செய்திகள்
கேரள
வெள்ள நிவாரணத்திற்கு
BSNL ஊழியர்களின் பங்களிப்பாக
ஒரு நாள் அடிப்படைச்சம்பளத்தை
BASIC
PAY பிடித்தம் செய்திடக்கோரி
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
நிர்வாகத்திற்கு வேண்டுகோள்
விடுத்துள்ளது.
BSNL
அனைத்து சங்க கூட்டமைப்பு 24/08/2018 அன்று
CMDயுடன் சந்திப்பு நிகழ்த்தியது. ஊதியமாற்றம்…
ஓய்வூதிய மாற்றம்… ஓய்வூதியப்பங்களிப்பு மற்றும் 4G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இலாக்கா
அமைச்சர் அளித்த உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்படாத அவலநிலை சுட்டிக்காட்டப்பட்டது. இது
சம்பந்தமாக DOT செயலருடன் கூட்டமைப்பு சந்திப்பு நிகழ்த்த ஆவண செய்திட கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் BSNL நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதியத்திட்டத்திற்கு BSNL நிர்வாகம் கூடுதல் பங்களிப்பு செய்திடவும்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
NFTE தேசிய செயற்குழுக் கூட்டம் 2018 அக்டோபர்
24 மற்றும் 25 தேதிகளில் உத்தரகாண்ட மாநிலம்
ஹரித்துவார் நகரில் நடைபெறுகின்றது.
தொலைத்தொடர்பு
அதிகாரிகளுக்கு சீனாவில் தகவல் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்க DOT உத்தேசித்துள்ளது.
அலிபாபா மற்றும் HUAWEI நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படும்.
மத்திய
அரசின் ஓய்வூதியத்திட்டத்தில் இல்லாத தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் பணிக்கொடை
உச்சவரம்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்டதைப் போலவே
ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பரிவு
அடிப்படை வேலைக்கு விண்ணப்பித்து உரிய தகுதி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கிட
CORPORATE அலுவலகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. காலியிடங்களைப் பொறுத்து
30க்கும் குறைவான
எண்ணிக்கையில்தான் தமிழகத்தில்
பணி நியமனம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
BSNL
ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அலைபேசி ரூ.600/-
PREPAID திட்டம் ஓட்டுநர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment