Sunday, 5 June 2016


வங்கிக்கடன் வட்டி உயர்வு 

கனரா வங்கி வட்டி விகிதத்தை 01/04/2016ல் இருந்து உயர்த்தியுள்ளது. தற்போதைய தனிநபர்க்கடனுக்கான வட்டி விகிதம் 11.65 சதத்திலிருந்து 11.75 சதமாக உயர்ந்துள்ளது. மே மாதச்சம்பளத்தில் கூடுதல் வட்டியுடன் கடன் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------
JTO OFFICIATING நிலுவைப்பிடித்தம் நிறுத்தம் 

JTO பதவியில் தற்காலிகமாகப் பதவி உயர்வு வகித்த TTA தோழர்களின் சம்பள நிர்ணயம் FR 22 1(a )(i ) என்ற விதியின் கீழ் நிர்ணயம் செய்யப்பட்டு நிலுவையும் வழங்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நிர்ணயம் செய்தது தவறு என்றும் நிலுவையை பிடித்தம் செய்ய வேண்டும் எனவும்  பிரச்சினை எழுப்பப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி CATல் தொடுக்கப்பட்ட வழக்கில் நிலுவையைப் பிடித்தம் செய்யலாகாது என்று டெல்லி CAT உத்திரவு பிறப்பித்துள்ளது. டெல்லி நீதிமன்ற உத்திரவையொட்டி  நிலுவைப்பிடித்தம் செய்யக்கூடாதென BSNL நிர்வாகம் 03/06/2016 அன்று மாநில நிர்வாகங்களுக்கு உத்திரவிட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------
JAO 10 சத காலியிடத்தேர்வு 

JAO 10 சத காலியிடங்களுக்கான இலாக்காப் போட்டித்தேர்வு 28/08/2016 அன்று நடைபெறும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. 
இணையதளம் மூலம் 31/07/2016க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
தமிழகத்தில் காலியிடங்கள் 6. மொத்தக்காலியிடங்கள் 365. 
தேர்வுக்கு கட்டணம் உண்டு. வழக்கம் போல் தவறான பதிலுக்கு 
எதிர்மறை மதிப்பெண் NEGATIVE MARKS உண்டு.
---------------------------------------------------------------------------------------------------------
ஜூலை 2016  IDA 

2016 ஏப்ரல் மாதம்  IDA உயரவில்லை.  பெயருக்கேற்ப ஏப்ரல் மாதம்   தனது முதல் தேதியை பொதுத்துறை ஊழியர்களுக்கு நினைவூட்டியது.  குறைந்தபட்சம் ஜூலை 2016லாவது விலைவாசிப்படி உயராதா? என்பது ஊழியர்களின் ஏக்கமாக உள்ளது. ஜூலை மாத IDA  மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உயரும் விலைவாசிப்புள்ளிகளின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் விலைவாசிப்புள்ளிகளின் உயர்வு வெளியிடப்பட்டு விட்டது. 
மே மாதக் கணக்கீடு ஜூன் இறுதியில் வெளியிடப்படும். 
தற்போதைய நிலவரப்படி 2 சதம் முதல் 2.5 சதம் வரை 
ஜூலையில் IDA உயர வாய்ப்புள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------
அதிகாரிகள் சம்பள விகித மாற்றம் 

MTNL அதிகாரிகளுக்கு இணையாகத்  தங்களது சம்பள விகிதத்தை உயர்த்த வேண்டும் என்பது BSNL அதிகாரிகளின் நெடுநாள் கோரிக்கையாகும்.  MTNL அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் கிடையாது. எனவே ஓய்வூதியம் பெறும்  BSNL அதிகாரிகள் MTNL சம்பளம் கோர முடியாது என நிர்வாகம் கூறி வந்தது. ஆனால் MTNL அதிகாரிகளுக்கும் 01/10/2000 முதல் ஓய்வூதியம் வழங்க அரசு உத்திரவிட்டது. எனவே BSNL அதிகாரிகளின் கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றது.  இதற்காக அமைக்கப்பட்ட கான் குழுவும் சம்பள விகிதத்தை மாற்றுவதற்காக பரிந்துரை செய்தது. BSNL அதிகாரிகள்  சங்கங்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் தற்போது கான் குழு பரிந்துரையை அமுல்படுத்த நிர்வாகம் இசைந்துள்ளது. DOTயின் ஒப்புதல் பெற்ற பின் சம்பள விகித மாற்றம் அமுல்படுத்தப்படும். அதிகாரிகளின் சம்பள விகிதம் உயரும் நிலையில் ஊழியர்களின் அதிகபட்ச சம்பள விகிதமான  NE 12 சம்பளம் உடனடியாக உயர்த்தப்பட வேண்டும். குறைந்த பட்ச சம்பள விகிதத்தில்  தேக்க நிலையைச் சந்தித்து வரும் GR'D ஊழியர்களின் சம்பள விகிதமும் மேல்நிலைப்படுத்தப்படவேண்டும். இதற்கெல்லாம் தேவை ஒற்றுமையும்.. ஒன்றுபட்ட போராட்டமுமே. 
இது பற்றி நமது மாநிலச்செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையைப் படித்து தோழர்கள் முழு விவரம் அறிந்து கொள்ளலாம்.
---------------------------------------------------------------------------------------------------------
JTO  தேர்வு முடிவுகள் 

TTA  தோழர்கள் ஆவலோடு காத்திருக்கும்... 
22/05/2016 அன்று நடைபெற்ற JTO இலாக்காத்தேர்வு முடிவுகள் 
இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
அனைவருக்கும் ADVANCE வாழ்த்துக்கள் .

No comments:

Post a Comment