Wednesday, 3 October 2018


JE(TTA) இலாக்காத்தேர்வு மறுபரிசீலனை முடிவுகள்

28/01/2018 அன்று நடைபெற்ற 2016ம் ஆண்டிற்கான
JE(TTA) இலாக்காத்தேர்வு மிகக்கடினமாக இருந்ததாலும்,
தவறான கேள்விகள் கேட்கப்பட்டதாலும்
தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்து
மதிப்பெண் தளர்வு செய்து புதிய முடிவுகளை வெளியிட
நமது சங்கம் தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தது.

அதனடிப்படையில் மதிப்பெண் தளர்வு செய்யப்பட்டு
தேர்வு முடிவுகள் இன்று 03/10/2018 வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 22 தோழர்களும்,
அகில இந்திய அளவில் 250 தோழர்களும்
ஒருகட்ட விலக்கு அடிப்படையில்
தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தேர்வு முடிவிலும் சில குளறுபடிகள் இருக்கின்றன.
உதாரணமாக 2013ல் பணிநியமனம் பெற்ற தோழர்கள்
2016 காலியிடங்களுக்குத் தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் அல்ல. ஏனெனில் 5 வருடம் சேவை முடித்திருக்க வேண்டும்.
ஆனால் 2013 நியமன தோழர்களும் 
தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் 250 தோழர்கள் கூடுதலாக
பதவி உயர்வு பெற்றுள்ளது மிகவும் மகிழ்வுக்குரியது.
இதனை செய்து முடித்த 
நமது மத்திய சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்.

Tuesday, 2 October 2018


அண்ணல் காந்தி புகழ் பாடுவோம்…. 

இன்று 02/10/2018
அண்ணல் காந்தி அவதார தினத்தில்
காரைக்குடி நகரின் அரசியல் களமான
காந்தி திடலில் வீற்றிருக்கும்
அண்ணல் காந்தியின் திருவுருவச்சிலைக்கு
தோழர்கள் மாலை அணிவித்து மகிழ்ந்தனர்.

AITUCயின் மூத்த தோழர் 
பழ.இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில்
AITUC நகரசுத்தி தொழிலாளர்கள்,
NFTE தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள்,
ஒய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும்
கலைஇலக்கியப்பெருமன்றத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

தோழியர். கார்த்திகா JTO அவர்கள்
அண்ணல் சிலைக்கு மாலை அணிவித்து மாண்பு செய்தார்.

கலை இலக்கியப்பெருமன்ற கிளைத்தலைவர்
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தோழர்.குணசேகரன் அவர்கள்
தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
ஒய்வூதியர் சங்க மூத்த தோழர்.நாகேஸ்வரன் அவர்கள்
காந்தி அவர்களின் மாண்பு பற்றியும்…
கழுத்து நெரிக்கப்படும் கருத்து சுதந்திரம் பற்றியும்
எழுச்சிமிகு குரலோசையால் தோழர்களுக்கு எழுச்சியூட்டினார்.

BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன்,
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி,
NFTE மாவட்டத்தலைவர் தோழர்.லால்பகதூர்,
AIBSNLEA மாவட்டத்தலைவர் தோழர் தமிழ்மாறன் மற்றும்
கலைஇலக்கியப்பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் 
தோழர்.மணிபாரதி
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உணர்வோடு கலந்து கொண்ட 
தோழர்களுக்கு நல்வாழ்த்துக்கள்….
2018 அக்டோபர் 2 முதல் 2019 அக்டோபர் 2 வரை
அண்ணலின் 150வது அவதார தினப் பெருவிழாவை
உற்சாகமோடு நாடெங்கும் கொண்டாடுவோம்.

Monday, 1 October 2018


அக்டோபர் 2 – அண்ணல் - 150



 எல்லோரும்கொண்டாடுவோம்…

அண்ணல் காந்தி…
சிலுவை மரம் ஏறாத ஏசுபிரான்…
போதிமரம் அமராத புத்தபிரான்…

வாய்மையினும் வலியது இல்லை…
அகிம்சையினும் பெரியது இல்லை…
அண்ணல் காந்தியினும்…
இந்திய தேசத்திற்கு ஓர் பெருமை இல்லை…

ஒடுக்கப்பட்டோர் விடுதலையும்…
ஒடுங்கிக்கிடந்த பெண்கள் விடுதலையுமே…
ஒரு தேசத்தின் உண்மையான விடுதலை
என்றுரைத்த அண்ணல் காந்தியின்
அழியாப்புகழ் பாடுவோம்…
150வது அவதார விழாவை
ஆண்டு முழுக்க கொண்டாடுவோம்…

அண்ணல் காந்தி 
அவதார தினக்கொண்டாட்டம்… 

காரைக்குடி சிராவயல்
அமரர் ஜீவா – அண்ணல் காந்தி
நினைவுக்குழுத்தலைவர்
திரு.திருநாவுக்கரசு அவர்களின்
அன்புச்சகோதரர் தோழர்.ஆறுமுகம் அவர்கள்
அக்டோபர் 1ம்தேதி இன்று அமரர் ஆனதால்…

ஆண்டுதோறும் தவறாது
அக்டோபர் 2 அன்று
ஜீவா வாழ்ந்த சிராவயலில்
சீரோடும் சிறப்போடும் நடைபெறும்
அண்ணல் காந்தி விழா…
ஆற்றொண்ணா வேதனையோடு
தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
விரைவில் விழாத்தேதி அறிவிக்கப்படும்.

தோழர்கள் அனைவரும்…
காரைக்குடி மகர்நோன்பு பொட்டலில்…
வீற்றிருக்கும் அண்ணலின் சிலைக்கு
மாலை அணிவித்து மாண்பு செய்திட…
அக்டோபர் 2 செவ்வாய் அன்று…
காலை 10 மணிக்கு தவறாது
வருகை புரிந்திட வேண்டுகின்றோம்…

VDA என்னும் விசித்திரக் கணக்கு…

பொதுத்துறை ஊழியர்களுக்கு
01/10/2018 முதல் யாரும் எதிர்பாராத அளவு
7.6 சத IDA உயர்ந்துள்ளது.
அதை விடக்கூடுதலாக
விலைவாசி உயர்ந்துள்ளது என்பதே உண்மை.
இந்நிலையில் 01/10/2018 முதல்
ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

UNSKILLED ஒப்பந்த ஊழியர்களுக்கு
A பிரிவு நகரத்தில் 
நாளொன்றுக்கு ரூ.553/= என்றிருந்த
நாள்கூலி ரூ.558/= என 
நாளொன்றுக்கு ரூ.5/=  உயர்ந்துள்ளது.

B பிரிவில் 
நாளொன்றுக்கு ரூ.462/= என்றிருந்த
நாள்கூலி ரூ.466/= என 
நாளொன்றுக்கு ரூ4/= உயர்ந்துள்ளது.

C பிரிவில் 
நாளொன்றுக்கு ரூ.370/= என்றிருந்த
நாள்கூலி ரூ.373/= என 
நாளொன்றுக்கு ரூ3/= உயர்ந்துள்ளது.

ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்படுகின்றது.
நிரந்தர ஊழியர்களுக்கு சதவீதத்தில் அறிவிக்கப்படும் விலைவாசிப்படி
ஒப்பந்த ஊழியர்களுக்கு மட்டும் ரூபாயில் அறிவிக்கப்படுகின்றது.

மூன்று மாத இடைவெளியில்…
நிரந்தர ஊழியர்களின் விலைவாசிப்படி
ரூ.100க்கு ரூ.7.6/= உயர்வு பெற்றுள்ளது.

ஆறுமாத இடைவெளியில்…
ஒப்பந்த ஊழியர்களின் விலைவாசிப்படி
ரூ.100க்கு 86 பைசா மட்டுமே உயர்ந்துள்ளது.

ரூ.350/= அடிப்படைச்சம்பளம் கொண்ட
ஒப்பந்த ஊழியருக்கு நாளொன்றுக்கு
ரூ.3/= மட்டுமே உயர்வு கிட்டுகிறது…

ஒரு நாள் அடிப்படைக்கூலியான
ரூ.350/=க்கு VDA என்பதை விட..
தற்போதைய குறைந்த பட்சக்கூலியான
ரூ.9100/=க்கு VDA என்பதைக் கணக்கிட வேண்டும்.
அல்லது சதவீதக்கணக்கில் அறிவிக்க வேண்டும்.

ஒட்டுமொத்தத்தில்
ஒப்பந்த ஊழியர்களின் VDA கணக்கு…
சித்திரகுப்தன் கணக்கை விட…
விசித்திரக் கணக்காகவும்
வேதனையான கணக்காகவும் உள்ளது…

பதவிப்பெயர் மாற்றம்…

பதவிகளுக்குப் பல்வேறு பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள சூழலில்…
மேலும் சில பதவிகளுக்குப் பெயர்மாற்றம் செய்து
BSNL நிர்வாகம் 01/10/2018 அன்று உத்திரவிட்டுள்ளது.

LINEMAN பதவி
Telecom பிரிவில் Jt Technician (Telecom) எனவும்
Electrical பிரிவில் Jt Technician (Electrical) எனவும்
Civil பிரிவில் Jt Technician (Electrical) எனவும்
Telecom Factory பிரிவில் Jt Technician (TF) எனவும்...

Draughtsman மற்றும் Chargeman பதவிகள் 
JUNIOR ENGINEER எனவும்...

NE-6 மற்றும் NE-7 TOA பதவிகள் 
Junior Office Associate எனவும் அழைக்கப்படும்.

உத்திரவுகள் உடனடியாக அமுலுக்கு வருகின்றன.

BSNL என்றும் பதினெட்டு…

01/10/2018 
BSNL உருவாகி
பதினெட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன…
தொலைபேசி சேவையை…
தொலைதூரங்களுக்கு கொண்டு சென்றது BSNL
அலைபேசி சேவையை..
அடிமட்ட மக்களுக்கும் கொண்டு சென்றது BSNL..

சுற்றி அடிக்குது போட்டி என்னும் சுனாமி…
விதியே என்று நொந்து கிடந்திடாமல்
வீதி வழியே…  
மக்களைத் தேடி… மக்களை நாடி…
மக்கள் சொத்தாம் BSNLன்
அதிகாரிகளும் ஊழியர்களும்…
விருப்பத்தோடு… களமிறங்கி விட்டனர்…

கை நீட்டி அழைக்குது கடமை…
கரம் கோர்த்து செல்வது நமக்குப் பெருமை…
காத்திருக்குது காலமும்… களமும்…
வளமான BSNL… வலுவான BSNL…
இதுவே நம் கனவும்… லட்சியமும்…

அனைவருக்கும்
BSNL உருவாக்க தின நல்வாழ்த்துக்கள்….