Monday, 17 September 2018

நீதி கேட்டு நெடுங்குரல் 


வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-
இங்கு
வாழும் மனிதருக்கெல்லாம்
என்றான் மகாகவி பாரதி….

வாழும் மனிதருக்கெல்லாம்
சோறிட வேண்டாம்
உழைத்த மனிதனுக்கு..
உணவிட வேண்டாமா?

BSNL நிறுவனத்தில்
ஆயிரக்கணக்கான
அன்றாடக்கூலிகள்
ஒப்பந்த ஊழியர்களாய்
உறிஞ்சப்படுகின்றார்கள்….

மாதக்கணக்கில் சம்பளப்பாக்கி
ஆண்டுக்கணக்கில் போனஸ் பாக்கி
ஆயுள் கணக்கில் வைப்புத்தொகை பாக்கி

திடங்கொண்டவர்
மெலிந்தோரை இங்கு
தின்று பிழைத்திடலாமோ?
என்று கேள்வி கேட்டான் பாரதி

அதிகாரிகளும் ஊழியர்களும்
மாதம் முடிந்தால்
மணியடித்துச் சம்பளம் பெறும்போது
பாவப்பட்ட ஒப்பந்த ஊழியர்கள்….
வயிற்றில் நெருப்போடு
கண்ணில் நீரோடு வாழ்வதா?

மெலிவு கண்டாலும் குழந்தை தன்னை
வீழ்த்தி மிதித்திடலாமோ?
என்று விசனப்பட்டான் பாரதி

மெலிந்தவர்கள் என்பதால்
நிர்வாகம் அவர்களை
வீழ்த்தி மிதிப்பதா?

நிதி என்பதைக் காரணம் காட்டி
மெலிந்தோருக்கு
நீதி மறுக்கப்படலாமா?

அதிகாரத்தில் உள்ளவர்கள்
ஈர நெஞ்சோடு
இதனை அணுக வேண்டாமா?...


சிறியாரை மேம்படச் செய்தால்
பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்
என்று நிறைவாகப் பாடினான் பாரதி

சிறியோரைவறியோரை
மெலிந்தோரைநலிந்தோரை..
நம்மோடு வாழும் ஒப்பந்த ஊழியரை               
வாழச்செய்வோம்மேம்படச்செய்வோம்
 --------------------------------------------------------
இன்று 18/09/2018 செவ்வாய் - மாலை 04 மணிக்கு
காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக
NFTE – BSNLEU இணைந்து... 
உறிஞ்சப்படும் ஒப்பந்த ஊழியருக்காக... 
நீதி கேட்டு நெடுங்குரல் முழக்கம்

தோழர்களேவாரீர்

No comments:

Post a Comment