செய்திகள்
பொதுத்துறை அதிகாரிகளுக்கான
3வது ஊதிய மாற்றம்
01/01/2017 முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதற்கான ஒப்புதலை
DPE 03/08/2017 அன்று வெளியிட்டுள்ளது. நிறுவனங்களின் ஊதிய செலவினத்தைப் பொறுத்து 15 சதம் 10 சதம்
5 சதம் என ஊதிய நிர்ணயம் செய்யப்படும். தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் பொதுத்துறைகளுக்கு
இது பொருந்தாது.
குறைந்த பட்ச அடிப்படைச்சம்பளம் ரூ.30000/-ஆகும்.
அதிக பட்ச அடிப்படைச்சம்பளம்
ரூ.2,00,000/-ஆகும்.
நமது BSNL நிறுவனம் தொடர்ந்து நட்டத்தில் இயங்குவதால் நமக்கு
ஊதிய மாற்றத்திற்கான வாய்ப்பில்லை. ஊதிய மாற்றத்தோடு செலவினத்தை முடிச்சுப்போடும் அரசின்
நியாயமற்ற செயலை எதிர்த்து நாம் கிளர்ந்தெழுவதைத் தவிர வேறுவழியில்லை.
----------------------------------------------------------------------------------------
NFTE மத்திய செயற்குழு
அக்டோபர் 12 மற்றும் 13 தேதிகளில்
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் நடைபெறுகின்றது.
மத்திய சங்க பொறுப்பாளர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
JAO மற்றும்
JTO ஆகிய இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற
சில தோழர்கள் JAO பதவியை மறுதலித்து
JTO பதவியைத் தேர்ந்தெடுத்தனர். இதனால் உண்டான JAO காலியிடங்களை உடனடியாக நிரப்புமாறு மத்திய சங்கம்
நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
------------------------------------------------------------------------------------------
3வது ஊதிய மாற்றத்தை
BSNL ஊழியர்களுக்குப் பெற்றுத்தருவதில் BSNL நிர்வாகம் முனைப்புடன் இருப்பதாக நமது
மத்திய சங்கத்திடம் மனித வள இயக்குநர் உறுதிபடக்
கூறியுள்ளார்.
------------------------------------------------------------------------------------------
01/04/2017 முதல்
30/06/2017 வரையிலான காலாண்டிற்கான மருத்துவப்படியை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு உடனடியாக
வழங்குமாறு நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது. மருத்துவப்படி ஜூலை
மாதமே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
------------------------------------------------------------------------------------------
975 கோடி ரூபாய்
சொத்து மதிப்பு என ஏட்டிலே கணக்கிடப்பட்டிருந்த
BSNL நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு 65000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது
மொத்த சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கு சொத்தின் மதிப்பேயாகும். இதற்கென தனியார் நிறுவனம்
ஒன்று பணியமர்த்தப்பட்டிருந்தது. மொத்த சொத்துக்களின் மதிப்பு 2லட்சம் கோடியை எட்டலாம்.
2லட்சம் கோடி சொத்து மதிப்பு இருந்தாலும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சில ஆயிரம் கூட சம்பள உயர்வு இல்லையென்பது விந்தையிலும் விந்தையாகும்.
------------------------------------------------------------------------------------------
ஜூன் மாத விலைவாசிக்குறியீட்டெண்
2 புள்ளிகள் உயர்ந்துள்ளது. எனவே அக்டோபர் மாதம் IDA 2 சதம் உயர வாய்ப்புள்ளது.
ஆனால்
3வது ஊதிய மாற்றத்தில் 01/04/2017 அன்று -1.1 சதமும் 01/07/2017 அன்று -0.2 சதமும்
IDA உயர்வு பின்னோக்கி காட்டப்பட்டுள்ளது. எனவே தற்போதைய IDA உயர்வுகளால்
நாம் ஆனந்தம்
கொள்ள அவசியமில்லை.
------------------------------------------------------------------------------------------
01/01/2016க்குப்பின்
ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சம் என உயர்த்தப்பட்டது. 7வது
ஊதியக்குழு அமுலாக்கத்திற்குப்பின் ஓய்வு பெற்ற தோழர்களின் பணிக்கொடை புதிய உச்சவரம்பில்
கணக்கிடப்பட்டு தற்போது பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அடிப்படைச்சம்பளம் ஏறத்தாழ
30000 ரூபாய்க்கு அதிகமாக பெற்றவர்களுக்கும் அதிகாரிகளுக்கும்
மட்டுமே கூடுதலாகப் பணிக்கொடை கிடைக்கும்.
வழக்கம்போல் அடிமட்ட
ஊழியர்களுக்கு கூடுதல் பலன் கிட்டாது.
No comments:
Post a Comment