Saturday 11 May 2019


கிளைச்செயலர்கள் கூட்ட முடிவுகள்

காரைக்குடி மாவட்ட...
NFTE  மற்றும் NFTCW கிளைச்செயலர்கள் கூட்டம்
10/05/2019 அன்று காரைக்குடி NFTE சங்க அலுவலகத்தில்
தோழர்கள் முருகன் மற்றும் லால்பகதூர் 
ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன...

கூட்டுறவு சங்கம்

சென்னைக்கூட்டுறவு சங்கத்தின் சகிக்க முடியாத
ஊழல் மற்றும் உறுப்பினர் விரோதப்போக்கைக் கண்டித்து
RGB உறுப்பினர்களான தோழர்கள் சுப்பிரமணியன்
மற்றும் சேதுபதி ஆகியோர் தங்களது
RGB பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

காரைக்குடியில் கூட்டுறவு சங்கத்தின் கொடுமைக்கு எதிராக
NFTE சங்கத்துடன் தோளோடு தோள் நின்று போராட்டத்துக்கு உறுதுணையாக நின்ற காரைக்குடி
BSNLEU மாவட்டச்சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்.

NFTE தமிழ்மாநிலச்சங்கம் உடனடியாக
இப்பிரச்சினையில் தலையிட்டு
ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும்...
அல்லல்படும் உறுப்பினர்களின் துயரங்களைத் துடைக்கவும்
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

BSNLEU சங்கம் கூட்டுறவு சங்கத்தின் ஊழலை எதிர்த்தும்..
உறுப்பினர்களுக்கு உரிய கடன் வழங்கக்கோரியும்
தமிழகத்தில் போராட்டம் நடத்தியுள்ளது.
நமது மாநிலச்சங்கமும் BSNLEU சங்கத்துடன் ஒன்றிணைந்து
ஊழலுக்கு எதிராகக் களம் காண வேண்டும்.

வரும் கூட்டுறவு RGB தேர்தலில் நாணயமானவர்களை யோக்கியமானவர்களை RGBக்களாக நிறுத்த வேண்டும்.
ஊழல் பேர்வழிகளின் கைகளில் மீண்டும்
கூட்டுறவு சங்கம் செல்வதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

தற்போதுள்ள சூழலில் BSNLEU சங்கத்துடன் இணைந்து
நாம் தேர்தலை சந்தித்தால் மட்டுமே
கூட்டுறவு நாணய சங்கத்தை நாணயத்தோடு நடத்திட முடியும்.
கடந்த கால ஊழல்களைக் கண்டறிய முடியும்.
உறுப்பினர்களுக்கு உரிய வசதிகளை அளித்திட முடியும்.
வட்டியைக் குறைத்திட முடியும்.
வெள்ளனூர் நிலப்பிரச்சினையில் உறுப்பினர்களுக்கு
சாதகமான முடிவெடுக்க முடியும்.

எனவே NFTE தமிழ்மாநிலச்சங்கம்
சென்னைக்கூட்டுறவுப் பிரச்சினையில் உரிய பங்கினைச் செலுத்திட கிளைச்செயலர்கள் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

வணிகப்பகுதி இணைப்பு

காரைக்குடி மாவட்டம்
வருவாய் இழப்பு, ஊழியர் மற்றும் அதிகாரிகள்
பற்றாக்குறையால் செயல்திறன் இழந்து வருகின்றது.
இத்தகைய சூழலில் காரைக்குடி மாவட்டத்தை மதுரை வணிகப்பகுதியுடன் இணைப்பதை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம். 

வணிகப்பகுதி இணைப்பிற்கு முன் மாவட்டத்தில் தேங்கியுள்ள தனிநபர் மற்றும் ஊழியர் பொதுப்பிரச்சினைகளைத் தீர்த்திட காரைக்குடி மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கின்றோம். 


காரைக்குடி மாவட்டத்தை
திருச்சியோடு இணைக்க வேண்டும் என்ற
வரலாறு மற்றும் புவியியல் அறிவற்ற
அபத்தமான சிந்தனையை அடியோடு எதிர்க்கின்றோம்.  
மதுரையுடன் வணிகப்பகுதி இணைப்பில் நிர்வாகத்துடன்
முழுமையான ஒத்துழைப்பை நல்கிட உறுதியளிக்கின்றோம்.


ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்

தொண்டி தொலைபேசி நிலையத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து விபத்தில் மரணமடைந்த தோழர்.மணிகண்டன் மறைவிற்கு ஆழ்ந்த  இரங்கலை உரித்தாக்கின்றோம்.  அவரது குடும்ப நிவாரணநிதிக்கு நிதியுதவி செய்திட்ட காரைக்குடி தோழர்களுக்கு நன்றிகள். இராமநாதபுரம்... பரமக்குடி... சிவகங்கைத் தோழர்களும் தங்களது பங்களிப்பை நல்கிட கிளைச்செயலர்கள் கூட்டம் கேட்டுக்கொள்கின்றது. 


BSNL டெல்லி நிர்வாகம் உடனடியாக ஒப்பந்த ஊழியர் சம்பளத்திற்கான நிதி ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும்.

திறனுக்கேற்ற கூலி என்ற கோட்பாட்டைக்
காரைக்குடி ஒப்பந்த ஊழியர்களுக்கு அமுல்படுத்திட வேண்டும்.

நிரந்தர ஊழியர்கள் மிகவும் குறைந்து விட்ட நிலையில்
ஒப்பந்த ஊழியர்களின் உறுதுணையுடன்தான்
காரைக்குடி மாவட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.
எனவே காரைக்குடி மாவட்டத்தின் பிரத்யேக சூழலைக் கணக்கில் கொண்டு நிரந்தர ஊழியர் இல்லாத இடங்களில் நமது சேவையைத் தொடர்ந்திட  கூடுதல் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க வேண்டும்.

NFTCW  ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட மாநாடு
ஆகஸ்ட் மாதம் பரமக்குடியில் நடைபெறும்.
அதற்கு முன்பாக அனைத்துக் கிளைமாநாடுகளும் நடைபெறும்.

மாநாடுகள் 

இராமேஸ்வரம் கிளை மாநாடு ஜூன் மாதத்திலும்...
சிவகங்கை கிளைமாநாடு ஜூலை மாதத்திலும்...
பரமக்குடி கிளைமாநாடு ஆகஸ்ட் மாதத்திலும் நடைபெறும்.
காரைக்குடி மாவட்ட மாநாடு மதுரைப்பகுதி
இணைப்பிற்குப் பின் முடிவு செய்யப்படும்.

No comments:

Post a Comment