Tuesday, 14 May 2019

S S A  இணைப்பு
தமிழகத்தில் 6 சிறிய மாவட்டங்களை அருகில் உள்ள பெரிய மாவட்டங்களுடன் இணைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி திருச்சியில் 13/05/2019 அன்று
NFTE மாவட்டச்செயலர்கள் கூட்டம் நடைபெற்றது.
------------------------------------------------------------------
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

தற்போதைய சூழலில் SSA இணைப்பு என்பது BSNL நிறுவனத்திற்கு எந்தப்பலனும் அளிக்காது. மாறாக தற்போதைய சூழலையும் கெடுத்து விடும். எனவே BSNL நிர்வாகம் மாவட்டங்கள் 
இணைப்பு என்பதைக் கைவிடவேண்டும்.

அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக இது பற்றிக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இணைப்பு என்பது உறுதி செய்யப்பட்டால் அனைத்து சங்கங்களுடன் கலந்து 
அடுத்த கட்ட நடவடிக்கை முடிவு செய்யப்படும்.
-----------------------------------------------------------------
மாவட்டங்கள் இணைப்பினால் ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என நிர்வாகம் 2015ல் தெளிவுபட உத்திரவிட்டுள்ளது. உபரியாக உள்ள ஊழியர்கள் SALES AND MARKETING பிரிவில் பயன்படுத்தப்படுவார்கள். எனவே ஊழியர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களது சேவை பணி நிறைவு பெறும் வரை  
அந்தந்த மாவட்டங்களிலேயே தொடரும்.

சங்கங்கள் தங்களது எதிர்ப்புக்களைத் தெரிவித்திருந்தாலும் 
நிர்வாகம் மாவட்டங்கள் இணைப்பை வேகமாக முடுக்கி விட்டுள்ளது. எனவே தாமதம் ஆனாலும் மாவட்டங்கள் இணைப்பு நடந்தேறும் 
என்பதே இன்றைய நிலையாக உள்ளது.

Saturday, 11 May 2019


கிளைச்செயலர்கள் கூட்ட முடிவுகள்

காரைக்குடி மாவட்ட...
NFTE  மற்றும் NFTCW கிளைச்செயலர்கள் கூட்டம்
10/05/2019 அன்று காரைக்குடி NFTE சங்க அலுவலகத்தில்
தோழர்கள் முருகன் மற்றும் லால்பகதூர் 
ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன...

கூட்டுறவு சங்கம்

சென்னைக்கூட்டுறவு சங்கத்தின் சகிக்க முடியாத
ஊழல் மற்றும் உறுப்பினர் விரோதப்போக்கைக் கண்டித்து
RGB உறுப்பினர்களான தோழர்கள் சுப்பிரமணியன்
மற்றும் சேதுபதி ஆகியோர் தங்களது
RGB பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

காரைக்குடியில் கூட்டுறவு சங்கத்தின் கொடுமைக்கு எதிராக
NFTE சங்கத்துடன் தோளோடு தோள் நின்று போராட்டத்துக்கு உறுதுணையாக நின்ற காரைக்குடி
BSNLEU மாவட்டச்சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்.

NFTE தமிழ்மாநிலச்சங்கம் உடனடியாக
இப்பிரச்சினையில் தலையிட்டு
ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும்...
அல்லல்படும் உறுப்பினர்களின் துயரங்களைத் துடைக்கவும்
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

BSNLEU சங்கம் கூட்டுறவு சங்கத்தின் ஊழலை எதிர்த்தும்..
உறுப்பினர்களுக்கு உரிய கடன் வழங்கக்கோரியும்
தமிழகத்தில் போராட்டம் நடத்தியுள்ளது.
நமது மாநிலச்சங்கமும் BSNLEU சங்கத்துடன் ஒன்றிணைந்து
ஊழலுக்கு எதிராகக் களம் காண வேண்டும்.

வரும் கூட்டுறவு RGB தேர்தலில் நாணயமானவர்களை யோக்கியமானவர்களை RGBக்களாக நிறுத்த வேண்டும்.
ஊழல் பேர்வழிகளின் கைகளில் மீண்டும்
கூட்டுறவு சங்கம் செல்வதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

தற்போதுள்ள சூழலில் BSNLEU சங்கத்துடன் இணைந்து
நாம் தேர்தலை சந்தித்தால் மட்டுமே
கூட்டுறவு நாணய சங்கத்தை நாணயத்தோடு நடத்திட முடியும்.
கடந்த கால ஊழல்களைக் கண்டறிய முடியும்.
உறுப்பினர்களுக்கு உரிய வசதிகளை அளித்திட முடியும்.
வட்டியைக் குறைத்திட முடியும்.
வெள்ளனூர் நிலப்பிரச்சினையில் உறுப்பினர்களுக்கு
சாதகமான முடிவெடுக்க முடியும்.

எனவே NFTE தமிழ்மாநிலச்சங்கம்
சென்னைக்கூட்டுறவுப் பிரச்சினையில் உரிய பங்கினைச் செலுத்திட கிளைச்செயலர்கள் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

வணிகப்பகுதி இணைப்பு

காரைக்குடி மாவட்டம்
வருவாய் இழப்பு, ஊழியர் மற்றும் அதிகாரிகள்
பற்றாக்குறையால் செயல்திறன் இழந்து வருகின்றது.
இத்தகைய சூழலில் காரைக்குடி மாவட்டத்தை மதுரை வணிகப்பகுதியுடன் இணைப்பதை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம். 

வணிகப்பகுதி இணைப்பிற்கு முன் மாவட்டத்தில் தேங்கியுள்ள தனிநபர் மற்றும் ஊழியர் பொதுப்பிரச்சினைகளைத் தீர்த்திட காரைக்குடி மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கின்றோம். 


காரைக்குடி மாவட்டத்தை
திருச்சியோடு இணைக்க வேண்டும் என்ற
வரலாறு மற்றும் புவியியல் அறிவற்ற
அபத்தமான சிந்தனையை அடியோடு எதிர்க்கின்றோம்.  
மதுரையுடன் வணிகப்பகுதி இணைப்பில் நிர்வாகத்துடன்
முழுமையான ஒத்துழைப்பை நல்கிட உறுதியளிக்கின்றோம்.


ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்

தொண்டி தொலைபேசி நிலையத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து விபத்தில் மரணமடைந்த தோழர்.மணிகண்டன் மறைவிற்கு ஆழ்ந்த  இரங்கலை உரித்தாக்கின்றோம்.  அவரது குடும்ப நிவாரணநிதிக்கு நிதியுதவி செய்திட்ட காரைக்குடி தோழர்களுக்கு நன்றிகள். இராமநாதபுரம்... பரமக்குடி... சிவகங்கைத் தோழர்களும் தங்களது பங்களிப்பை நல்கிட கிளைச்செயலர்கள் கூட்டம் கேட்டுக்கொள்கின்றது. 


BSNL டெல்லி நிர்வாகம் உடனடியாக ஒப்பந்த ஊழியர் சம்பளத்திற்கான நிதி ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும்.

திறனுக்கேற்ற கூலி என்ற கோட்பாட்டைக்
காரைக்குடி ஒப்பந்த ஊழியர்களுக்கு அமுல்படுத்திட வேண்டும்.

நிரந்தர ஊழியர்கள் மிகவும் குறைந்து விட்ட நிலையில்
ஒப்பந்த ஊழியர்களின் உறுதுணையுடன்தான்
காரைக்குடி மாவட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
எனவே காரைக்குடி மாவட்டத்தின் பிரத்யேக சூழலைக் கணக்கில் கொண்டு நிரந்தர ஊழியர் இல்லாத இடங்களில் நமது சேவையைத் தொடர்ந்திட  கூடுதல் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

NFTCW  ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட மாநாடு
ஆகஸ்ட் மாதம் பரமக்குடியில் நடைபெறும்.
அதற்கு முன்பாக அனைத்துக் கிளைமாநாடுகளும் நடைபெறும்.

மாநாடுகள் 

இராமேஸ்வரம் கிளை மாநாடு ஜூன் மாதத்திலும்...
சிவகங்கை கிளைமாநாடு ஜூலை மாதத்திலும்...
பரமக்குடி கிளைமாநாடு ஆகஸ்ட் மாதத்திலும் நடைபெறும்.
காரைக்குடி மாவட்ட மாநாடு மதுரைப்பகுதி
இணைப்பிற்குப் பின் முடிவு செய்யப்படும்.

Thursday, 9 May 2019


கூட்டுறவு சொத்து குலநாசம்...

சிவன் சொத்து குலநாசம் என்பது பழமொழி...
சிவகோத்திரம் எனப்படும் தொழிலாளர்களின் சொத்துக்களை சூறையாடுவோரின் குலமும் நிச்சயமாக இறுதியில்
நாசமாகத்தான் போகும் என்பதில் ஐயமில்லை.

சென்னைக்கூட்டுறவு சங்கம்
பாவப்பட்ட ஊழியர்களின் வட்டிப்பணத்தில் உருவானது.
பலருடைய நலனுக்காக உருவாக்கப்பட்ட  கூட்டுறவில்
கூடாத உறவுகள் உருவாகி ஊழியர் நலன்கள்
முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

தேனெடுத்தவன் கையை நக்குவான்
என்பது கிராமத்துப் பழமொழி.
முன்பெல்லாம் கூட்டுறவு சங்கத்தை நடத்திய தலைவர்கள்
தேன்பட்ட கையை யாருக்கும் தெரியாமல்
நக்கிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இன்றோ...
தேன்பட்ட கையை அல்ல...
அந்த தேன்கூடு இருக்கும் மரத்தையே
நக்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழகத்தில்... அகில இந்திய அளவில்
எந்தவொரு நிகழ்வு நடந்தாலும்
உறுப்பினர்களின் சொத்து நன்கொடை என்ற பெயரில்
அள்ளி அள்ளிக் கொடுக்கப்படுகின்றது
அவர்களது அப்பன் வீட்டுப் பணத்தைப் போல...

இதில் யாரும் விதிவிலக்கல்ல...
தொழிலாளியின் ரத்தத்தை நக்கிக்குடிப்பதில்  
யாரும் சளைத்தவர்கள் அல்ல...

வெள்ளனூர் நிலத்தை உறுப்பினர்களுக்குப்
பிரித்துக் கொடுப்போம் என்றார்கள்.
கலர் கலராக கார்டு அடித்துக் கொடுத்தார்கள்.
கடைசியில் கருப்பு வெள்ளையில்  
உறுப்பினர் நெற்றியில் நாமத்தை இட்டனர்.
விதவிதமான கூட்டணிகள்...
விதவிதமான வாக்குறுதிகள்...
அத்தனையும் போலிகள்...
அசல் பித்தலாட்டங்கள்...

இன்று சாதாரன உறுப்பினர்
தனது மகளின் திருமணத்திற்கு...
பிள்ளைகளின் கல்விச்செலவிற்கு..
குடும்பத்தேவைகளுக்கு கடன் கிடைக்காமல்
திண்டாடும் நிலை உருவாகி விட்டது.
கடன் கிடைக்காததற்குப்
பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
கொடுத்த கடன் சரிவரப் பிடித்தம் செய்து கொடுக்கப்படுவதில்லையாம்.
காரைக்குடியில் நூறுசதம்
உறுப்பினர்களிடம் இருந்து கடன்வாங்கிய தொகை
பிடித்தம் செய்து தரப்படுகின்றது.

54 சதம் மட்டுமே RECOVERY என்பது
ஒரு கடைந்தெடுத்த... தார்ப்பாயில் வடிகட்டிய பொய்யாகும்.
எனவே வாங்கிய கடனை அநியாய வட்டியோடு
மாதந்தோறும் செலுத்தும் அப்பாவித்தோழன்
தன் தேவைகளுக்கு கடன் கிடைக்காமல் திண்டாடுவது
மிகப்பெரிய கொடுமையாகும். அநீதியாகும்.
இதற்கு யார் என்ன காரணம் சொன்னாலும் ஏற்புடையதல்ல..
இந்த அநீதி எதிர்த்து BSNLEU சங்கம்
கூட்டுறவு சங்கம் முன்பாகப் போராட்டம் நடத்தியுள்ளது.
இன்று காரைக்குடியில் NFTE – BSNLEU
இணைந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. 

வங்கிக்கடன் புரிந்துணர்வு புதுப்பிக்கப்படாத சூழலில்...
GPF எப்போது கிடைக்கும் என்பது தெளிவில்லாத நிலையில்...
புதிய சம்பளம்... ஊதியநிலுவை என எதுவுமே கிட்டாத நிலையில்... ஊழியர்களுக்கு ஒரே வழி... கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறுவதுதான்.
எனவே உடனடியாக ஊழியர்களுக்கு கடன் தொகை வழங்கப்படவேண்டும் என்பதுவே நமது கோரிக்கை.

தங்களது தேவைகளுக்காக...
10 ஏக்கர் நிலத்தை விற்றது போல்... 
இன்னும் ஒரு 10 ஏக்கர் நிலத்தை விற்று உறுப்பினர்களுக்கு
கடனை வழங்கினாலும் ஆட்சேபணையில்லை.
அதை விடுத்து கூட்டுறவு சங்கம் என்பது
கூட்டுறவாய் கொள்ளையடிக்க மட்டுமே என்று செயல்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பாவப்பட்டவர்களாக இருக்க முடியாது.
சிவன் சொத்தைக் கொள்ளையடிப்பவர்கள்...
உறிஞ்சி வாழ்பவர்கள் ஒருநாள்
தங்கள் குலத்தோடு நாசமாவார்கள்
என்பது மட்டும் உறுதி.. அறுதி...

Monday, 6 May 2019


கூட்டுறவு சங்க(ட)ம் எதிர்த்து 
BSNLEU - NFTE ஆர்ப்பாட்டம்

ஊழலின் ஒட்டு மொத்த அடையாளம்...
சென்னைக் கூட்டுறவு சங்கத்தின்
ஊழலைக் கண்டித்து.... உன்மத்தம் கண்டித்து...
அலட்சியம் கண்டித்து.. அடாவடித்தனம் கண்டித்து..
கடன்பட்டு வாழும்... கஷ்டப்பட்டு வாழும்...
 உறுப்பினர்களின் நலனுக்கு எதிரான 
விரோதப் போக்கைக் கண்டித்து
BSNLEU – NFTE இணைந்த
ஆ ர் ப் பா ட் ட ம்
10/05/2019 – மதியம் 01.00 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி
-------------------------------------------------------------
கூட்டுறவு சங்க(ட) நிர்வாகமே...

பணியில் இருக்கும்போது இறந்து போன ஊழியரின் கணக்குகளை உடனடியாக  முடித்து வை. அவர்களது வாரிசுக்கு சேரவேண்டிய தொகையை தாமதமின்றிச் செலுத்து...

ஓய்வு பெற்ற ஊழியரின் கணக்குகளை முழுமை செய்து அவர்களது கணக்கில் சேரவேண்டிய பணத்தைச் செலுத்து..

பல மாதங்களாக தனிநபர்க்கடனுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் பல நூறு தோழர்களுக்கு உடனடியாக கடன் தொகையை வழங்கு... 

சங்கப் பாரபட்சமின்றி... வேண்டியவர் வேண்டாதவர் பாரபட்சமின்றி... விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக கடன் தொகையை வழங்கு...

உறுப்பினர்களுக்கு கடன் கொடுக்க வக்கில்லாவிட்டால்...
அவர்களது மாதாந்திரப் பிடித்தத்தை ரத்து செய்...

தோழர்களே...
நம் வியர்வையை உறிஞ்சி...
இரத்தத்தை உறிஞ்சி... வளர்ந்தது கூட்டுறவு சங்கம்...
இனியும் நம்மை உறிஞ்ச அனுமதிக்கலாமா?
அணி திரள்வீர்... ஆர்ப்பரிப்பீர்...

Sunday, 5 May 2019


NFTE - NFTCW  
கிளைச்செயலர்கள் கூட்டம்
தேசியத்தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனம்
தேசியத்தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சம்மேளனம்
காரைக்குடி மாவட்டம்
--------------------------------------------------------------
NFTE - NFTCW  
இணைந்த கிளைச்செயலர்கள் கூட்டம்
 --------------------------------------------------------------
10/05/2019 – வெள்ளிக்கிழமை – காலை 10 மணி
NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி
 --------------------------------------------------------------
கூட்டுத்தலைமை 
தோழர். லால்பகதூர் – மாவட்டத்தலைவர் NFTE
தோழர்.முருகன் – மாவட்டத்தலைவர் – NFTCW
--------------------------------------------------------------
ஆய்படு பொருள்
  • NFTE – NFTCW மாவட்ட மாநாடுகள் மற்றும் கிளை மாநாடுகள்
  • மதுரை வணிகப்பகுதியுடன் காரைக்குடி இணைப்பு
  • சென்னைக் கூட்டுறவு சங்க ஊழல் எதிர்த்து RGB பதவி விலகல்...
  • சென்னைக் கூட்டுறவு சங்க மதுரைக்கிளை முற்றுகை...
  • நிரந்தர ஊழியர் மற்றும் ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்...
  • எழுப்பப்படும் இதர பிரச்சினைகள்...
-----------------------------------------------------------------------------------------------------

தோழர்களே...
அனைத்துக் கிளைச்செயலர்களும், சென்னைக்கூட்டுறவு சங்க 
RGB உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.

தோழமையுடன்
வெ.மாரி – மாவட்டச்செயலர் – NFTE
பா.முருகன் – மாவட்டச்செயலர் - NFTCW

Wednesday, 1 May 2019


நிதியை நிறுத்தாதே... 
உந்தன் அநீதியை நிறுத்து... 

ஒப்பந்த ஊழியர்களுக்குத் தமிழகத்தில்
பல மாவட்டங்களில்... பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
ஆனால் காரைக்குடி மாவட்டத்தில்  
மார்ச் மாதம் வரை சம்பளம் வழங்கப்பட்டு விட்டது.  
ஏப்ரல் மாத சம்பளம் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
ஆனால் ஏப்ரல் மாதம் சம்பளம் வழங்கிட இயலாது என ஒப்பந்தக்காரர்கள் தங்களது இயலாமையை
நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.

காரணம் ஒப்பந்தக்காரர்களுக்கு
டிசம்பர் 2018 முதல் மார்ச் 2019 வரை நான்கு மாத பில்கள்
நிர்வாகத்தால்  பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளன.  
நிதி ஒதுக்கீடு இல்லை என்ற 
ஒற்றைச்சொல்... வெற்றுச்சொல்...மட்டுமே பதிலாகத் தரப்படுகின்றது.

சமீபத்தில் தொழிற்சங்கத் தலைவர்களைச் சந்தித்த
நமது CMD தற்போது BSNLலில் நிதிநெருக்கடி
இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அப்படியானால் ஒப்பந்த ஊழியர் சம்பளத்திற்கு
நிதி ஒதுக்கிட என்ன தயக்கம் என்பது தெரியவில்லை.
பல மாவட்டங்களில் நன்கு பயிற்சியும் அனுபவமும் பெற்ற
ஒப்பந்த ஊழியர்கள் BSNL நிறுவனத்தை விட்டு விலகி
வேறு தொழிலுக்குச் செல்ல ஆரம்பித்து விட்டனர்.
செய்த வேலைக்கு கூலி கொடுக்காமல் இழுத்தடிப்பது இழிசெயலாகும். 

எனவே ஒப்பந்த ஊழியர்களுக்கு  சம்பளம் வழங்கிட CORPORATE அலுவலகம் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி தமிழகம் முழுவதும் 03/05/2019 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்திட
NFTE தமிழ்மாநிலச்சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
-------------------------------------------------------------------
காரைக்குடி மாவட்டத்தில்...
இராமநாதபுரம், பரமக்குடி,
சிவகங்கை மற்றும் காரைக்குடி கிளைகளில்...
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிட
உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி...
ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
------------------------------------------------------------------
ஆ ர் ப் பா ட் ட ம்
03/05/2019 வெள்ளிக்கிழமை – மாலை 05 மணி
------------------------------------------------------------------
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்
தலைமை : தோழர். அரியமுத்து – கிளைச்செயலர் NFTCW
--------------------------------------------------------------------
தொலைபேசி நிலையம் – பரமக்குடி
தலைமை : தோழர். மோகன்  – கிளைச்செயலர் NFTCW
--------------------------------------------------------------------
தொலைபேசி நிலையம் – சிவகங்கை
தலைமை : தோழர். பா.முருகன் – மாவட்டச்செயலர் – NFTCW
--------------------------------------------------------------------
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
தலைமை : தோழர். சி. முருகன் – மாவட்டத்தலைவர் -  NFTCW
--------------------------------------------------------------------

தோழர்களே... 
அணி திரள்வீர்... ஆர்ப்பரிப்பீர்...

தோழமையுடன்
பா.முருகன் – மாவட்டச்செயலர் – NFTCW
வெ. மாரி – மாவட்டச்செயலர் – NFTE