கடலூர்…
உரிமைகளின்
களம்… உணர்வுகளின் களம்….
அடிமட்ட ஊழியர்களின்
வாழ்வு உயர….
களம் பல கண்ட கடலூர்
மாவட்டத்தின்
NFTCL ஒப்பந்த
ஊழியர் சங்க மாவட்ட மாநாடு…
24/09/2017 அன்று
விழுப்புரம் நகரில்….
செவிக்கும்… சிந்தைக்கும்…
விருந்தாக….
துயரங்களுக்கு
மருந்தாக அமைந்தது…
தோழர்.வேதாச்சலம்
தலைமை வகித்தார்….
கோரிக்கைகள் முழங்க
கொடியேற்றம்,
வரலாறு சொல்லும்
கல்வெட்டு திறப்பு….
வாணவேடிக்கைகளுடன்
ஊர்வலம்…
தோழர்கள் மனம்
நிறைந்த
அமரர்.இராஜேந்திரன்
அரங்கம் நிறைந்திட…
அன்பழகன் துவக்கவுரையாற்றிட….
அசோகராஜன் காஷ்மீர்
அனுபவங்களை…
ஆப்பிளின் சுவை
மிஞ்சி அற்புதமாய் எடுத்துரைக்க…
சம்மேளனச்செயலர்
ஜெயராமன் சிறப்புரைக்க…
AITUC மாவட்டச்செயலர்
தோழர்.சேகர் அவர்கள்
நெய்வேலி அனுபவங்களை
நெகிழ்வோடு எடுத்துரைக்க…
பொதுச்செயலர் தோழர்.மதி
அவர்கள்…
காஷ்மீர் முதல்
கடல்குமரி வரை
விரிந்து பரந்து
வரும் NFTCLன் எழுச்சியை எடுத்துரைக்க…
செவிக்குணவால்
சிந்தை மயங்கிய தோழர்கள்
வயிற்றுக்குணவால்
நெஞ்சம் மயங்கிட…
மதிய வேளையில்…
கருத்தரங்கம் துவங்கியது…
மாநில செயல்தலைவர்
தோழர்.மாரி தலைமையேற்க…
தோழர்.பாபு, இளங்கோவன்,
இரகுநாதன், கணேசன்,
ஆறுமுகம், கோதண்டபாணி,
மகேந்திரன், மாரிமுத்து
எனப் பல்வேறு தோழர்கள்
ஆழமாய் கருத்துரை வழங்கிட…
மாநிலச்செயலர்
தோழர்.ஆனந்தன்
ஊழியர் பிரச்சினைகளைப்
பட்டியலிட்டு…
புதிய நிர்வாகிகளையும்
பட்டியலிட்டார்.
ஒரு மனதாக நிர்வாகிகள்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அனைத்து தொழிற்சங்கத்
தலைவர்களும்….
தவறாது வந்திருந்து
வாழ்த்துரை வழங்கினர்.
புதிய நிர்வாகிகளுக்கு
நமது வாழ்த்துக்கள்…
மாவட்டத்தலைவர்
தோழர்.ஹரிகிருஷ்ணன்
மாவட்டச்செயலர்
தோழர்.மஞ்சினி
மாவட்டப்பொருளர்
தோழர்.மணிகண்டன்
ஒப்பந்த ஊழியர்களின்
வாழ்வில்…
ஏற்றம் உண்டாகிட…
மாற்றம் பிறந்திட…
NFTCL தன் பங்கினை…
புதிய பாங்கோடு
செலுத்திட
நமது நல் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment