உணர்வுமிகு உண்ணாவிரதப்போராட்டம்
ஜூலை 3 மற்றும்
4 தேதிகளில் தேசம் முழுவதும்
NFTE தலைமையில் 3வது ஊதியக்குழு அமைத்திடக்கோரி
இரண்டு நாள்
உண்ணாவிரதப்போராட்டம் உணர்வுடனும், உற்சாகத்துடனும் நடந்து முடிந்துள்ளது.
காரைக்குயில்
பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில்
இருநாட்களும் உற்சாகமாக போராட்டம் நடைபெற்றது.
ஓய்வுபெற்ற
ஊழியர்களும், ஒப்பந்த ஊழியர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
BSNLEU மாவட்டச்செயலர்
தோழர்.பூமிநாதன் அவர்களும், மாவட்டத்தலைவர் தோழர்.மகாலிங்கம் அவர்களும் இருநாட்களும்
கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். உண்ணாவிரதப்பந்தலுக்கு நேரில் சென்று தங்கள் ஆதரவை
வெளிப்படுத்த வேண்டும் என BSNLEU சங்கம் தங்கள் சங்கத்தோழர்களைப் பணித்திருந்தது. அதனடிப்படையில்
நாடு முழுவதும் BSNLEU சங்கம் போராட்டத்திற்கு தனது ஆதரவுக்கரம் நீட்டிய நிகழ்வு பெரிதும்
பாராட்டுக்குரியது.
AIBSNLPWA ஓய்வூதியர்கள்
சங்கத்தோழர்கள்
மாநில உதவிச்செயலர் தோழர்.நாகேஸ்வரன்,
மாவட்டத்தலைவர்
தோழர்.ஜெயச்சந்திரன்,
மாவட்டச்செயலர் தோழர்.முருகன்,
மாவட்டப்பொருளர் தோழர்.பூபதி
ஆகியோர்
தலைமையில் முழுமையாக இருநாட்களும்
பங்கு கொண்டு போராட்டத்தைச் சிறப்பித்தனர்.
NFTCL ஒப்பந்த
ஊழியர்கள் சங்கத்தோழர்கள்
மாவட்டத்தலைவர்.தோழர்.முருகன்...
மாவட்டச்செயலர் தோழர்.முருகன்...
மாவட்டப்பொருளர்
தோழர்.வீரசேகர்..
மாநில உதவிச்செயலர் தோழர்.மாரிமுத்து ஆகியோர் தலைமையில் உணர்வோடு பங்கெடுத்து தங்கள் ஆதரவை நல்கினர்.
AIBSNLEA சங்கத்தின்
மாவட்டச்செயலர் தோழர்.மோகன்தாஸ் அவர்களும், சங்கத்தோழர்களும் இருநாட்களும்
வாழ்த்துரை
வழங்கி போராட்டத்திற்கு வலு சேர்த்தனர்.
AIBSNLEA சங்கத்தின் மாநில உதவிச்செயலர் தோழர்.காமராஜ்
எழுச்சிமிகு உரையாற்றி உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.
NFTE மாநிலச்சங்கத்தின்
சார்பில்..
மாநில உதவித்தலைவர் தோழியர்.பரிமளம் அவர்களும்,
மாநில உதவிச்செயலர் தோழர்.முருகேசன்
அவர்களும் கலந்துகொண்டு கருத்தாழமிக்க உரைவீச்சு தந்தனர்.
AITUC சங்கத்தின்
மாநில துணைப்பொதுச்செயலர் தோழர்.பழ.இராமச்சந்திரன்,
AITUC போக்குவரத்து ஊழியர் சங்கப்
பொதுச்செயலர் தோழர்.மணவழகன் ஆகியோர்
அற்புதமான அரசியல் உரை நிகழ்த்தினர்.
BSNLEU சங்கத்தின்
முன்னாள் விருதுநகர் மாவட்டச்செயலர் தோழர்.அய்யாச்சாமி அவர்கள் கலந்து கொண்டு
வாழ்த்துரை
வழங்கியது கூடுதல் சிறப்பாகும்.
காரைக்குடியில்
போராட்டத்தில் கலந்து கொண்டு
இரு நாட்களும்
நமது கோரிக்கைகள் மட்டுமின்றி
தேசத்தை நாசம்
செய்யும் காவிகளின் காலித்தனத்தை
தோலுரித்து.. வரிக்கு வரி வரிக்கொடுமையை
கண்டித்து…
செவிக்கும் சிந்தைக்கும்
உணவும் உணர்வும் தந்த தலைவர்களுக்கும்… அனைத்து தோழர்களுக்கும்..
நமது வாழ்த்துக்களும்,
நன்றிகளும் உரித்தாகுக.
No comments:
Post a Comment