Thursday, 14 September 2017

ஆர்ப்பாட்டம்
BSNL  அனைத்து அதிகாரிகள் & ஊழியர்கள் கூட்டமைப்பு 

BSNL செல் கோபுரங்களைத் தனியாகப் பிரித்து
 துணை நிறுவனம் துவங்க ஒப்புதல் அளித்துள்ள
 மத்திய அமைச்சரவையின் 
BSNL விரோத முடிவைக் கண்டித்து...

BSNL அனைத்து அதிகாரிகள் மற்றும் 
ஊழியர்கள் சங்கங்கள் இணைந்த...

நாடு தழுவிய 
கண்டன ஆர்ப்பாட்டம்

15/09/2017 – வெள்ளிக்கிழமை – மதியம் 01.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.


தோழர்களே… அணி திரள்வீர்…

Wednesday, 13 September 2017

 NFTE – NFTCL
BSNLEU – TNTCWU
இணைந்த ஆர்ப்பாட்டம்

14/09/2017 – வியாழன் – மாலை 05.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.

  • போராடும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக…
  • செல் கோபுரங்களைத் தனி நிறுவனமாகப் பிரிப்பதற்கு எதிராக…
  • வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் செயலுக்கு எதிராக….
 தோழர்களே… அணி திரள்வீர்….
இரங்கல் 
தோழர்.T.முத்துக்கிருஷ்ணன் 

SEWA BSNL தமிழ்மாநிலச்செயலர் 
தோழர்.T.முத்துக்கிருஷ்ணன் 
அவர்களின் மறைவிற்கு 
நமது ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகின்றோம்.

Tuesday, 12 September 2017

செல் கோபுரங்கள் தனி நிறுவனம்

BSNL நிறுவனத்தில் உள்ள ஏறத்தாழ 66000 செல் கோபுரங்களைப் பிரித்து தனி துணை நிறுவனம் உருவாக்கிட 12/09/2017 அன்று பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த துணை நிறுவனம் BSNLன் கட்டுப்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அனைத்து செல் கோபுரங்களும் அனைத்து நிறுவனங்களும் பகிர்ந்து கொள்ளும் வகையில் பயன்படுத்திக் கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

கோபுரங்களைத் தனியாக பிரிக்கும் அரசின் 
முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து டிசம்பர் 2016ல் BSNLன் அனைத்து சங்கங்களும் வேலை நிறுத்தம் செய்த போதிலும் அரசு எதனையும் கண்டு கொள்ளவில்லை. வழக்கம் போலவே தற்போதைய அரசு தன்னுடய முடிவில் எந்த மாற்றங்களையும் செய்வதில்லை. 
அரசின் மோசமான முடிவுகளை மக்கள் எதிர்த்தாலும் 
அரசு எதிர்ப்புக்களைப் பற்றியோ விளைவுகளைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. மோசமான முடிவாக இருந்தாலும் தற்போதைய அரசு அதை மறுபரிசீலனை செய்வதில்லை. போராட்டங்கள் செய்தாலும் துளியும் அலட்டிக்கொள்வதில்லை. தானடித்த மூப்பாக தனது முடிவுகளை அமுல்படுத்துவதில் 
அரசு கண்மூடித்தனமாக உள்ளது.  எனவே செல் கோபுரங்கள் பிரிப்பதைத் தடுப்பது என்பது நமக்கு மிகப்பெரும் சவாலாக அமையும்.  மிகமிகக்கடுமையான போராட்டத்தின் மூலம் நமது எதிர்ப்பைக் காட்டாத வரையில் தற்போதைய அரசு தனது முடிவுகளை மறுபரிசீலனை செய்யாது என்பதே தற்போதைய நிலவரமாகும்.

இத்தாலியில் 800 ஆண்டு பழமையான பைசா நகரத்து 
சாய்ந்த கோபுரத்தை மேலும் சாயவிடாமல் தடுத்து விட்டனர். 
10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து இந்த சாதனையைச் செய்துள்ளனர். அங்கு சாய்ந்த கோபுரங்கள் காக்கப்படுகின்றன. 
இங்கோ நிமிர்ந்த கோபுரங்கள் சாய்க்கப்படுகின்றன. 
அங்கு பாரம்பரியம் காக்கப்படுகின்றது.  இங்கோ பொதுத்துறை என்னும் பாரம்பரியம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. 
அது இத்தாலி…. இதுதான் இந்தியா…

Sunday, 10 September 2017

செல்ல விட மாட்டோம்… சேவை மையங்களை…

நாடு முழுவதுமுள்ள...BSNLன்...
3300 வாடிக்கையாளர் சேவை மையங்களில்...
சுமார் 500 சேவை மையங்களைத் 
தனியார் வசம் ஒப்படைக்கத்துடிக்கும்
BSNL நிர்வாகத்தின் மோசமான முடிவை எதிர்த்து
சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…..

கண்டன உரை

தோழமைப்பங்கேற்பு 

தூய சேவை… நம் கொள்கை…
துரித சேவை…. நம் குறிக்கோள்….
தூய சேவை... தொடர்ந்திடுவோம்…
துரித சேவை... பெருக்கிடுவோம்….
தனியார் சேவை... தடுத்திடுவோம்…
அணி திரள்வீர்…. தோழர்களே….


ஓய்வூதியர் குறை தீர்ப்பு நாள்

 தென்பகுதி மாவட்டங்களுக்கான
ஓய்வூதியர் குறை தீர்ப்பு நாள்

15/09/2017 – வெள்ளிக்கிழமை –காலை 10.30 மணி
BSNL பொதுமேலாளர் அலுவலகம் – மதுரை

காரைக்குடி, மதுரை, நாகர்கோவில்,
தூத்துக்குடி, நெல்லை மற்றும் விருதுநகர்
தொலைத்தொடர்பு மாவட்டங்களைச் சேர்ந்த
BSNL ஓய்வூதியர்கள் கலந்து கொள்ளலாம்.
பாரதி விழா

மகாகவி பாரதி விழா
17/09/2017 – ஞாயிறு – காலை 10 மணி
தேவகோட்டை.

கவியரங்கம் – கருத்தரங்கம் -கலையரங்கம்
 தோழர்.சி. முருகன் எழுதிய 
உறவுகள் நூல் வெளியீடு…

பங்கேற்பு
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
நாவலாசிரியர் பொன்னீலன்
நீதியரசர் மகாதேவன்
துணைவேந்தர் சுப்பையா
 மற்றும் ஆன்றோர்களும்….
தமிழாய்ந்த சான்றோர்களும்…

தோழர்களே… வாரீர்….
அனைவரையும் அன்புடன் அழைக்கும்…
தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றப் பாரதி தமிழ்ச்சங்கம்
தேவகோட்டை.