உடனே நீளட்டும்…
உதவிக்கரங்கள்…
சோறுடைத்த சோழபூமி
இன்று..
சோதனையில் தவித்து
நிற்கின்றது…
அறச்சீற்றத்தினும்
வலியது…
அமைதியிழந்த இயற்கைச்சீற்றம்…
உதவுவது நம் தலையாய
கடமை…
எனவே கோவை மாநிலச்செயற்குழு
பாதிக்கப்பட்ட
தஞ்சை,நாகை,திருவாரூர்..
காரைக்கால்,வேதாரண்யம்,திருத்துறைப்பூண்டி
பகுதிகளுக்கு உடனடியாக
உதவிட வேண்டுகோள் விடுத்தது…
அனைத்து மாவட்டங்களும்
தங்களது பங்களிப்பை
உடனடியாக செய்து
முடித்துள்ளன.
கூடுதல் பங்களிப்பை
உணர்வுப்பூர்வமாக
உடனடியாகச் செய்து
முடித்த
கடலூர் குடந்தை
மாவட்டங்களுக்கு நமது வாழ்த்துக்கள்…
நாமும் நமது பங்கினைச்
செலுத்திட வேண்டும்…
எனவே காரைக்குடி NFTE – AITUC சங்கங்கள் இணைந்து
திருத்துறைப்பூண்டி
பகுதி மக்களுக்கு
நிவாரணப்பொருட்கள்
அளித்திடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
நாளை
25/11/2018 ஞாயிற்றுக்கிழமை லாரியில் நிவாரணப்பொருட்கள் திருத்துறைப்பூண்டி கொண்டு
செல்லப்பட்டு
நமது முன்னாள்
சட்டமன்ற உறுப்பினர்
தோழர்.உலகநாதன்
அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
தோழர்கள் தங்கள்
பங்களிப்பை
பொருட்களாக தந்து உதவிட வேண்டும்.
போர்வைகள்,கைலிகள்,துண்டுகள்,சேலைகள்,
வேட்டிகள்,நைட்டிகள் மற்றும் அரிசி,பருப்பு
போன்ற உணவுப்பொருட்களாக அளித்திட வேண்டும்.
பழைய துணிகளைத்
தவிர்க்கவும்….
நாளை மதியத்திற்குள்
தோழர்கள் தங்களது பங்களிப்பை
NFTE சங்க அலுவலகத்தில்
சேர்த்து விட வேண்டும்…
இராமநாதபுரம்,பரமக்குடி
பகுதி தோழர்கள்
தங்கள் பங்களிப்பை
26/11/2018 அன்று
மாநிலச்செயலர் தோழர்.நடராஜன்
அவர்களின்
வருகையின்போது அளித்திட வேண்டும்…
கிளைச்செயலர்கள்
உரிய கவனம் செலுத்திட வேண்டுகின்றோம்…
No comments:
Post a Comment