Saturday, 9 July 2016

JTO தேர்வு முடிவுகள்

22/05/2016 அன்று நடைபெற்ற JTO தேர்வு முடிவுகள் 
08/07/2016 அன்று வெளியிடப்பட்டுள்ளன.
அகில இந்திய அளவில் 2157 தோழர்களும்
தமிழகம் மற்றும் சென்னையில் 277 தோழர்களும்
தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நீதி மன்றம் சென்று தற்காலிகமாகத் 
தேர்வெழுத அனுமதிக்கப்பட்ட TTA தோழர்களின் 
முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
காரைக்குடி மாவட்டத்தில் வெற்றி பெற்ற
கீழ்க்கண்ட தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • ·         P.செல்லப்பா
  • ·       R.ஜெய்கார்த்திக்
  • ·       S.நாகேஸ்வர சதாசிவம்
  • ·       J.கஷ்மீர் மைக்கேல்ராஜ்
  • ·       S.கமலக்கண்ணன்
  • ·       N.காளிமுத்து
  • ·       R.புவனேஸ்வரி
  • ·       G.ஞானேஸ்வரி
  • ·       B.அருணவேலன்
  • ·       A.K.சுரேஷ்பாபு
  • ·       S.கண்ணன்
  • ·      TRM.தங்கரெத்தினேஸ்வரன்
  •     N .முத்துக்குமாரசாமி 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
தேர்வு முடிவுகளில் தோழர்களின் HRMS எண்  தவறுதலாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நிர்வாகம் சரி செய்து திருத்தப்பட்ட பட்டியல் வெளியிட வேண்டும்.

Thursday, 7 July 2016

செங்கொடி உயர்த்தி வா.. பரமக்குடி நோக்கி வா..
களம்  பல கண்ட.. காரைக்குடியின் 
 மாவட்ட  மாநாடு 
கார்த்தி அரங்கம் சிவக்கட்டும்...
பரமக்குடி சிலிர்க்கட்டும்...
கரம் உயர்த்தி... சிரம் நிமிர்த்தி வா.. தோழனே..

Wednesday, 6 July 2016

ரம்ஜான்... நல்வாழ்த்துக்கள்

அன்பு தழைத்திட.. 
அமைதி தவழ்ந்திட... 
அனைவருக்கும் 
புனித ரம்ஜான் 
நல்வாழ்த்துக்கள் 
புதிய தொலைத்தொடர்பு அமைச்சர் 
திரு. மனோஜ் சின்கா

இரயில்வே  துணை அமைச்சரான 
திரு.மனோஜ் சின்கா 
நமது தொலைத்தொடர்புத்துறையின் அமைச்சராக 
கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ளார்.

திரு சின்கா உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
 சிறந்த நேர்மையான பாராளுமன்றவாதி என 
பத்திரிக்கைகளால் பாராட்டப்பட்டவர். 
புகழ் பெற்ற  வாரணாசி IITயில் 
முதுநிலை பொறியியல் பட்டம் பெற்றவர்.  
இவரது காலத்தில் நமது BSNL
 வளர்ச்சியுறும் என்று நம்புவோம். 

Tuesday, 5 July 2016

78.2
முயற்சி... திருவினையானது..

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக...
 நமது ஓய்வு பெற்ற மூத்த தோழர்கள் போராடி வந்த 
78.2 சத IDA  இணைப்பிற்கு மத்திய அமைச்சரவை
05/07/2016 அன்று  ஒப்புதல் அளித்துள்ளது. 

10/06/2013க்கு முன்பாக ஓய்வு பெற்ற தோழர்களும் .. 
மரணமுற்ற ஊழியர்களின் வாரிசுகளுமாக...
ஏறத்தாழ 118500  ஓய்வூதியர்கள்  இந்தப்பலனை அடைவர். 
01/01/2007 முதல் ஓய்வூதிய நிர்ணயமும்...
10/06/2013 முதல் நிலுவையும் வழங்கப்படும்.

இதனால் அரசுக்கு ஏறத்தாழ 155 கோடி ரூபாய் ஆண்டுக்கு செலவாகும். 10/06/2013லிருந்து  நிலுவையாக 290 கோடி வழங்கப்படும். 

மேலும்  01/10/2000க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களின் 
ஓய்வூதிய செலவை அரசே ஏற்கும் என்றும் 
அதில் BSNLக்கு தொடர்பில்லை என்றும்... 
01/10/2000க்குப் பின் ஓய்வு பெற்றவர்களின்
 ஓய்வூதியச்செலவும் அரசிற்கே பாத்தியப்பட்டது என்றும்... 
BSNL தனது பங்களிப்பை FR -116ன்படி செலுத்த வேண்டும் எனவும் 
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் நிதி அமைச்சகம் நமக்கு ஏற்படுத்திய
 60:40 பங்களிப்பு  என்ற பத்தாண்டு  அநீதி களையப்பட்டுள்ளது.

BSNL உருவாக்கத்தின்போது அரசு அளித்த உறுதிமொழியை 
தற்போதைய அரசு நிறைவேற்றும் நோக்கிலும், பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும்...
 மத்திய அமைச்சரவை  இம்முடிவை 
எட்டியுள்ளதாக  அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

ஓய்வூதியத்தை உறுதி செய்தது NFTE.
ஓய்வூதியம் நிலைத்திட தொடர்ந்து போராடியது  NFTE. 
60:40 பிரச்சினையில்  ஆரம்பம் முதல்  எதிர்க்குரல் கொடுத்த  
ஓய்வூதியத்தின் தந்தை தோழர் குப்தாவை 
நாம் நெஞ்சார நினைவு கூர்கிறோம்.

சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக...
 78.2  பிரச்சினையில் தொடர்ந்து போராடி 
வெற்றி பெற்ற AIBSNLPWA ஓய்வூதியர் சங்கத்திற்கு 
நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்...
ஜூலை 2016 IDA  உத்திரவு 

ஜூலை 2016 முதல் உயர்ந்துள்ள
 2.4 சத IDA  உயர்விற்கான உத்திரவு
 04/07/2016 அன்று DPEயால் வெளியிடப்பட்டுள்ளது.
BSNL  உத்திரவு விரைவில் வெளியாகும்.

Sunday, 3 July 2016

சங்கத்தலைவிகள்
மலைமகள் - கலைமகள் - அலைமகள்
செயலர் கார்த்திகா - தலைவர் தமிழரசி - பொருளர்  இராஜலெட்சுமி
காரைக்குடி GM அலுவலகக்கிளை  மற்றும் புறநகர்க்கிளைகளின் 
இணைந்த கிளை மாநாடு 30/06/2016 அன்று 
காரைக்குடி அமராவதி மகாலில்..
 தோழர்.இராஜேந்திரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.  

அலுவலக கண்காணிப்பாளர் தோழியர்.தமிழரசி தலைவராகவும்
 இளநிலைப்பொறியாளர் தோழியர்.கார்த்திகா செயலராகவும், 
அலுவலக கண்காணிப்பாளர் தோழியர்.இராஜலெட்சுமி பொருளராகவும் 
தோழர்களின் மிகுந்த மகிழ்ச்சி ஆரவாரத்துக்கிடையே  
GM அலுவலகக்கிளையின் புதிய நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
காரைக்குடி தொழிற்சங்க வரலாற்றில் மூன்று முக்கியப் பொறுப்புகளிலும் தோழியர்கள் தலைமை தாங்கும் 
இந்த நிகழ்வு ஒரு மைல்கல் என மூத்த தோழர்.நாகேஸ்வரன் அவர்கள் தனது வாழ்த்துரையில் மகிழ்வுடன் குறிப்பிட்டார். 

 தங்கத்தலைவிகள்... சங்கத்தலைவிகளாய்...
சாதனை படைக்க நமது வாழ்த்துக்கள்.

காரைக்குடி புறநகர்க்கிளை செயலர் தோழர்.ஆரோக்கியதாஸ் TT 

புறநகர்க்கிளையின்  பொறுப்பாளர்களாக...
 இளநிலைப்பொறியாளர் தோழர்.நெப்போலியன் தலைவராகவும்..
தொலைத்தொடர்பு செம்மையர்  தோழர்.ஆரோக்கியதாஸ்   செயலராகவும்...
தொலைத்தொடர்பு செம்மையர் தோழர்.சுப்பையா பொருளராகவும் 
ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புறநகர்க்கிளையின் செயலரும் ஆரோக்கியம்...
புறநகர்க்கிளையின் செயல்பாடும் ஆரோக்கியம்...
வாழ்க... வளர்க.. வளர்க்க...

FNTOவில் இருந்து விலகி NFTEல் இணைந்த மூவேந்திரன் TT 

FNTO சங்கத்தின் நெடுநாள் உறுப்பினரான தோழர்.மூவேந்திரன் 
FNTO சங்கம்  இனியும் காலம்  தள்ளாது என்பதை உணர்ந்து...
நமது சங்கத்தில் இணைந்துள்ளார்.
மூவேந்திரன் தொடங்கி வைத்துள்ளார்...
துலங்கட்டும்... தொடரட்டும்...