Wednesday, 5 July 2017

செ ய் தி க ள்

IDA உயர்வு
01/07/2017 முதல் IDA 1.9 சதம் உயர்ந்துள்ளது. மொத்த IDA 119 சதமாகும். இதற்கான DPE உத்திரவு 04/07/2017 அன்று வெளியிடப்பட்டுள்ளது. BSNL உத்திரவு விரைவில் வெளியாகும்.
------------------------------------------------------------------------------------------
கூட்டு ஆலோசனைக்குழு கூட்டங்கள்

 JCM கூட்டு ஆலோசனைக்குழு கூட்டங்களை குறித்த கால இடைவெளியில் நடத்திட வேண்டும் என CORPORATE  அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. அகில இந்திய JCM மற்றும் மாநில JCM மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும்…  மாவட்ட JCM இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் கூட்டப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆண்டு செயல்பாட்டை நிர்ணயிப்பதில் JCM கூட்டங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.  காரைக்குடி மாவட்டத்தில் NFTE, BSNLEU சங்கங்கள் வெகுநாட்களுக்கு முன்பே தங்களது JCM உறுப்பினர் பட்டியலை நிர்வாகத்திடம் அளித்திருந்தும் இன்னும் கூட்டம் கூட்டப்படவில்லை.
 -----------------------------------------------------------------------------------------
JTO இலாக்காத்தேர்வு
   11/12/2016 அன்று நடைபெற்ற JTO இலாக்காத்தேர்வு முடிவுகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன. பொதுப்பிரிவில் 126 தோழர்களும், SC பிரிவில் 26 தோழர்களும் ST பிரிவில் ஒரு தோழரும் பதவி உயர்வு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி மாவட்டத்தில் இரண்டு தோழர்கள் தேர்வு பெற்றுள்ளனர். மாநில நிர்வாகத்திற்கு நமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம். மேற்கண்ட தேர்வில் தகுதி பெற்று காலியிடங்கள் இல்லாத காரணத்தால் இன்னும் பல தோழர்கள் OC பிரிவில் காத்திருக்கின்றனர். அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே தோழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 ----------------------------------------------------------------------------------------
TSM மற்றும் CASUAL ஊழியர்கள்

01/10/2000க்குப்பின் TSM மற்றும் CASUAL ஊழியர்களாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற... மரணமுற்ற... இலாக்காவை விட்டுச்சென்று விட்ட... ஊழியர்களின் விவரங்கள் மாநில மட்டங்களில் கேட்கப்பட்டிருந்தது. இன்னும் பல மாநிலங்களில் இருந்து விவரங்கள் வராததால் மீண்டும் அந்த விவரங்களை உடனடியாக அளிக்குமாறு CORPORATE அலுவலகம் மாநில நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளது.
------------------------------------------------------------------------------------------
போராட்டத்திற்கு ஆதரவு
நடந்து முடிந்த நமது உண்ணாவிரதப்போராட்டத்திற்கு BSNLEU சங்கம் நாடெங்கும் ஆதரவு அளித்துள்ள நிலையில்… BSNLEU தலைமையில் 13/07/2017 அன்று நடக்கவிருக்கும் ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு நமது ஆதரவை பெருவாரியாக நல்கிட வேண்டும் என மத்திய சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 ----------------------------------------------------------------------------------------
ஊதிய மாற்றமும்… BSNL  முயற்சிகளும்…
3வது ஊதியமாற்றம் உடனடியாக வரவேண்டும் என உரிமைக்குரல்கள் எழுந்து விட்ட நிலையில் BSNL நிர்வாகம் ஊழியர்களுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறது. இது பற்றி பல்வேறு விளக்கங்களை DOTக்கு எழுதியுள்ளது. அதன் தொடர்ச்சியாக 23/06/2017 அன்று DOT செயலருக்கு ஊதிய மாற்றம் சம்பந்தமாக மேலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அனைத்து புள்ளி விவரங்களும் தயார் செய்யப்பட்டு விரைவில் DOT செயலருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.
 ----------------------------------------------------------------------------------------
JAO ஆளெடுப்பு விதிகளில் திருத்தம்
 JAO ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நமது சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதனடிப்படையில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு BSNL நிர்வாகக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
காலவரையற்ற வேலை நிறுத்தம்..
 3வது ஊதிய மாற்றத்தை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என NFTE தலைமையிலான கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அரசாங்கத்தின் அசைவு மற்றும் இசைவைப்பொறுத்து நமது அடுத்த கட்ட நடவடிக்கை அமையும் 
என மத்திய சங்கம் அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment