Monday, 1 October 2018


VDA என்னும் விசித்திரக் கணக்கு…

பொதுத்துறை ஊழியர்களுக்கு
01/10/2018 முதல் யாரும் எதிர்பாராத அளவு
7.6 சத IDA உயர்ந்துள்ளது.
அதை விடக்கூடுதலாக
விலைவாசி உயர்ந்துள்ளது என்பதே உண்மை.
இந்நிலையில் 01/10/2018 முதல்
ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

UNSKILLED ஒப்பந்த ஊழியர்களுக்கு
A பிரிவு நகரத்தில் 
நாளொன்றுக்கு ரூ.553/= என்றிருந்த
நாள்கூலி ரூ.558/= என 
நாளொன்றுக்கு ரூ.5/=  உயர்ந்துள்ளது.

B பிரிவில் 
நாளொன்றுக்கு ரூ.462/= என்றிருந்த
நாள்கூலி ரூ.466/= என 
நாளொன்றுக்கு ரூ4/= உயர்ந்துள்ளது.

C பிரிவில் 
நாளொன்றுக்கு ரூ.370/= என்றிருந்த
நாள்கூலி ரூ.373/= என 
நாளொன்றுக்கு ரூ3/= உயர்ந்துள்ளது.

ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்படுகின்றது.
நிரந்தர ஊழியர்களுக்கு சதவீதத்தில் அறிவிக்கப்படும் விலைவாசிப்படி
ஒப்பந்த ஊழியர்களுக்கு மட்டும் ரூபாயில் அறிவிக்கப்படுகின்றது.

மூன்று மாத இடைவெளியில்…
நிரந்தர ஊழியர்களின் விலைவாசிப்படி
ரூ.100க்கு ரூ.7.6/= உயர்வு பெற்றுள்ளது.

ஆறுமாத இடைவெளியில்…
ஒப்பந்த ஊழியர்களின் விலைவாசிப்படி
ரூ.100க்கு 86 பைசா மட்டுமே உயர்ந்துள்ளது.

ரூ.350/= அடிப்படைச்சம்பளம் கொண்ட
ஒப்பந்த ஊழியருக்கு நாளொன்றுக்கு
ரூ.3/= மட்டுமே உயர்வு கிட்டுகிறது…

ஒரு நாள் அடிப்படைக்கூலியான
ரூ.350/=க்கு VDA என்பதை விட..
தற்போதைய குறைந்த பட்சக்கூலியான
ரூ.9100/=க்கு VDA என்பதைக் கணக்கிட வேண்டும்.
அல்லது சதவீதக்கணக்கில் அறிவிக்க வேண்டும்.

ஒட்டுமொத்தத்தில்
ஒப்பந்த ஊழியர்களின் VDA கணக்கு…
சித்திரகுப்தன் கணக்கை விட…
விசித்திரக் கணக்காகவும்
வேதனையான கணக்காகவும் உள்ளது…

No comments:

Post a Comment