Tuesday, 18 September 2018


செப்டம்பர் 19 – தியாகிகள் தினம் 

64000 ஊழியர்களுக்கு வேலைநீக்க கடிதம்…
12000 ஊழியர்களுக்கு சிறைவாசம்…
8000 ஊழியர்கள் மேல் வழக்கு…
7000 ஊழியர்கள் தற்காலிகப் பணி நீக்கம்
4000 ஊழியர்கள் கட்டாய வேலைநீக்கம்..
17 ஊழியர்கள் துப்பாக்கி சூட்டில் மரணம்…

இது நடந்தது…
ஆங்கிலேய ஆட்சியில் அல்ல…
அருமை இந்திய ஆட்சியில்….
 ------------------------------------------------------------------------------------------------
1968 செப்டம்பர் 19
மத்திய அரசு ஊழியர்களின்
வரலாற்றுச் சிலிர்ப்பு மிக்கப் போராட்டம்…
  ------------------------------------------------------------------------------------------------
அன்று…
மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கை இதுதான்…

குறைந்த பட்ச ஊதியம்…
விலைவாசியை ஈடுகட்டுதல்…
வேலைநீக்கத்தை கைவிடுதல்…
ஒப்பந்த முறையை ஒழித்தல்….
விலைவாசிப்படியை அடிப்படைச்சம்பளத்துடன் இணைத்தல்..
பழிவாங்கப்பட்ட ஊழியர் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்தல்…
25 வருட சேவை முடித்தால் ஓய்வு என்ற நிலையைக் கைவிடுதல்…

மேற்கண்ட கோரிக்கைகளுக்காக
மத்திய அரசு ஊழியர்கள் நடத்திய வேலைநிறுத்தப்போரின்
50வது நிறைவு தினத்தை… நினைவு கூர்வோம்…

அவர்களது கோரிக்கைகள்
இன்றும்… தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கைகளாகவே
இருக்கும் கொடுமை மாற்றுவோம்….

Monday, 17 September 2018

நீதி கேட்டு நெடுங்குரல்… 


வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-
இங்கு…
வாழும் மனிதருக்கெல்லாம்…
என்றான் மகாகவி பாரதி….

வாழும் மனிதருக்கெல்லாம்
சோறிட வேண்டாம்…
உழைத்த மனிதனுக்கு..
உணவிட வேண்டாமா?

BSNL நிறுவனத்தில்…
ஆயிரக்கணக்கான
அன்றாடக்கூலிகள்
ஒப்பந்த ஊழியர்களாய்
உறிஞ்சப்படுகின்றார்கள்….

மாதக்கணக்கில் சம்பளப்பாக்கி…
ஆண்டுக்கணக்கில் போனஸ் பாக்கி…
ஆயுள் கணக்கில் வைப்புத்தொகை பாக்கி…

திடங்கொண்டவர்
மெலிந்தோரை இங்கு
தின்று பிழைத்திடலாமோ?
என்று கேள்வி கேட்டான் பாரதி…

அதிகாரிகளும் ஊழியர்களும்…
மாதம் முடிந்தால்…
மணியடித்துச் சம்பளம் பெறும்போது…
பாவப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள்….
வயிற்றில் நெருப்போடு…
கண்ணில் நீரோடு வாழ்வதா?

மெலிவு கண்டாலும் குழந்தை தன்னை
வீழ்த்தி மிதித்திடலாமோ?
என்று விசனப்பட்டான் பாரதி…

மெலிந்தவர்கள் என்பதால்…
நிர்வாகம் அவர்களை
வீழ்த்தி மிதிப்பதா?

நிதி என்பதைக் காரணம் காட்டி…
மெலிந்தோருக்கு
நீதி மறுக்கப்படலாமா?

அதிகாரத்தில் உள்ளவர்கள்…
ஈர நெஞ்சோடு
இதனை அணுக வேண்டாமா?...


சிறியாரை மேம்படச் செய்தால்
பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்…
என்று நிறைவாகப் பாடினான் பாரதி…

சிறியோரை… வறியோரை…
மெலிந்தோரை… நலிந்தோரை..
நம்மோடு வாழும் ஒப்பந்த ஊழியரை               
வாழச்செய்வோம்… மேம்படச்செய்வோம்…
 --------------------------------------------------------
இன்று 18/09/2018 செவ்வாய் - மாலை 04 மணிக்கு
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக
NFTE – BSNLEU இணைந்து... 
உறிஞ்சப்படும் ஒப்பந்த ஊழியருக்காக... 
நீதி கேட்டு நெடுங்குரல் முழக்கம்…

தோழர்களே… வாரீர்…

தேவை ஆயிரம் பெரியார்…

பெரியார் 140 - 17-09/2018
நறுக்கப்படும் நாக்குகள்…
பொசுக்கப்படும் காதல்கள்…
தெருவினில் பிஞ்சுமலர்கள்…
அரியணையில் ஆடம்பரங்கள்…
கோட்சே வீதியில் கோவில்கள்…
காந்தி வீதியில் கள்ளுக்கடைகள்…
சன்னிதானத்தில் அந்தப்புரங்கள்…
சமத்துவபுரத்தில் சாதிச்சண்டைகள்…
தேவை இன்னும் ஆயிரம் பெரியார்…

Saturday, 15 September 2018

மகாகவி பாரதி விழா

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம்
தேவகோட்டை
 ----------------------------------------------------------------------------------------
58ம் ஆண்டு
மகாகவி பாரதி விழா
  --------------------------------------------------------------------------------------
16/09/2018 – ஞாயிறு – காலை 10 மணி
இராம ஏகம்மை மண்டபம் – தேவகோட்டை
  பங்கேற்பு

தவத்திரு குன்றக்குடி அடிகளார்
முனைவர் கலைச்செல்வி
திருப்பூர் கிருஷ்ணன்

மற்றும் அறிஞர் பெருமக்கள்

தோழர்களே… வாரீர்…

Thursday, 13 September 2018


 தொடரட்டும்… வரலாறு...

இன்று 14/09/2018 டெல்லியில்  
ஊதியமாற்ற இருதரப்புக்குழுவின்
அடுத்த கட்டப்பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது.

சென்ற கூட்டத்தில்
தனது முந்தைய நிலையில் இருந்து
நிர்வாகம்  இறங்கி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நான்காம் பிரிவு ஊழியர்களின்
அடிப்படைச்சம்பளமான NE-1  ரூ.19000/=  எனவும்
கடைசிச் சம்பளமான NE-12 ரூ.39900/= எனவும்
நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.

மத்திய அரசில்
அடிப்படைச்சம்பளம் ரூ.7000/=லிருந்து
ரூ.18000/= என உயர்த்தப்பட்டுள்ளது.
அடிப்படைச்சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது.

BSNLலில் அடிப்படைச்சம்பளம் ரூ.7760/=லிருந்து
ரூ.19000/= என முன்மொழியப்பட்டுள்ளது.
இது 2.44 மடங்கு உயர்வாகும்.
நமது கோரிக்கையான 2.57 மடங்கு என்பது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும்..
இன்றுள்ள சூழலில் நிர்வாகம் 2.44 மடங்கு
உயர்விற்கு இசைவு தந்துள்ளது மிகப்பெரும் மாற்றமாகும்.

ஊழியர் தரப்பின் ஒன்றுபட்ட  
தொடர் போராட்டங்களும்… 
தொடர் முயற்சிகளுமே
இதற்கு காரணமாகும்.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி…
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு
என கவியரசு கண்ணதாசன் பாடினார்.
நாம் நமக்கும் கீழே தேடினால்
ஊதிய மாற்றங்களே நிகழாத பொதுத்துறைகளும்….
சொற்ப உயர்வு பெற்ற பொதுத்துறைகளும்…
ஏராளமாய்த் தென்படும்.
வங்கி ஊழியர்கள் கூட
தங்களது சொற்ப ஊதிய உயர்வை எதிர்த்துப்
போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்
என்பது வள்ளுவர் வாக்கு.

இன்றுள்ள அரசியல் சூழலில்….
வினை வலியை மாற்றிட…
வினை வழி செல்லாது…
அனைத்து வழிகளையும்
ஊழியர் தரப்பு வலிமையோடு
எதிர் கொண்டு வருகின்றது.


நிர்வாகம் முன்மொழிந்த
சம்பள விகிதத்தை அடைவது…

அதிகபட்ச ஊதிய உயர்வான…
15 சத ஊதிய உயர்வை அடைவது…

புதிய சம்பள விகிதத்தில்…
வீட்டுவாடகைப்படியைப் பெறுவது…

என்பதுவே… இன்றைய நிலையில்…
சாதாரண ஊழியர்களின் எதிர்பார்ப்பாகும்..

இதனை அடைய…
நாம் இன்னும் நீண்ட தூரம்
பயணிக்க வேண்டியுள்ளது…
அந்தப் பயணம்…
மிகப்பெரும் சவாலாக நமக்கு விளங்கும்…

ஆயினும் நமது உருக்குப் போன்ற ஒற்றுமை
சவால்களை வென்று காட்டும்
என உறுதியாக நம்புவோம்.

தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றியதும்…
சோதனைகளை சாதனைகளாக உயர்த்தியதும்….
நமது வரலாறு…
                     
பொதுத்துறைகளில் ஓய்வூதியம் என்ற
வரலாற்றைப் படைத்தவர்கள் நாம்…

அந்த வழியில்…
நட்டத்தில் நிறுவனம் இயங்கினாலும்…
BSNL ஊழியர்கள் ஊதிய மாற்றம் பெற்றார்கள்
என்ற புதிய வரலாறு
BSNLலில்.. நிச்சயம் படைக்கப்படும்…

Tuesday, 11 September 2018


நல்ல காலம் வந்ததே…

செப்டம்பர் 11
நினைவில் நீங்கா…
மகாகவி பாரதி நினைவு நாள்…
----------------------------------------------------------------------
எல்லோரும் ஒன்றென்னும்
காலம் வந்ததே…
பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற
காலம் வந்ததே…

இனி..
நல்லோர் பெரியரென்னும்
காலம் வந்ததே…
கெட்ட நயவஞ்சக்காரருக்கு
நாசம் வந்ததே…
-மகாகவி பாரதி-


Sunday, 9 September 2018


நிதி வழங்கு… நீதி வழங்கு...… 

 ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்திற்கு
உரிய நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி…

NFTE – BSNLEU இணைந்த
தமிழகம் தழுவிய
ஆர்ப்பாட்டம்
 10/09/2018 – திங்கள் 
  --------------------------------------------------------------------------
மதியம் 12.30 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
 --------------------------------------------------------------------------
மாலை 05 மணி
தொலைபேசி நிலையம்
பரமக்குடி – சிவகங்கை – இராமநாதபுரம்
  --------------------------------------------------------------------------
BSNL நிர்வாகமே…
ஒப்பந்த ஊழியர் சம்பளத்திற்கு…
உரிய நிதி வழங்கு…
உழைத்து விட்டு ஓய்ந்திருக்கும்…
ஒப்பந்த ஊழியருக்கு நீதி வழங்கு…
பிரதிமாதம் 7ம்தேதி…
சம்பளத்தை உறுதிப்படுத்து…
தொழிலாளர் நலச்சட்டங்களை
நடைமுறைப்படுத்து…. அமுல்படுத்து….

தோழர்களே… அணி திரள்வீர்..