Wednesday, 5 July 2017

செ ய் தி க ள்

IDA உயர்வு
01/07/2017 முதல் IDA 1.9 சதம் உயர்ந்துள்ளது. மொத்த IDA 119 சதமாகும். இதற்கான DPE உத்திரவு 04/07/2017 அன்று வெளியிடப்பட்டுள்ளது. BSNL உத்திரவு விரைவில் வெளியாகும்.
------------------------------------------------------------------------------------------
கூட்டு ஆலோசனைக்குழு கூட்டங்கள்

 JCM கூட்டு ஆலோசனைக்குழு கூட்டங்களை குறித்த கால இடைவெளியில் நடத்திட வேண்டும் என CORPORATE  அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. அகில இந்திய JCM மற்றும் மாநில JCM மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும்…  மாவட்ட JCM இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் கூட்டப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆண்டு செயல்பாட்டை நிர்ணயிப்பதில் JCM கூட்டங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.  காரைக்குடி மாவட்டத்தில் NFTE, BSNLEU சங்கங்கள் வெகுநாட்களுக்கு முன்பே தங்களது JCM உறுப்பினர் பட்டியலை நிர்வாகத்திடம் அளித்திருந்தும் இன்னும் கூட்டம் கூட்டப்படவில்லை.
 -----------------------------------------------------------------------------------------
JTO இலாக்காத்தேர்வு
   11/12/2016 அன்று நடைபெற்ற JTO இலாக்காத்தேர்வு முடிவுகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன. பொதுப்பிரிவில் 126 தோழர்களும், SC பிரிவில் 26 தோழர்களும் ST பிரிவில் ஒரு தோழரும் பதவி உயர்வு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி மாவட்டத்தில் இரண்டு தோழர்கள் தேர்வு பெற்றுள்ளனர். மாநில நிர்வாகத்திற்கு நமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம். மேற்கண்ட தேர்வில் தகுதி பெற்று காலியிடங்கள் இல்லாத காரணத்தால் இன்னும் பல தோழர்கள் OC பிரிவில் காத்திருக்கின்றனர். அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே தோழர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 ----------------------------------------------------------------------------------------
TSM மற்றும் CASUAL ஊழியர்கள்

01/10/2000க்குப்பின் TSM மற்றும் CASUAL ஊழியர்களாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற... மரணமுற்ற... இலாக்காவை விட்டுச்சென்று விட்ட... ஊழியர்களின் விவரங்கள் மாநில மட்டங்களில் கேட்கப்பட்டிருந்தது. இன்னும் பல மாநிலங்களில் இருந்து விவரங்கள் வராததால் மீண்டும் அந்த விவரங்களை உடனடியாக அளிக்குமாறு CORPORATE அலுவலகம் மாநில நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளது.
------------------------------------------------------------------------------------------
போராட்டத்திற்கு ஆதரவு
நடந்து முடிந்த நமது உண்ணாவிரதப்போராட்டத்திற்கு BSNLEU சங்கம் நாடெங்கும் ஆதரவு அளித்துள்ள நிலையில்… BSNLEU தலைமையில் 13/07/2017 அன்று நடக்கவிருக்கும் ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு நமது ஆதரவை பெருவாரியாக நல்கிட வேண்டும் என மத்திய சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 ----------------------------------------------------------------------------------------
ஊதிய மாற்றமும்… BSNL  முயற்சிகளும்…
3வது ஊதியமாற்றம் உடனடியாக வரவேண்டும் என உரிமைக்குரல்கள் எழுந்து விட்ட நிலையில் BSNL நிர்வாகம் ஊழியர்களுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறது. இது பற்றி பல்வேறு விளக்கங்களை DOTக்கு எழுதியுள்ளது. அதன் தொடர்ச்சியாக 23/06/2017 அன்று DOT செயலருக்கு ஊதிய மாற்றம் சம்பந்தமாக மேலும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அனைத்து புள்ளி விவரங்களும் தயார் செய்யப்பட்டு விரைவில் DOT செயலருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.
 ----------------------------------------------------------------------------------------
JAO ஆளெடுப்பு விதிகளில் திருத்தம்
 JAO ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நமது சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதனடிப்படையில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு BSNL நிர்வாகக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
காலவரையற்ற வேலை நிறுத்தம்..
 3வது ஊதிய மாற்றத்தை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என NFTE தலைமையிலான கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அரசாங்கத்தின் அசைவு மற்றும் இசைவைப்பொறுத்து நமது அடுத்த கட்ட நடவடிக்கை அமையும் 
என மத்திய சங்கம் அறிவித்துள்ளது. 

Tuesday, 4 July 2017

உணர்வுமிகு உண்ணாவிரதப்போராட்டம்

ஜூலை 3 மற்றும் 4 தேதிகளில் தேசம் முழுவதும் 
NFTE தலைமையில் 3வது ஊதியக்குழு அமைத்திடக்கோரி 
இரண்டு நாள் உண்ணாவிரதப்போராட்டம் உணர்வுடனும், உற்சாகத்துடனும் நடந்து முடிந்துள்ளது. 

காரைக்குயில் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் 
இருநாட்களும் உற்சாகமாக போராட்டம் நடைபெற்றது. 
ஓய்வுபெற்ற ஊழியர்களும், ஒப்பந்த ஊழியர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன் அவர்களும், மாவட்டத்தலைவர் தோழர்.மகாலிங்கம் அவர்களும் இருநாட்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். உண்ணாவிரதப்பந்தலுக்கு நேரில் சென்று தங்கள் ஆதரவை வெளிப்படுத்த வேண்டும் என BSNLEU சங்கம் தங்கள் சங்கத்தோழர்களைப் பணித்திருந்தது. அதனடிப்படையில் நாடு முழுவதும் BSNLEU சங்கம் போராட்டத்திற்கு தனது ஆதரவுக்கரம் நீட்டிய நிகழ்வு பெரிதும் பாராட்டுக்குரியது.

AIBSNLPWA ஓய்வூதியர்கள் சங்கத்தோழர்கள் 
மாநில உதவிச்செயலர் தோழர்.நாகேஸ்வரன், 
மாவட்டத்தலைவர் தோழர்.ஜெயச்சந்திரன், 
மாவட்டச்செயலர் தோழர்.முருகன், 
மாவட்டப்பொருளர் தோழர்.பூபதி
ஆகியோர் தலைமையில் முழுமையாக இருநாட்களும் 
பங்கு கொண்டு போராட்டத்தைச் சிறப்பித்தனர்.

NFTCL ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தோழர்கள்
மாவட்டத்தலைவர்.தோழர்.முருகன்...
மாவட்டச்செயலர் தோழர்.முருகன்...
மாவட்டப்பொருளர் தோழர்.வீரசேகர்..
மாநில உதவிச்செயலர் தோழர்.மாரிமுத்து ஆகியோர் தலைமையில் உணர்வோடு பங்கெடுத்து தங்கள் ஆதரவை நல்கினர்.

AIBSNLEA சங்கத்தின் மாவட்டச்செயலர் தோழர்.மோகன்தாஸ் அவர்களும், சங்கத்தோழர்களும் இருநாட்களும்
வாழ்த்துரை வழங்கி போராட்டத்திற்கு வலு சேர்த்தனர். 
AIBSNLEA சங்கத்தின் மாநில உதவிச்செயலர் தோழர்.காமராஜ் எழுச்சிமிகு உரையாற்றி உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.

NFTE மாநிலச்சங்கத்தின் சார்பில்.. 
மாநில உதவித்தலைவர் தோழியர்.பரிமளம் அவர்களும், 
மாநில உதவிச்செயலர் தோழர்.முருகேசன் அவர்களும் கலந்துகொண்டு கருத்தாழமிக்க உரைவீச்சு தந்தனர்.

AITUC சங்கத்தின் மாநில துணைப்பொதுச்செயலர் தோழர்.பழ.இராமச்சந்திரன், 
AITUC போக்குவரத்து ஊழியர் சங்கப் பொதுச்செயலர் தோழர்.மணவழகன் ஆகியோர்
அற்புதமான அரசியல் உரை நிகழ்த்தினர்.

BSNLEU சங்கத்தின் முன்னாள் விருதுநகர் மாவட்டச்செயலர் தோழர்.அய்யாச்சாமி அவர்கள் கலந்து கொண்டு 
வாழ்த்துரை வழங்கியது கூடுதல் சிறப்பாகும்.

காரைக்குடியில்  போராட்டத்தில் கலந்து கொண்டு
இரு நாட்களும் நமது கோரிக்கைகள் மட்டுமின்றி
தேசத்தை நாசம் செய்யும் காவிகளின் காலித்தனத்தை 
தோலுரித்து.. வரிக்கு வரி வரிக்கொடுமையை கண்டித்து…
செவிக்கும் சிந்தைக்கும் உணவும் உணர்வும் தந்த தலைவர்களுக்கும்… அனைத்து தோழர்களுக்கும்..
நமது வாழ்த்துக்களும், நன்றிகளும் உரித்தாகுக.

Sunday, 2 July 2017

பட்டினிப்போராட்டம் 

NFTE – NFTCL – AIBSNLPWA
காரைக்குடித் தொலைத்தொடர்பு மாவட்டம்

ஊதியக்குழு அமைத்திடக்கோரி…
NFTE கூட்டணி சங்கங்களின் சார்பாக
தொடர் உண்ணாவிரதம்
03/07/2017 – திங்கள் – காலை 10 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

தலைமை
தோழர்.லால் பகதூர் - NFTE மாவட்டத்தலைவர்
தோழர்.முருகன் - NFTCL மாவட்டத்தலைவர்

துவக்கவுரை
தோழர்.நாகேஸ்வரன் 
AIBSNLPWA  மாநில உதவிச்செயலர்

விளக்கவுரை 
தோழர்.மாரி - NFTE மாவட்டச்செயலர்

வாழ்த்துரை
தோழர்.மோகன்தாஸ் - AIBSNLEA மாவட்டச்செயலர்
தோழர்.முருகன் – AIBSNLPWA மாவட்டச்செயலர்
தோழர்.முருகன் – NFTCL மாவட்டச்செயலர்
தோழர்.பூபதி – AIBSNLPWA  மாவட்டப்பொருளர்
தோழர்.மாரிமுத்து – NFTCL மாநில உதவிச்செயலர்

சிறப்புரை
தோழியர். பரிமளம் 
NFTE மாநில உதவித்தலைவர்

 தோழர்.பழ.இராமச்சந்திரன் 
AITUC மாநில உள்ளாட்சி துணைப்பொதுச்செயலர்

04/07/2017 – செவ்வாய்க்கிழமை

வாழ்த்துரை
தோழர்.ஜெயச்சந்திரன் – AIBSNLPWA மாவட்டத்தலைவர்
தோழர்.தமிழ்மாறன் – NFTE மாவட்ட உதவிச்செயலர்
தோழர்.பாலமுருகன் – NFTE மாவட்டப்பொருளர்
தோழர்.வீரசேகர் – NFTCL மாவட்டப்பொருளர்
தோழர்.சுந்தரராஜன் - AIBSNLPWA கிளைச்செயலர்

மற்றும் முன்னணித்தோழர்கள்

சிறப்புரை
தோழர்.முருகேசன்
NFTE மாநில உதவிச்செயலர்

 நிறைவுரை
தோழர்.காமராஜ் 
AIBSNLEA மாநில உதவிச்செயலர்

பத்து நாளைக்கொரு முறை
பலப்பல வரிகள்  உயரும் தேசமிது…
பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை…
உழைக்கும் ஊழியர்களின்…
வருமானம் உயர வேண்டாமா?
வரிகள் வளருது…
வருமானம் மட்டும் தளருது…
இந்நிலை மாற்றிட….
எழுந்திடுவீர்… தோழர்களே…. 
தொடர் உண்ணாவிரதம்…

BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்
சங்கங்களின்  தேசிய கூட்டமைப்பு

ஊதியக்குழு அமைத்திடக்கோரி…
ஜூலை 3 & 4 
நாடு தழுவிய 
தொடர் உண்ணாவிரதம்…

பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி.
தோழர்களே பங்கு கொள்வீர்…

Thursday, 29 June 2017

தீர்வை நோக்கி… திறனுக்கேற்ற கூலி…
DY. CLC  திரு.சீனிவாஸ் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை 
ஒப்பந்த ஊழியர்கள் திறன் அடிப்படையில் பிரிக்கப்பட்டு
அவரவர்கள் செய்யும் பணிக்கேற்ற கூலி வழங்கப்பட வேண்டும் என NFTCL தொடுத்த வழக்கின் விசாரணை 
29/06/2017 அன்று சென்னையில்...
துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையர் முன்பு நடைபெற்றது. 

தமிழகத்தில் குடந்தை மற்றும் தஞ்சாவூர் தவிர
ஏனைய மாவட்டங்களில் இருந்து உண்மையான தகவல் 
மாநில நிர்வாகத்திற்கு அனுப்பப்படவில்லை. 

சென்னைத்தொலைபேசியில் 2 கோட்டங்களில் 
இருந்துதான் விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இப்பிரச்சினை உரிய முறையில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் மேலும் காலதாமதம் செய்வது முறையானது அல்ல என்றும் DY.CLC உறுதியாக BSNL அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

பல்வேறு விவாதங்களுக்குப்பின்…

ஒப்பந்த ஊழியர்களை அவரவர்கள் செய்யும் பணிக்கேற்ப
திறன் அடிப்படையில் பிரித்து உரிய கூலி வழங்குவதற்கு 
ஒரு குழு அமைக்கப்படும் எனவும்... 
அந்தக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்..
பணிகள் தரம் பிரிக்கப்படும் எனவும்…
பணிக்கேற்ற கூலி வழங்கப்படும் எனவும்...
இவை யாவும் விரைவில் செய்து முடிக்கப்படும் எனவும்... 
தமிழ்மாநில நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

அதிக கால அவகாசம் தர இயலாது எனவும்...
மேற்கண்ட பணி விரைவில் முடிக்கப்பட வேண்டும் எனவும்… 
அவசியமெனில் தமிழகம் மற்றும் சென்னை முதன்மைப் பொதுமேலாளர்களுக்குத் தாம் இதுபற்றி நேரில் வலியுறுத்த 
தயாராக இருப்பதாகவும் DY.CLC தெரிவித்தார். 

அடுத்த கூட்டம் 26/07/2017 அன்று நடைபெறும் எனவும்...
அதில் இப்பிரச்சினை இறுதி செய்யப்படவேண்டும் எனவும்...
DY.CLC முடிவாக அறிவித்தார்... சென்னைத்தொலைபேசியிலும் இதே நடைமுறை பின்பற்றப்படவேண்டும் எனவும் வழிகாட்டப்பட்டது. 

  • சென்னைத்தொலைபேசியில் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும்… 
  • அனைத்துப்பணிகளும் ஒப்பந்த முறை TENDER மூலமே செயல்படுத்தப்படவேண்டும்… 
  • QUOTATION மூலம் பணிகள் செய்வது நிறுத்தப்படவேண்டும்…
  • மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்சக்கூலி அமுல்படுத்தப்பட வேண்டும்..
என நமது சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. சென்னை மாநில நிர்வாகத்திற்கு உரிய முறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

ஒப்பந்த ஊழியர்களுக்கு திறன் அடிப்படையில் கூலி வழங்கும் பிரச்சினை  ஜூலை 26க்குள் சாதகமாக முடிக்கப்படும் என்று நம்புகிறோம். அதற்கான சூழலை உருவாக்கிய அதிகாரிகளுக்கும்... DY.CLCக்கும் நமது நன்றிகள்.

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டவர்கள்
NFTCL
தோழர்.ஆனந்தன் – மாநிலச்செயலர்
தோழர்.பாபு – மாநிலத்தலைவர்
தோழர்.மாரி – மாநில செயல்தலைவர்
தோழர்.சம்பத் – மாநிலப் பொருளர்

TNTCW
தோழர்.முருகையா
தோழர்.பழனிச்சாமி
தோழர்.வினோத்

தமிழ் மாநில நிர்வாகம்
திரு.இராஜசேகரன் AGM

சென்னைத்தொலைபேசி
திரு.கருப்பையா DGM
திருமதி.சங்கரி AGM

பிரச்சினை தீர்வில் மனித நேயத்துடன் 
உரிய முறையில் பங்காற்றிய

திரு.இராஜசேகரன் AGM மற்றும் 
திரு.கருப்பையா DGM ஆகியோருக்கும் 
DY.CLC அவர்களுக்கும்   நமது நன்றிகள்….
மதுரை மாவட்ட மாநாடு

ஜூலை 8 
கூடல் மாநகரில் நடைபெறும்
மதுரை NFTE மாவட்ட சங்க 
7வது மாவட்ட மாநாடு
வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.
பணிநிறைவு வாழ்த்துக்கள்

இன்று 30/06/2017 காரைக்குடி 
மாவட்டத்தில் பணிநிறைவு பெறும்
அன்றைய கம்பித்துணைவன்…. 
இன்றைய இளநிலைப் பொறியாளர்
தோழர்.R.வரதராஜன் 
JE கீழக்கரை

அன்றைய கூலித்தொழிலாளி…. 
இன்றையப் பொறிச்செம்மையர்…
தோழர்.M.ஈஸ்வரன்
TT இராமேஸ்வரம்

அன்றைய JE…. இன்றைய SDE…
தோழர்.M.வெங்கடேஸ்வரன் 
SDE சிவகங்கை


ஆகியோரின் பணிநிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்.