Thursday, 11 July 2019

போய்விட்டன... பொற்காலங்கள்...

19/07/1969...
இந்திய வரலாற்றில் ஓர் பொன்னாள்.
அன்றுதான் 14 வங்கிகள் தேசியமயம் ஆக்கப்பட்டன.
உறுதியுடன் இந்தப்பணியைச் செய்து முடித்த...
அன்னை இந்திராகாந்தி காலம்தோறும்
நம்மால் போற்றப்படவேண்டியவராவார்...

அன்று...
சமூகத்தின் வளர்ச்சியை மேலும் மேலும் மேம்படுத்துவதன்
நோக்கமாக வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன.

அன்று...
விவசாயம்... சிறு தொழில் நிறுவனம்... சில்லறை வர்த்தகம்...
சிறு வியாபாரங்கள் ஆகியவை முதன்மைத் துறைகளாக கருதப்பட்டன.

அன்று...
வங்கிகள் முதன்மைத் துறைகளுக்கு
40 சத  கடன் வழங்குவது அரசால் அவசியமாக்கப்பட்டது.

அன்று...
பொது நிதி... சேமிப்பு...வரி விதிப்பு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தி  வரவு செலவு கணக்கு  தயார் செய்யப்பட்டது.

அன்று...
சேமிப்பை பெருக்க வேண்டும்...
இருப்பு நிலையைப் பாதுகாக்க வேண்டும் என்பது
அரசின் நோக்கமாகக் கருதப்பட்டது.

ஆனால் இன்று.... எல்லாமே தலைகீழ்...
அரசே தன் துறைகளை அழித்திடும் அநியாயம்...
சேமிப்பு பொருளாதாரம் தேவையில்லை...
செலவு பொருளாதாரமே தேவையென..
அரசே முழக்கமிடும் அவலம்...

சின்னஞ்சிறு செல்லையாக்களின் வளர்ச்சிக்காக
உருவாக்கப்பட்ட பொதுத்துறைகள்...
முதலை மல்லையாக்களின் முன்பு மண்டியிட்டு....
கோடிகளைக் கொட்டிக்கொடுத்த கொடுமை...

இப்படி இந்திய தேசத்தில்....
சோதனைகள் எத்தனை வந்தாலும்...
எதிர்த்து நின்று உறுதியுடன் களம் கண்டு
பொதுத்துறை வங்கிகளைக் காத்து நிற்கும்...
வங்கி ஊழியர் சங்கத்தைப் பாராட்டுவோம்...

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட
50வது பொன்விழா சிறக்க வாழ்த்துகின்றோம்...

Sunday, 7 July 2019


பொறுத்தது போதும்...

தோழர்களே...
கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக...
சென்னை கூட்டுறவு சங்கத்தில்...
இறந்து போன உறுப்பினர்கள்...
ஓய்வு பெற்ற உறுப்பினர்கள்...
கணக்கு முடித்த உறுப்பினர்கள்...
ஆகியோரது கணக்கு வழக்குகள் முடிக்கப்பட்டு
நிலுவை வழங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்படுகின்றது.

பல்வேறு தேவைகளுக்காக கடன் விண்ணப்பித்த தோழர்களுக்கு
இன்று வரை கடன் பட்டுவாடா செய்யப்படவில்லை.
வேண்டியவர்களுக்கும்... RGB உறுப்பினர்களுக்கும் மட்டுமே
அவ்வப்போது கடன் வழங்கப்படுகின்றது....

சாதாரண  உறுப்பினர்கள் கையைப் பிசைந்து கொண்டு
கடனுக்கு ஏங்கிக்கொண்டிருக்கும் கொடுமை தொடர்கின்றது...

கூட்டுறவு சங்கத்தில்... 
நடக்கும் கொள்ளையைப் பற்றி...
நாள்தோறும் பலசெய்திகள்
சாட்டை...சவுக்கு என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெள்ளனூர் நிலம் விற்கப்பட்டு பலகோடிப் பணம்
விழுங்கப்பட்டதாக பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.

ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வியர்வையைச் சிந்தி
உழைத்த பணத்தில் உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கம்
இன்று கொள்ளைக்கூடாரமாக மாறிவிட்டதாக
ஊடகச்செய்திகள் கூறுகின்றன...

BSNLEU சென்னைத்தொலைபேசித் தோழர்கள்..
உரிய ஆதாரங்களுடன்... விளக்கங்களுடன் சமீபத்தில்
வெள்ளனூர்  நிலக்கொள்ளையைத் தோலுரித்துக்காட்டியுள்ளனர்...

தனது வட்டிப்பணத்தில் உருவான கூட்டுறவு சங்கத்தில்
என்ன நடக்கின்றது?  என்ற உண்மை நிலவரம்
இன்றுவரை சாதாரண உறுப்பினருக்குத் தெரியவில்லை.
இன்றுவரை கூட்டுறவு சங்க நிர்வாகம்
வெள்ளந்தியான  உறுப்பினர்களுக்கு
வெள்ளையறிக்கையாக உண்மையை உரைக்கவில்லை....

கூட்டுறவு சங்கத்தில்...
தொழிற்சங்கங்கள் என்ற போர்வையில்
ஊழல் முதலைகள் வாய் பிளந்து வாரி விழுங்குகின்றன
என்ற  செய்திகள் டீக்கடை பெஞ்சுகளில் 
தினந்தோறும் பேசப்படுகின்றன...

இந்தக் கொடுமைகளை
இன்னும் எத்தனை காலம்தான் சகிப்பது?
இந்த கொள்ளைகளுக்கு முடிவு எப்போது?
சாதாரண உறுப்பினருக்கு...
அவனது தேவைக்கான கடன் கிடைப்பது எப்போது?
சாதாரண உறுப்பினரின் சொத்து 
கொள்ளை போவதை தடுப்பது எப்படி?
என்ற பல கேள்விகள் தோழர்களின் நெஞ்சில் எழுகின்றன...

எனவே பரமக்குடியில் நடந்த
NFTE காரைக்குடி மாவட்டச்செயற்குழு முடிவின்படி
09/07/2019 அன்று மதுரையில் நடைபெறும்
மதுரை மாவட்டச்செயற்குழுவில் நாமும் பங்கேற்போம்...
கூட்டுறவு சங்கத்தை எதிர்த்துப் போராடுவது....
கூட்டுறவு சங்க நிர்வாகத்தின் மீது வழக்குத்தொடுப்பது  என்ற
மதுரை மாவட்டச்சங்கத்தின் முடிவை நாம் வரவேற்கின்றோம்...

கூட்டுறவு சங்க உறுப்பினர் நலன் காக்கும் போராட்டத்தில்...
கூட்டுறவு சங்க நிர்வாகத்திற்கெதிரான வழக்கில்...
மதுரை மற்றும் காரைக்குடி மாவட்டங்கள் இணைந்து
செயல்படுவோம்.... போராட்டக்களம் காண்போம்...
ஊழியர் நலன் காப்போம்...

தோழர்களே...
09/07/2019 மதுரை மாவட்டச்செயற்குழுவில்...
அனைத்துக் கிளைச்செயலர்களும்...
முன்னணித்தோழர்களும்...
முன்னாள் RGB உறுப்பினர்களும்...
அவசியம் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.

அன்புடன்
பா. லால்பகதூர் – மாவட்டத்தலைவர் – காரைக்குடி
வெ.மாரி – மாவட்டச்செயலர் – காரைக்குடி

மதுரை  மாவட்ட செயற்குழு

N F T E
தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
மதுரை மாவட்டம் - மாவட்டச்செயற்குழு

 09-07-2019  -  செவ்வாய்க்கிழமை -  காலை 10.00 மணி
 தல்லாகுளம் CSC மனமகிழ் மன்றம் – மதுரை

: தலைமை :  
தோழர். S. சிவகுருநாதன் – மாவட்டத்தலைவர்


: ஆய்படு பொருள் :

கடந்த ஓர் ஆண்டு காலமாக உறுப்பினர்களின் கடனை வழங்காமல்
இழுத்தடிக்கும் சென்னை கூட்டுறவு சொசைட்டி நிர்வாகத்தைக்
கண்டித்து  தொழிற்சங்க இயக்கம் நடத்துவது.

8வதுஉறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் தயாரிப்பு

ஜூன் - 08,09,&10-2019 மைசூர் மத்திய செயற்குழு முடிவுகள்

கோபி - (ஈரோடு)  விரிவடைந்த மாநில செயற்குழு பங்கேற்பு 

அமைப்பு நிலை மற்றும்  இன்ன பிற தலைவர் அனுமதியுடன்....

 தோழமையுள்ள...
G.ராஜேந்திரன்-  மாவட்ட செயலர்

அன்பே தவம்...  

அன்பே சிவம்... அன்பே தவம்...
என்று வாழும் குன்றக்குடி
தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்களின்
நாண்மங்கலப்பெருநாளான 03/07/2019 அன்று
மூத்த தோழர்.முருகன் தலைமையில்
NFTE மற்றும் கலைஇலக்கியப்பெருமன்ற தோழர்கள்
அவரைச் சந்தித்து வணங்கிவாழ்த்துக்கள் பெற்றோம்...
நலம் வாழ வாழ்த்துக்கள் சொன்னோம்...

அன்புமிகு அடிகளார் அவர்கள்
அமெரிக்கா சென்று  பல்வேறு இடங்களில்
தமிழுக்குப் பெருமை சேர்த்து...
அன்பிற்கு வலிமை சேர்த்து...
இணக்கத்திற்கு இனிமை சேர்த்து...
தனது 22 நாள் அமெரிக்கப்பயணத்தை முடித்துவிட்டு
தற்போது குன்றக்குடி திரும்பியிருந்தது  குறிப்பிடத்தக்கது....

அவரது அமெரிக்கப்பயணத்தைப் பற்றிக்கேட்டோம்...
அமெரிக்க தேசத்தின் சுத்தம் தன்னை
அதிசயப்படுத்தியதாக அடிகளார் சொன்னார்...
அவரவர் பணியை அவரவரே செய்யும் நிலைபற்றி வியந்தார்...

பல்வேறு செய்திகளைச் சொன்ன அவர் கடைசியாக சொன்னார்..
அமெரிக்கர்கள் வரலாற்று நிகழ்வுகளை...
வரலாற்று முக்கியத்துவங்களை
மிக அழுத்தமாக... பதிவு செய்து வைத்துள்ளனர்....
எந்த நாட்டவர் பார்த்தாலும்...
எந்த இனத்தவர் பார்த்தாலும்...
வருங்காலத்தலைமுறைகள் பார்த்தாலும்...
வரலாற்று உண்மைகள் அப்படியே அவர்களுக்கு
உரைக்கும் வகையில் அங்கே பதியப்பட்டுள்ளன...

நாம் நமது தேசத்தில்...
வரலாற்று உண்மைகளை.. நிகழ்வுகளை...
அழுத்தமாகப் பதிவு செய்யத்தவறி விட்டோம்...
விளைவு...
மகாத்மாக்கள் மறக்கடிக்கப்படுகின்றார்கள்...
கோட்சேக்கள் கொண்டாடப்படுகின்றார்கள்...
என்று சொல்லி முடிக்கும்போது...
நமது இதயம் கனத்தது...

உண்மைதான்..... இன்று... இங்கு... இந்திய தேசத்தில்...
மகாத்மாக்கள் மறக்கடிக்கப்படுகின்றார்கள்...
கோட்சேக்கள் கொண்டாடப்படுகின்றார்கள்...
அர்த்தமுள்ள வார்த்தைகள்... 
அழுத்தமான வார்த்தைகள்...

உடுத்துவது காவியானாலும்..
உணர்த்துவது நீதி என்று வாழும்...
பொதுவுடமை போற்றும்.... சமத்துவம் போற்றும்...
சமுதாய முனிவரை வாழ்க... பல்லாண்டு என
வாழ்த்தி வணங்கி விடை பெற்றோம்....

Saturday, 29 June 2019


N F T E
தமிழ் மாநிலச்செயற்குழு

01/07/2019 மற்றும் 02/07/2019

பம்பாய் அரங்கம் – விருதுநகர்

தலைவர்கள் பங்கேற்பு...

தோழர்களே... வருக....

அஞ்சலி
NFTE இயக்கத்தின் மூத்த தோழரும்... 
மத்தியப்பிரதேச மாநிலச்செயலராகப் 
பலகாலம் பணியாற்றியவரும்... 
நெருக்கடியான கட்டத்தில் NFTE இயக்கத்திற்கு 
தலைமை தாங்கிச்சென்றவரும்... 
சிறந்த பேச்சாளரும்... 
இந்தியில் மிக்கப் புலமை கொண்டவருமான
அருமைத்தோழர் N.T.சஜ்வானி 
அவர்களின் மறைவிற்கு 
நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்...

Thursday, 27 June 2019


கண்டன ஆர்ப்பாட்டம்
-----------------------------
நாடுமுழுவதும்
ஒப்பந்த ஊழியர்களுக்கு
பலமாதங்களாகச் சம்பளம் வழங்காததைக் கண்டித்து
NFTE தமிழ்மாநிலச்சங்க அறைகூவலுக்கிணங்க...
தமிழகம் தழுவிய
ஆர்ப்பாட்டம்
28/06/2019 – வெள்ளி – மதியம் 12.30 மணி
பொதுமேலாளர் அலுவலகம்
 காரைக்குடி.
தோழர்களே... வாரீர்...