Thursday, 5 October 2017

எரிதழல் ஊர்வலம்…
04/10/2017 அன்று டெல்லியில்
BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு
3வது ஊதியக்குழு அமுலாக்கத்தை வலியுறுத்தி
AIBSNLEA தலைமையில் அனைத்து சங்கங்களின் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி எரிதழல் ஊர்வலம் நடைபெற்றது. 
NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங் கலந்து கொண்டார்.
 கலந்து கொண்ட தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்... 
நவம்பர் நாடாளுமன்ற முற்றுகை...

ஆளும் மத்திய  அரசின்
தொழிலாளர் விரோதப்போக்கைக் கண்டித்து…
அனைத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்கும்…
நாடாளுமன்ற முற்றுகை…
AITUC மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக
போராட்ட விளக்கக்கூட்டம்….
சிறப்புரை
தோழர்.தா.பாண்டியன்
07/10/2017 – சனி – காலை 10 மணி
பூமாலை வணிக வளாகம் – காரைக்குடி.
-: பங்கேற்பு :-
தோழர்களே… வருக….
தமிழ் மாநிலச்செயற்குழு

Tuesday, 3 October 2017

NFTCL
திருச்சி மாநாட்டுத் தீர்மானங்கள்…


  • குறைந்த பட்சம் ரூ.7000/= போனஸ்...
  • ஊதியத்துடன் கூடிய வார ஓய்வு மற்றும் பண்டிகைக்கால விடுப்பு…
  • ஆண்டுக்கு 12 நாட்கள் சிறு விடுப்பு…
  • 7ந்தேதி சம்பளப்பட்டுவாடா...
  • திறனுக்கேற்ற கூலி… அமுலாக்கம்…
  • புதிய சம்பள உயர்வு மற்றும் நிலுவைத்தொகை…
  • காலிப்பணியிடங்களில் நிரந்தரம்…
கோரிக்கைகளை வலியுறுத்தி…
10/10/2017 மாவட்டத்தலைநகர்களில்…
கறுப்புச்சின்னம் அணிந்து
ஆர்ப்பாட்டம்…
16/10/2017 முதல்
காலவரையற்ற
வேலைநிறுத்தம்…

ஒப்பந்த ஊழியர்களே…. அணி திரள்வீர்…

Sunday, 1 October 2017

அண்ணல் காந்தி 
அவதார தின விழா

அண்ணல் காந்தி 
அமரர் ஜீவா நினைவுக்குழு
நேரு யுவகேந்திரா மற்றும்…
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம்…
இணைந்து நடத்தும்…

அண்ணல் காந்தி அவதார தின விழா
மற்றும் சமபந்தி விருந்து

02/10/2017 – திங்கள் – காலை 10 மணி
சோமசுந்தரம் செட்டியார் நடுநிலைப்பள்ளி
சிராவயல்.

தலைமை
அருட்திரு.கோவிந்தானந்தா சுவாமிகள்

வரவேற்பு
திரு.திருநாவுக்கரசு
தலைவர் – அண்ணல் காந்தி அமரர் ஜீவா நினைவுக்குழு

சிறப்புரை
தவத்திரு.குன்றக்குடி அடிகளார் அவர்கள்

பங்கேற்பு
சிவத்திரு.பிச்சைக்குருக்கள்
உயர்திரு.குருமூர்த்தி
தோழர்.பழ.இராமச்சந்திரன் - AITUC
தோழர்.சி.முருகன்  
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம்

மற்றும் ஆன்றோர்களும்… 
சான்றோர்களும்…

அண்ணல் புகழ் பாட…
அமரர் ஜீவா பணிசெய்த…

சிராவயலில் கூடுவோம்… 
வாரீர்...தோழர்களே… 
கோரிக்கை மாநாடு

NFTCL
தேசியத் தொலைத்தொடர்பு 
ஒப்பந்த தொழிலாளர்கள் சம்மேளனம்
தமிழ்நாடு

கோரிக்கை மாநாடு – திருச்சி…..

அண்ணல் காந்தி அவதார தினத்தில்…
அல்லல் படும் அடிமட்ட ஊழியரின்
அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க…
அனைவரும் திரள்வோம்… திருச்சியிலே…

02/10/2017 – திங்கள்கிழமை – காலை 10 மணி
உறையூர் – திருச்சி.

சிறப்புரை
தோழர்.J.இலட்சுமணன்
AITUC – மாநிலச்செயலர்

தோழர்.C.K.மதிவாணன்
NFTCL பொதுச்செயலர்

மற்றும் தமிழகம் தழுவிய..
தலைவர்களும்… தோழர்களும்….

தோழர்களே… வாரீர்…
BSNL… 18வது உதய தினம்

அக்டோபர் – 1
 BSNL… 18வது உதய தினம்

வீழ்ந்திடும் என..
ஆருடம் சொன்னவருண்டு…

தாழ்ந்திடும் என…
தண்டோரா போட்டவருண்டு…

பதினேழு ஆண்டுகளில்…
அடைந்த பலன்கள் ஆயிரம்….

சென்றவரெல்லாம்…
சிறப்புடனே வாழ்கின்றார்…

இருப்போரும்… எதிர்பார்ப்போடு
இழக்காமல் இருக்கின்றார்…
நம்பிக்கை..
இழக்காமல் இருக்கின்றார்…

இங்கே… குறைகள் கொஞ்சமே….
நிறைகளோ என்றும்…
நெஞ்சை விட்டு அகலாது….

செப்புமொழி பதினெட்டுடையாள்
சிந்தனை ஒன்றுடையாள்…
எங்கள் பாரத தேசம் இணைக்கும்…
பாரத தொலைத்தொடர்பு நிறுவனம்
இன்னும் நூறாண்டு….
என்றும் பல்லாண்டு….
வாழ்க… வளர்க…