க உரிமைகளை நடைமுறைப்படுத்து
  • தொழிலாளர் சட்டங்களைத் திருத்தாதே…
  • இரயில்வே, இராணுவம் மற்றும் ஆயுள் காப்பீட்டுத் துறைகளில் அந்நிய மூலதனத்தைப் புகுத்தாதே…

 NFTE தமிழ் மாநிலச்சங்கத்தின் சார்பாக
மாநிலச்செயலர் தோழர்.நடராஜன் கலந்து கொள்கின்றார்.
நமது வாழ்த்துக்கள்.

Friday, 4 August 2017

செய்திகள்

பொதுத்துறை அதிகாரிகளுக்கான 3வது ஊதிய மாற்றம் 
01/01/2017 முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதற்கான ஒப்புதலை 
DPE 03/08/2017 அன்று வெளியிட்டுள்ளது. நிறுவனங்களின் ஊதிய செலவினத்தைப் பொறுத்து 15 சதம் 10 சதம் 5 சதம் என ஊதிய நிர்ணயம் செய்யப்படும். தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் பொதுத்துறைகளுக்கு இது பொருந்தாது. 
குறைந்த பட்ச அடிப்படைச்சம்பளம் ரூ.30000/-ஆகும். 
அதிக பட்ச அடிப்படைச்சம்பளம் ரூ.2,00,000/-ஆகும். 
நமது BSNL நிறுவனம் தொடர்ந்து நட்டத்தில் இயங்குவதால் நமக்கு ஊதிய மாற்றத்திற்கான வாய்ப்பில்லை. ஊதிய மாற்றத்தோடு செலவினத்தை முடிச்சுப்போடும் அரசின் நியாயமற்ற செயலை எதிர்த்து நாம் கிளர்ந்தெழுவதைத் தவிர வேறுவழியில்லை.
 ----------------------------------------------------------------------------------------
NFTE மத்திய செயற்குழு அக்டோபர் 12 மற்றும் 13 தேதிகளில் 
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் நடைபெறுகின்றது. 
மத்திய சங்க பொறுப்பாளர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
JAO மற்றும் JTO ஆகிய இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 
சில தோழர்கள் JAO பதவியை மறுதலித்து JTO பதவியைத் தேர்ந்தெடுத்தனர். இதனால் உண்டான JAO  காலியிடங்களை உடனடியாக நிரப்புமாறு மத்திய சங்கம் 
நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
------------------------------------------------------------------------------------------
3வது ஊதிய மாற்றத்தை BSNL ஊழியர்களுக்குப் பெற்றுத்தருவதில் BSNL நிர்வாகம் முனைப்புடன் இருப்பதாக நமது மத்திய சங்கத்திடம்  மனித வள இயக்குநர் உறுதிபடக் கூறியுள்ளார்.
------------------------------------------------------------------------------------------
01/04/2017 முதல் 30/06/2017 வரையிலான காலாண்டிற்கான மருத்துவப்படியை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உடனடியாக வழங்குமாறு நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது. மருத்துவப்படி ஜூலை மாதமே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
------------------------------------------------------------------------------------------
975 கோடி ரூபாய்  சொத்து மதிப்பு என ஏட்டிலே கணக்கிடப்பட்டிருந்த BSNL நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு 65000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கு சொத்தின் மதிப்பேயாகும். இதற்கென தனியார் நிறுவனம் ஒன்று பணியமர்த்தப்பட்டிருந்தது. மொத்த சொத்துக்களின் மதிப்பு 2லட்சம் கோடியை எட்டலாம். 2லட்சம் கோடி சொத்து மதிப்பு இருந்தாலும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சில ஆயிரம் கூட சம்பள உயர்வு இல்லையென்பது விந்தையிலும் விந்தையாகும்.
------------------------------------------------------------------------------------------
ஜூன் மாத விலைவாசிக்குறியீட்டெண் 2 புள்ளிகள் உயர்ந்துள்ளது. எனவே அக்டோபர் மாதம் IDA 2 சதம் உயர வாய்ப்புள்ளது. 
ஆனால் 3வது ஊதிய மாற்றத்தில் 01/04/2017 அன்று -1.1 சதமும் 01/07/2017 அன்று -0.2 சதமும் IDA உயர்வு பின்னோக்கி காட்டப்பட்டுள்ளது. எனவே தற்போதைய IDA உயர்வுகளால் 
நாம் ஆனந்தம் கொள்ள அவசியமில்லை.
------------------------------------------------------------------------------------------

01/01/2016க்குப்பின் ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சம் என உயர்த்தப்பட்டது. 7வது ஊதியக்குழு அமுலாக்கத்திற்குப்பின் ஓய்வு பெற்ற தோழர்களின் பணிக்கொடை புதிய உச்சவரம்பில் கணக்கிடப்பட்டு தற்போது பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அடிப்படைச்சம்பளம் ஏறத்தாழ 30000 ரூபாய்க்கு அதிகமாக பெற்றவர்களுக்கும் அதிகாரிகளுக்கும்  
மட்டுமே கூடுதலாகப் பணிக்கொடை கிடைக்கும். 
வழக்கம்போல் அடிமட்ட ஊழியர்களுக்கு கூடுதல் பலன் கிட்டாது. 

Wednesday, 2 August 2017

பவளவிழா வாழ்த்துக்கள்

தமிழக NFTE வரலாற்றில்
தனக்கெனத் தனி முத்திரை பதித்து
ஊழியர்கள் பிரச்சினைகள் தீர்வில்…
குறிப்பாக...
தனிநபர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்…
அசுர வேகத்தில்... 
அசரா வேகத்தில் செயல்பட்டு...
போராட்டங்களில்...
புதிய புதிய வடிவங்களைப் புகுத்தி…
ஈடு இணையில்லாமல் செயல்பட்ட
அருமைத்தோழர். ஆர்.கே., அவர்களின்
பவளவிழா சிறக்க அன்போடு வாழ்த்துகின்றோம்…
-------------------------------------------------------------------------------------------------------------------------
பவளவிழா
05/08/2017 – சனிக்கிழமை 
தர்மபிரகாஷ் மண்டபம் - சென்னை
புனிதப்பயணம்
இன்று 03/08/2017 மெக்கா நகருக்கு 
 ஹஜ் புனிதப்பயணம் செல்லும் 
NFTE அகில இந்தியத்தலைவர்
அருமைத்தோழர்.இஸ்லாம் அகமது 
அவர்களின் புனிதப்பயணம் சிறக்க 
அன்புடன் வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துக்கள்

02/08/2017 அன்று மதுரையில் GM DEVELOPMENT அலுவலகக்கிளை மாநாடு சிறப்பாக நடைபெற்றது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.  

GM DEVELOPMENT அலுவலகக்கிளை நிர்வாகிகள்
தலைவர் : தோழர். P.நடேசன்  AOS
செயலர்  : தோழர். V.பரமசிவம் ATT
பொருளர் : தோழியர்.K.R.கலாவதி OS


முகநூல் மற்றும் இணையதளப் பயன்பாட்டில்
 மிக்க தேர்ச்சி பெற்ற, செயலாற்றல் மிக்கத்
 தோழர். பரமசிவம் அவர்கள் 
கிளைச்செயலராகப் பொறுப்பேற்றுள்ளது 
புதிய எழுச்சிக்கு வித்திட்டுள்ளது. மதுரை மாவட்டம் 
இயக்கத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து 
புதிய மாற்றத்தை... எழுச்சியை உருவாக்கியுள்ளது. 
செயல்பாடு சிறக்க நமது அன்பான வாழ்த்துக்கள்.

Tuesday, 1 August 2017

NFTE - NFTCL
இணைந்த கிளைக்கூட்டம்
02/08/2017 – புதன் – மாலை 5 மணி
சங்க அலுவலகம் – காரைக்குடி

  • NFTCL மகாபலிபுரம் மாநில செயற்குழு
  • நிரந்தர ஊழியர் பிரச்சினைகள்
  • திறனுக்கேற்ற கூலி அமுலாக்கம்
  • கிளை மாநாடுகள்
  • பணி நிறைவு பாராட்டு விழா
  • மற்றும் இதர பிரச்சினைகள்

தோழர்களே… வாரீர்…
NFTE மற்றும் NFTCL கிளைச்சங்கங்கள் 
காரைக்குடி