செ ய் தி க ள்
IDA மட்டுமே BSNL ஊழியர்களின் இன்றைய ஒரே ஆறுதல்.
அருமைத்தோழர் குப்தா
அவர்களின் பிறந்ததின விழா சென்னையில் உள்ள 08/04/2019 அன்று தமிழக தலைமைப்பொதுமேலாளர்
அலுவலக வளாகத்தில்
சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இன்றைய சூழலில்
தோழர் குப்தாவின்
பணியும்.. பாணியும்.. பாதுகையும் அவசியமே...
18/04/2019 வியாழன்று
தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழக BSNL நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் ஏகப்பட்ட விடுமுறைகள்.
ஆறு மாதங்களுக்கு
மேலாக எந்த வித முன்னறிவிப்பும் இன்றி பணிக்கு வராமல் பாழாய்ப்போய்க் கொண்டிருக்கும்
ஊழியர்கள் மேல் 15/04/2019க்குள் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என டெல்லித்
தலைமையகம் உத்திரவிட்டுள்ளது.
ஊருக்கு நாலு பேர் இந்த ரகத்தில் உண்டு.
மக்கள் சொத்தாம்
BSNL நிறுவனத்தை அழித்தொழிக்க நினைக்கும் மத்திய அரசின் பொதுத்துறை விரோதப்போக்கைக்
கண்டித்து AITUC மத்திய சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. AITUC அறிக்கைகளோடு நின்றுவிடாமல்
ஆவண செய்திட வேண்டும்.
BSNL நிறுவனத்தில்
விருப்ப ஓய்வுத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பல்வேறு பத்திரிக்கைச் செய்திகள் வெளியாகியுள்ளன.
BSNL நிறுவனத்தின் நிதி நெருக்கடிக்கு மிகையான ஊழியர் எண்ணிக்கையே காரணமென செய்திகள்
திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. தொடர்ந்து பிரச்சாரம் செய்தால் பொய்மையும் உண்மையாகும்.
BSNLEU சங்கம் தனியாக நாடுமுழுக்க 13/04/2019 முதல் 30/04/2019 வரை “SAVE BSNL SAVE NATION” என்ற பிரச்சாரப் பரப்புரை செய்ய முடிவெடுத்துள்ளது. AUAB கூட்டமைப்பிடம் ஆதரவு கேட்டுள்ளது. ஒன்றுபட்ட கச்சேரியில் தனி ஆவர்த்தனங்கள்.
No comments:
Post a Comment