Sunday, 7 July 2019


பொறுத்தது போதும்...

தோழர்களே...
கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக...
சென்னை கூட்டுறவு சங்கத்தில்...
இறந்து போன உறுப்பினர்கள்...
ஓய்வு பெற்ற உறுப்பினர்கள்...
கணக்கு முடித்த உறுப்பினர்கள்...
ஆகியோரது கணக்கு வழக்குகள் முடிக்கப்பட்டு
நிலுவை வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்படுகின்றது.

பல்வேறு தேவைகளுக்காக கடன் விண்ணப்பித்த தோழர்களுக்கு
இன்று வரை கடன் பட்டுவாடா செய்யப்படவில்லை.
வேண்டியவர்களுக்கும்... RGB உறுப்பினர்களுக்கும் மட்டுமே
அவ்வப்போது கடன் வழங்கப்படுகின்றது....

சாதாரண  உறுப்பினர்கள் கையைப் பிசைந்து கொண்டு
கடனுக்கு ஏங்கிக்கொண்டிருக்கும் கொடுமை தொடர்கின்றது...

கூட்டுறவு சங்கத்தில்... 
நடக்கும் கொள்ளையைப் பற்றி...
நாள்தோறும் பலசெய்திகள்
சாட்டை...சவுக்கு என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெள்ளனூர் நிலம் விற்கப்பட்டு பலகோடிப் பணம்
விழுங்கப்பட்டதாக பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.

ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வியர்வையைச் சிந்தி
உழைத்த பணத்தில் உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கம்
இன்று கொள்ளைக்கூடாரமாக மாறிவிட்டதாக
ஊடகச்செய்திகள் கூறுகின்றன...

BSNLEU சென்னைத்தொலைபேசித் தோழர்கள்..
உரிய ஆதாரங்களுடன்... விளக்கங்களுடன் சமீபத்தில்
வெள்ளனூர்  நிலக்கொள்ளையைத் தோலுரித்துக்காட்டியுள்ளனர்...

தனது வட்டிப்பணத்தில் உருவான கூட்டுறவு சங்கத்தில்
என்ன நடக்கின்றது?  என்ற உண்மை நிலவரம்
இன்றுவரை சாதாரண உறுப்பினருக்குத் தெரியவில்லை.
இன்றுவரை கூட்டுறவு சங்க நிர்வாகம்
வெள்ளந்தியான  உறுப்பினர்களுக்கு
வெள்ளையறிக்கையாக உண்மையை உரைக்கவில்லை....

கூட்டுறவு சங்கத்தில்...
தொழிற்சங்கங்கள் என்ற போர்வையில்
ஊழல் முதலைகள் வாய் பிளந்து வாரி விழுங்குகின்றன
என்ற  செய்திகள் டீக்கடை பெஞ்சுகளில் 
தினந்தோறும் பேசப்படுகின்றன...

இந்தக் கொடுமைகளை
இன்னும் எத்தனை காலம்தான் சகிப்பது?
இந்த கொள்ளைகளுக்கு முடிவு எப்போது?
சாதார உறுப்பினருக்கு...
அவனது தேவைக்கான கடன் கிடைப்பது எப்போது?
சாதார உறுப்பினரின் சொத்து 
கொள்ளை போவதை தடுப்பது எப்படி?
என்ற பல கேள்விகள் தோழர்களின் நெஞ்சில் எழுகின்றன...

எனவே பரமக்குடியில் நடந்த
NFTE காரைக்குடி மாவட்டச்செயற்குழு முடிவின்படி
09/07/2019 அன்று மதுரையில் நடைபெறும்
மதுரை மாவட்டச்செயற்குழுவில் நாமும் பங்கேற்போம்...
கூட்டுறவு சங்கத்தை எதிர்த்துப் போராடுவது....
கூட்டுறவு சங்க நிர்வாகத்தின் மீது வழக்குத்தொடுப்பது  என்ற
மதுரை மாவட்டச்சங்கத்தின் முடிவை நாம் வரவேற்கின்றோம்...

கூட்டுறவு சங்க உறுப்பினர் நலன் காக்கும் போராட்டத்தில்...
கூட்டுறவு சங்க நிர்வாகத்திற்கெதிரான வழக்கில்...
மதுரை மற்றும் காரைக்குடி மாவட்டங்கள் இணைந்து
செயல்படுவோம்.... போராட்டக்களம் காண்போம்...
ஊழியர் நலன் காப்போம்...

தோழர்களே...
09/07/2019 மதுரை மாவட்டச்செயற்குழுவில்...
அனைத்துக் கிளைச்செயலர்களும்...
முன்னணித்தோழர்களும்...
முன்னாள் RGB உறுப்பினர்களும்...
அவசியம் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.

அன்புடன்
பா. லால்பகதூர் – மாவட்டத்தலைவர் – காரைக்குடி
வெ.மாரி – மாவட்டச்செயலர் – காரைக்குடி

No comments:

Post a Comment