Saturday, 13 April 2019


அன்று சிந்திய ரத்தம்… 

இந்திய விடுதலை…
கண்ணீரால் பிறந்ததில்லை…
செந்நீரால் விளைந்தது…

1919 ஏப்ரல்13…
ஜாலியன் வாலாபாக்கில்…
வாய்ப்பூட்டு சட்டமாம்…
ரெளலட் சட்டத்தை எதிர்த்து…
இந்துக்கள்… சீக்கியர்கள்…
முஸ்லிம்கள்… கிறிஸ்துவர்கள்…
ஒன்று சேர்ந்து சிந்திய இரத்தத்தில்…
தோய்த்துச் சிவந்தது… பொற்கோவில் நகரம்…
துயரத்தில் சினந்தது இந்திய தேசம்…

நாமார்க்கும் குடியல்லோம்…
நாம் இந்தியாவிற்கு மட்டுமே குடியாவோம் என
கொதித்து எழுந்தனர் இந்திய மக்கள்…
வீணர்கள் தந்த விருதுகளை வீசி எறிந்தனர்…
கவிஞர் தாகூரும்… அண்ணல் காந்தியும்…

100 ஆண்டுகள் ஓடிவிட்டன…
நம்மைக் கொன்று குவித்த டயர்களும்…
நம் குரல்வளை நெறித்த ரெளலட்களும்…
இன்று செங்கோட்டை சிம்மாசனத்தில்…
காட்டிக்கொடுத்தவர்கள் கையிலே அசோகசக்கரம்…
காந்தியைக்கொன்றவர்கள் கையிலே செங்கோல்…

அன்று ஒன்று சேர்ந்து ரத்தம் சிந்தினோம்…
தாய் நாட்டுக்காக… தேச விடுதலைக்காக…
இன்று ஒருவருக்கு ஒருவர் ரத்தம் சிந்துகிறோம்
பாழும் மதத்திற்காக… பாவிகளின் லாபத்திற்காக….

அன்று சிந்திய ரத்தம் போதாதா?
இன்னும் நாம் சிந்த வேண்டுமா?
நமக்கு சிந்தனை வேண்டாமா?

ஏப்ரல் 13 நினைவு கொள்வோம்….
ஏப்ரல் 18ஐ நினைவு கொள்வோம்…
ஏற்றமிகு மாற்றம் பிறக்க…
ஏப்ரல் 18ல் உறுதி கொள்வோம்…

Wednesday, 10 April 2019


ஆ ர் ப் பா ட் ட ம்
மத்திய அரசு மற்றும் 
DOTயின்... ஊழியர் விரோத..
விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்து…

அனைத்துக் கிளைகளிலும்
12/04/2019 அன்று நாடு தழுவிய
BSNL அனைத்து சங்க
ஆர்ப்பாட்டம்
12/04/2019 – வெள்ளிக்கிழமை - மாலை 05 மணி
------------------------------------------------------------------------
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.

தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

தொலைபேசி நிலையம் – பரமக்குடி

தொலைபேசி நிலையம் – சிவகங்கை
------------------------------------------------------------------------
தோழர்களே அணி திரள்வீர்…

Monday, 8 April 2019


செ ய் தி க ள்
 01/04/2019 முதல் IDA 2.6 சதம் உயர்ந்து 141.4 சதத்தை எட்டியுள்ளது. இதற்கான DPE உத்திரவு 02/04/2019 அன்று வெளியாகியுள்ளது. 
IDA மட்டுமே BSNL ஊழியர்களின் இன்றைய ஒரே ஆறுதல்.
---------------------------------------------------------------------------------- 
அருமைத்தோழர் குப்தா அவர்களின் பிறந்ததின விழா சென்னையில் உள்ள 08/04/2019 அன்று தமிழக தலைமைப்பொதுமேலாளர் 
அலுவலக வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இன்றைய சூழலில் தோழர் குப்தாவின் 
பணியும்.. பாணியும்.. பாதுகையும் அவசியமே...
-----------------------------------------------------------------------------
18/04/2019 வியாழன்று தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழக BSNL நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் ஏகப்பட்ட விடுமுறைகள்.
 ----------------------------------------------------------------------------------
ஆறு மாதங்களுக்கு மேலாக எந்த வித முன்னறிவிப்பும் இன்றி பணிக்கு வராமல் பாழாய்ப்போய்க் கொண்டிருக்கும் ஊழியர்கள் மேல் 15/04/2019க்குள் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டெல்லித் தலைமையகம் உத்திரவிட்டுள்ளது.
ஊருக்கு நாலு பேர் இந்த ரகத்தில் உண்டு.
 ----------------------------------------------------------------------------------
மக்கள் சொத்தாம் BSNL நிறுவனத்தை அழித்தொழிக்க நினைக்கும் மத்திய அரசின் பொதுத்துறை விரோதப்போக்கைக் கண்டித்து AITUC மத்திய சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. AITUC அறிக்கைகளோடு நின்றுவிடாமல் ஆவண செய்திட வேண்டும்.
 ----------------------------------------------------------------------------------
BSNL நிறுவனத்தில் விருப்ப ஓய்வுத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பல்வேறு பத்திரிக்கைச் செய்திகள் வெளியாகியுள்ளன. BSNL நிறுவனத்தின் நிதி நெருக்கடிக்கு மிகையான ஊழியர் எண்ணிக்கையே காரணமென செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. தொடர்ந்து பிரச்சாரம் செய்தால் பொய்மையும் உண்மையாகும்.
 ----------------------------------------------------------------------------------
BSNLEU சங்கம் தனியாக நாடுமுழுக்க 13/04/2019 முதல் 30/04/2019 வரை “SAVE BSNL SAVE NATION”  என்ற பிரச்சாரப் பரப்புரை செய்ய முடிவெடுத்துள்ளது. AUAB கூட்டமைப்பிடம் ஆதரவு கேட்டுள்ளது. ஒன்றுபட்ட கச்சேரியில் தனி ஆவர்த்தனங்கள்.

Thursday, 4 April 2019


உத்தமர் புகழ் போற்றுவோம்..
N F T E
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
காரைக்குடி கிளை
--------------------------------------------------------------------------
ஓய்வூதியம் காத்த உத்தமர்…
தோழர். ஓ.பி.குப்தா
புகழஞ்சலிக் கூட்டம்..
மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா
 --------------------------------------------------------------------------
09/04/2019 – செவ்வாய்க்கிழமை – மாலை 05 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
 ----------------------------------------------------------------------------
தலைமை : தோழர்.லால்பகதூர் 
NFTE மாவட்டத்தலைவர்
 -------------------------------------------------------------------------
பணி நிறைவு பாராட்டுப்பெறுவோர்
தோழியர் J.சண்முகவள்ளி TT
தோழர். S.சீனிவாசன் TT
 --------------------------------------------------------------------
பங்கேற்பு : தோழர்கள்
ந.நாகேஸ்வரன் - AIBSNLPWA மாவட்டச்செயலர்
வெ.மாரி  - NFTE மாவட்டச்செயலர்
பா.முருகன் - NFTCW மாவட்டச்செயலர் 
   பெ.முருகன் - AIBSNLPWA மாவட்டத்தலைவர்
சி.முருகன் - NFTCW மாவட்டத்தலைவர்
  --------------------------------------------------------------------
சிறப்புரை : தோழர்கள்
அறந்தை சேதுபதி
NFTE மாநில உதவித்தலைவர்


மதுரை சுபேதார் அலிகான்
NFTE மாநில அமைப்புச்செயலர்
 ---------------------------------------------------------------------------------------
தோழர்களே… வாரீர்…
அன்புடன் அழைக்கும்….
அ.சேக்காதர் பாட்சா - கிளைத்தலைவர்
மா.ஆரோக்கியதாஸ் - கிளைச்செயலர்

ஓய்வூதிய மேலாண்மைத்திட்டம்
C P M S 
COMPREHENSIVE PENSION MANAGEMENT SYSTEM

2019 பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்ற தோழர்கள்
தங்களது பிப்ரவரி மாதக் கடைசிச் சம்பளத்தை
மார்ச் 15 அன்றுதான் பெறக்கூடிய அவலம் அரங்கேறியது….
ஆனால் பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்ற அதே தோழர்கள்
தங்களது மார்ச் மாத ஓய்வூதியத்தை
ஏப்ரல் 2 அன்றே பெற்றுவிட்டார்கள் என்பது
மிகவும் மகிழ்வுக்குரிய செய்தியாகும்.

ஓய்வூதியர்களுக்கான DOTயின் புதிய திட்டமான SAMPANN
29/12/2018 அன்று பாரதப்பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டது.
2019 பிப்ரவரி மாதம் ஓய்வுபெற்றவர்களுக்கு அது அமுலாகியுள்ளது.
இத்திட்டத்தில் BSNL ஓய்வூதியர்களுக்கு
நேரடியாக DOT ஓய்வூதியத்தைப் பட்டுவாடா செய்கிறது.
ஓய்வூதியர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.
அவர்களுக்கு USER ID என்னும் உபயோகிப்பாளர்
 அடையாள அனுமதி வழங்கப்படுகின்றது.


PENSION PAYMENT ORDER என்னும்
ஓய்வூதிய உத்திரவுப் புத்தகம் பெற வங்கிகளில்
ஓய்வூதியர்கள் காத்திருக்க அவசியமில்லை.
 படிப்படியாக இத்திட்டம் அனைத்து 
ஓய்வூதியர்களுக்கும் அமுல்படுத்தப்படும்.

ஆனால் அஞ்சல்துறை மூலம் ஓய்வூதியம் பெற
விரும்பும் தோழர்களுக்கு இத்திட்டத்தில் சிக்கல் நீடிக்கின்றது.
எனவே ஓய்வு பெறும் தோழர்கள் தங்களது ஓய்வூதியக் கணக்கை
ஏதேனும் பொதுத்துறை வங்கிகளில் துவக்குமாறு
DOT அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒப்பந்த ஊழியர்களாகட்டும்… நிரந்தர ஊழியர்களாகட்டும்
இப்போதெல்லாம் ஊதியம் எப்போது வரும்
என்று எதிர்பார்க்கும் காலமாகிவிட்டது.

ஆனால் ஓய்வூதியர்கள் தங்களது ஓய்வூதியத்தை
ஒருநாள் கூட தாமதமின்றி உடனடியாகப் பெறும் நிலை
உருவானது கண்டு நாம் பெருமை கொள்வோம்…

புதிய திட்டத்தில் உள்ள குறைகளைக் களைந்து
இத்திட்டத்தை மேலும் செழுமைப்படுத்த
ஓய்வூதியர் அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன…

சஞ்சார் பவன் பேரணி

இன்று 05/04/2019 – வெள்ளிக்கிழமை  
காலை 11.30 மணியளவில்
தலைநகர் டெல்லியில்
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில்…

மத்திய அரசின்…. DOT இலாக்காவின்…
BSNL ஒழிப்புத்திட்டத்தை தடுத்து நிறுத்திட…

BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின்
 மறுக்கப்படும் உரிமைகளை வென்றிட…

சஞ்சார் பவன் நோக்கி
மாபெரும் பேரணி….

அனைத்து மாநிலங்களிலும் இருந்து 
தலைவர்கள் பங்கேற்பு….

பேரணி வெற்றி பெறட்டும்….
BSNL நிலை பெறட்டும்….
ஊழியர்கள் உரிமை பெறட்டும்…

Monday, 1 April 2019


துயர் துடைப்பீர்.. தோள் கொடுப்பீர்…

நிரந்தர TM ஊழியர்களே இல்லாத 
தொண்டி தொலைபேசி நிலையத்தில் ஒப்பந்த ஊழியராய் 
ஒப்பற்ற பணி செய்தவர் தோழர்.மணிகண்டன்.
ஊதியம் குறைவு… உழைப்பு அதிகம்…
ஆற்றல் அதிகம்… அர்ப்பணிப்பு அதிகம்…
அத்தகைய மணிகண்டன் 16/03/2019 அன்று
சாலைவிபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மூன்று சிறுபிள்ளைகளோடு இளம்வயதில்
தன் மனைவியைத் தவிக்க விட்டுச் சென்றுள்ளார்.

 நமது BSNLலில் அதிகம் சுரண்டப்படும் வர்க்கம் ஒப்பந்த ஊழியர்களே.
உழைக்கும் போதும்  அவர்கள் சுரண்டப்படுகின்றார்கள்.
உயிர் நீக்கும்போதும் சுரண்டப்படுகின்றார்கள்.  
எதிர்பாராத விதமாக ஒப்பந்த ஊழியர்கள் எவரேனும் உயிர் நீத்தால்
அவரது குடும்பம் நிர்க்கதியாக நிற்கும் சூழலே நிலவுகிறது.
தொடர்ந்த தொழிற்சங்க அழுத்தத்தால் தற்போது அவர்களது
உரிமையான EPF மற்றும் ESI பிடித்தங்களை முறைப்படுத்தியுள்ளோம்.
சட்டரீதியாக கிடைக்கவேண்டிய நிவாரணங்கள் கிடைப்பதற்கு
உரிய நடவடிக்கை விரைந்து எடுப்பதாக ஒப்பந்தக்காரர் உறுதி அளித்துள்ளார். ஆனாலும் உயிரிழந்த தோழர் மணிகண்டன் 
குடும்பம் படும் துன்பம் சொல்லி மாளாது.

எனவே உயிரிழந்த தோழர் மணிகண்டன் குடும்பத்தின்
கண்ணீர்  துடைக்கும் கடமை நம்மைச்சார்ந்தது.
தோழர் ராஜ்குமார் SDE உடனடி நிவாரணம் அளித்து
நிவாரண நிதிப் பங்களிப்பைத் துவக்கி வைத்துள்ளார்.
அவரையொட்டி காரைக்குடிப் பகுதி தோழர்கள்
தங்களது பங்களிப்பைச் செய்துள்ளார்கள்.
இராமநாதபுரம், பரமக்குடி மற்றும் சிவகங்கைப்பகுதி 
தோழர்களும் தங்களது பங்களிப்பை செய்து
தோழர் மணிகண்டன் குடும்பத்திற்கு
நிவாரணம் அளித்திட அன்புடன் வேண்டுகின்றோம்.

NFTE கிளைச்செயலர்களும் NFTCW கிளைச்செயலர்களும்
கூடுதல் கவனம் செலுத்திட வேண்டுகின்றோம்.
------------------------------------------------------------------------------------------
தொடர்புக்கு : தோழர். லால்பகதூர் -  94434 97050