போய்விட்டன... பொற்காலங்கள்...
19/07/1969...
இந்திய
வரலாற்றில் ஓர் பொன்னாள்.
அன்றுதான் 14
வங்கிகள் தேசியமயம் ஆக்கப்பட்டன.
உறுதியுடன் இந்தப்பணியைச்
செய்து முடித்த...
அன்னை இந்திராகாந்தி
காலம்தோறும்
நம்மால் போற்றப்படவேண்டியவராவார்...
அன்று...
சமூகத்தின் வளர்ச்சியை மேலும்
மேலும் மேம்படுத்துவதன்
நோக்கமாக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன.
அன்று...
விவசாயம்... சிறு தொழில் நிறுவனம்... சில்லறை வர்த்தகம்...
சிறு வியாபாரங்கள் ஆகியவை முதன்மைத் துறைகளாக கருதப்பட்டன.
அன்று...
வங்கிகள் முதன்மைத் துறைகளுக்கு
40 சத கடன் வழங்குவது
அரசால் அவசியமாக்கப்பட்டது.
அன்று...
பொது நிதி... சேமிப்பு...வரி விதிப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி வரவு செலவு கணக்கு தயார் செய்யப்பட்டது.
அன்று...
சேமிப்பை பெருக்க வேண்டும்...
இருப்பு நிலையைப் பாதுகாக்க வேண்டும் என்பது
அரசின் நோக்கமாகக் கருதப்பட்டது.
ஆனால் இன்று.... எல்லாமே தலைகீழ்...
அரசே தன் துறைகளை அழித்திடும்
அநியாயம்...
சேமிப்பு பொருளாதாரம்
தேவையில்லை...
செலவு பொருளாதாரமே தேவையென..
அரசே முழக்கமிடும் அவலம்...
சின்னஞ்சிறு செல்லையாக்களின்
வளர்ச்சிக்காக
உருவாக்கப்பட்ட பொதுத்துறைகள்...
முதலை மல்லையாக்களின் முன்பு
மண்டியிட்டு....
கோடிகளைக் கொட்டிக்கொடுத்த
கொடுமை...
இப்படி இந்திய தேசத்தில்....
சோதனைகள் எத்தனை வந்தாலும்...
எதிர்த்து நின்று உறுதியுடன்
களம் கண்டு
பொதுத்துறை வங்கிகளைக்
காத்து நிற்கும்...
வங்கி ஊழியர் சங்கத்தைப்
பாராட்டுவோம்...
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட
50வது பொன்விழா சிறக்க
வாழ்த்துகின்றோம்...
No comments:
Post a Comment