Sunday, 12 April 2015

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
ஏப்ரல் 21 - 22
அகில இந்திய வேலை  நிறுத்தம் 

இருபது அம்சக் கோரிக்கைகள்:-

மத்திய அரசே...
  • BSNL வளர்ச்சிக்குத் தேவையான உபகரணங்களை  உடனடியாக கொள்முதல் செய்..
  • கிராமப்புற சேவைக்கு உரிய சன்மானம் வழங்கு..
  • BSNL சேவை விரிவாக்கத்திற்கு உரிய நிதி உதவி  செய்..
  • BSNL மற்றும் MTNL இணைப்பை நிறுத்து..
  • TOWER CORPORATION போன்ற துணை நிறுவனங்களை ஏற்படுத்தாதே.. BBNL நிறுவனத்தை BSNL உடன் இணைத்திடு ...
  • 1.2 MHz அலைவரிசையை ஒப்படைக்க கோரும் TRAIன்  மோசமான  பரிந்துரையை ரத்து செய்..
  • BSNLலில் காலியாக உள்ள இயக்குநர் பதவிகளை நிரப்பு 
  • BSNL பாத்தியத்தில்   உள்ள அனைத்து சொத்துகளையும் BSNLக்கு மாற்றம் செய்...
  • அலைவரிசை ஒப்படைப்பு பணம் 6700 கோடியை உடனடியாக திருப்பி வழங்கு..
  • மத்திய மாநில அரசு நிறுவனங்களில் BSNL சேவையைக் கட்டாயமாக்கு 
  • அலைவரிசை பயன்பாட்டை  BSNLன் விருப்பத்திற்கு விடு...
  • ஊழியர் விரோத DELOITTEE குழு பரிந்துரையை அமுல்படுத்தாதே...
  • BSNLக்கு இலவச அலைக்கற்றை வழங்கு... 
  • 4G சேவையை BSNL வழங்குவதற்கு வகை செய் 
  • ITI மூலம் உபகரணங்கள் வாங்குவதை கட்டாயமாக்காதே..
  • ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பை வழங்கு...
  • ஊதிய மாற்றத்தின் போது ஓய்வூதிய மாற்றத்தையும் அமுல்படுத்து...
  • ஓய்வூதிய பங்களிப்பை வாங்கும் சம்பளத்தில் கணக்கிடு...
  • BSNL நேரடி ஊழியர்களுக்கு 30 சத ஓய்வூதியப் பலன்கள் வழங்கு..
  • புதிய ஊழியர்களை BSNLலில் நியமனம் செய்...

வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்ளும் 

ஊழியர் சங்கங்கள் 
NFTE  - BSNLEU - FNTO
SNATTA   -    TEPU -     BTEU   
NFTBE - BSNLDEU - BSNLATM 
SEWABSNL - BSNLMS - BTUBSNL

அதிகாரிகள் சங்கங்கள் 
SNEA - AIBSNLEA - AIBSNLOA 
AIGETOA - BSNLOA - BEA BSNL

BSNL வளமாகிட 
நமது வருங்காலம் நலமாகிட...
தோழர்களே.. 
ஒன்றுபடுவோம்.. போராடுவோம்...
வெற்றிபெறுவோம்..

Friday, 10 April 2015

விடாது... சிவப்பு...
ஒப்பந்த ஊழியர் போராட்டங்கள் 

காரைக்குடி மாவட்டத்தில் 
இன்று 10/04/2015 ஒப்பந்த ஊழியர்களுக்கு 
மார்ச் மாத சம்பளம் 
முழுமையாக பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

சம்பளத்தில் ரூ.200/- அளவுக்கு 
அனைவருக்கும் குறைந்துள்ளது. 
ஒரு ஆளுக்கு 200 என்றால் 
198 ஊழியர்களுக்கு சுமார்  40000/= ரூபாய் ஆகும். 
இது என்ன கணக்கு என்பதை நிர்வாகம் தெளிவு படுத்த வேண்டும். 

புதிய குத்தகைக்காரர்கள் 
  • ஊழியர்களுக்கு சம்பள பட்டியல் PAY SLIP வழங்க வேண்டும்.
  • அடையாள அட்டை வழங்க வேண்டும்.
  • EPF கட்ட வேண்டும்... 
  • ESI அட்டை வழங்க வேண்டும்...
  • உரிய சம்பளம் வழங்க வேண்டும்...
  • குறித்த தேதியில் வழங்க வேண்டும்...
  • ஆண்டுக்கு ஒரு போனஸ் தர வேண்டும்...
  • மரணமுறும் ஊழியர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் உரிய நேரத்தில் தர வேண்டும்..
  • இல்லையென்றால் குத்தகை தொழிலை விட்டு ஓட வேண்டும்...
தோழர்களே...

11/04/2015 சிவகங்கை  
மாவட்ட செயற்குழுவில் 
விவாதிப்போம்...
கொதிக்கும் மேதினத்தில்..
உரிமைக்காய் கொதிப்போம்... 
போராட்டத்தில் குதிப்போம்...

கருப்புகளை...
கரை சேர்க்கும்வரை 
விடாது சிவப்பு...
இது ஒரு மெகா தொடர்...

Thursday, 9 April 2015

ஒப்பந்த ஊழியர்கள் 
தொடர் போராட்டம் 


நேற்று 09/04/2015 இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி பகுதிகளில் மார்ச் மாத சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இன்று காரைக்குடி பகுதியிலும் மற்றும் கேபிள் பகுதிகளில் பணி செய்யும் தோழர்களுக்கும்
 சம்பளம் வழங்கப்படும் என 
நிர்வாகத்தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

சொன்னபடி சம்பளம் வழங்கவில்லை என்றால்
நாம் ஏற்கனவே சொன்னபடி 
இன்று  10/04/2015 - மாலை 5 மணிக்கு 
காரைக்குடி  பொதுமேலாளர் அலுவலகத்தில் 
போராட்டம் நடைபெறும். 

Wednesday, 8 April 2015

எழுத்துலக... 
எதார்த்தம் மறைந்தது... 
தோழர். ஜெயகாந்தன் 

தன்னிகரற்ற படைப்பாளி...
தனி மனித இராணுவம்..
தலை வணங்கா இமயம்..
தவறு  பொறுக்காத இதயம்..
தன்மானம் மிக்க  மனிதன்.. 
தன்னலம் கருதா தோழன்... 
தடம் புரண்டாலும்... 
தடம்  பதித்த தலைவன்..

தோழர். ஜெயகாந்தன் 

அவர்கள் மறைவிற்கு
நமது அஞ்சலி...
இசை முரசுக்கு 
இதய அஞ்சலி 
 நாகூர் EM.ஹனிபா 

வெள்ளி நரை.. வெண்கலக்குரல்... 
இரும்பின் நிறம்.. உடும்பின் குணம்...

நாகூர் என்றாலே ஹனிபா என்பது 
நாடறிந்த நாமறிந்த நாமம்...

இறைவனிடம் கையேந்தியவர்...
திராவிட இயக்கத்துடன் கை கோர்த்தவர்...

சங்கீதம் இவர் கற்றதில்லை...
சங்கீதம் நேற்றுவரை இவரிடம் கற்றது...

இயக்கப்பாடல்களாலும்... 
இஸ்லாமியப்பாடல்களாலும்...
இதயங்களை வருடிய... 
இசை முரசுக்கு நமது அஞ்சலி...
பசித்தவன் விடமாட்டான் 
ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் 

7 ந்தேதி சம்பளம் வழங்காததைக்கண்டித்து 
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக 
08/04/2015 - புதன் - நண்பகல் வேளையில் 
ஒப்பந்த ஊழியர்கள் 
கண்டன முழக்க 
ஆர்ப்பாட்டம்.

 09/04/2015
 நாளை இரண்டாம் நாள் 
போராட்டம் நடைபெறும்.

குத்தகைக்காரர்களுக்கு இதயம் இல்லை... 
குளிர் அறைவாசிகளுக்கு கவலை இல்லை...
எனவே...
துயரங்கள் தொடரும் வரை...
தொடரும் நமது போராட்டம்..

Tuesday, 7 April 2015

செய்திகள் 
செய்திகள் 
செய்திகள் 

NFTE சங்க மத்திய செயற்குழு ஏப்ரல் 9 & 10 தேதிகளில் ஜெய்ப்பூரில் நடைபெறுகின்றது. இன்று சவாலாக உள்ள பல பிரச்சினைகள் பற்றி விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும்.
=============================================================
01/04/2015 முதல் உயர்ந்துள்ள 0.2 சத IDA உயர்விற்கான உத்திரவு DPEயால் 06/04/2015 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 
BSNL உத்திரவு விரைவில் வெளியிடப்படும். 

இதனிடையே அரிசி,முட்டை,மீன்,வெங்காயம், சீனி, பெட்ரோல்,  
மலர்கள் போன்ற பொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால்  
IDA  அதிக அளவு உயரவில்லை எனவும், 
கோதுமை, பருப்பு,சமையல் எண்ணெய்,இறைச்சி 
போன்றவைகளின் விலை உயர்ந்துள்ளதால் 
IDA குறையாமல் காக்கப்பட்டுள்ளது எனவும்
     தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. 

மேலும்   நாட்டிலேயே திருச்சி மையத்தில்
விலைவாசிப்புள்ளி  7 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்ததே  
IDA  உயராததற்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
=============================================================
BSNLலில் ஊழியர்களுக்கு குடியிருப்பு வீடுகள் ஒதுக்கீட்டில் 
2 சதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என 
BSNL  நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
==========================================================
சில நாட்களுக்கு முன் BSNLலில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. 
இது தவறான செய்தி என்று BSNL நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
============================================================
ஓய்வூதியம் பெறும் தோழர்கள் தங்களுடைய வங்கிக்கணக்குடன்  
ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. 
இதன் மூலம் மின்னணு முறையில் உயிர்ச்சான்றிதழ் 
LIFE CERTIFICATE கொடுக்க எளிதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
=============================================================
மத்திய அரசின் மின்னணு இந்தியா DIGITAL INDIA  திட்டத்தின் கீழ் இதுவரை 20000 கிராமங்களுக்கு அகன்ற அலைவரிசை 
BROAD BAND வசதி கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இன்னும் இரண்டு ஆண்டுகளில் 20000 கோடி செலவில்  
250000 கிராமங்களுக்கு இவ்வசதி அறிமுகப்படுத்தப்படும் 
எனவும் கூறப்பட்டுள்ளது. 

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள
 மாநிலங்களில் மாதம் ரூ.150/- என்ற அளவிலும்
 முன்னேறிய மாநிலங்களில் மாதம் ரூ.250/= 
என்ற அளவிலும் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.