ஏப்ரல்…12
தேங்கிக்கிடக்கும்
பிரச்சினைகள் தீர்விற்காக…
மதுரை செயற்குழு முடிவின்படி
காரைக்குடி GM அலுவலகம் முன்பாக
NFTE – NFTCL இணைந்த
உண்ணாவிரதம்
கோரிக்கைகள்
DOT காலத்தில் இருந்து….
சென்ற நூற்றாண்டில் இருந்து..
மாற்றலுக்காக காத்திருக்கும் ஊழியர்கள்…
5
ஆண்டுக்கும் அதிகமாக சேவை புரிந்திருந்தும்…
அனுமதிக்கப்படாத விதி 8 மாற்றல்கள்…
ஓய்வு பெற்றவர்களின்…
மரணமுற்றவர்களின்…
ஓரங்கட்டப்பட்ட பதவி உயர்வுகள்…
உரிய முறையில் பரிசீலனை செய்யப்படாத
கருணை அடிப்படைப் பணி விண்ணப்பங்கள்..
காலத்தே
கொடுக்கப்படாத.. காலம் தாழ்த்தப்பட்ட
நாலுகட்டப்பதவி
உயர்வுகள்…
ஆண்டுகள்
இரண்டு ஆனபோதிலும்….
கொடுக்கப்படாத
பணி நிரந்தர உத்திரவுகள்…
இராமநாதபுரம்
தொலைபேசி நிலையத்தில்…
உப்புத்தண்ணீரைக் குடிக்கச்சொல்லும் கொடுமை…
அனைத்து தொலைபேசி நிலையங்கள் மற்றும்
அலுவலகங்களில் அடிப்படை வசதிகள்…
மாநில மட்டத்தில் மறுக்கப்பட்ட..
மருத்துவ சிகிச்சைப் பில்கள்...
இன்னும்
கூட்டப்படாத…
JCM... பணிக்குழு...சேமநலக்குழு
கூட்டங்கள்..
தீர்வு காணப்படாத
சம்பள முரண்பாடுகள்…
தீர்ப்பு சொல்லப்படாத ஒழுங்கு நடவடிக்கைகள்…
கண்டுகொள்ளப்படாத சேவைக்குறைபாடுகள்…
இராமநாதபுரம் பகுதியில் கேபிள் பணி செய்யும்
ஒப்பந்த ஊழியர்களின் பட்டுவாடா செய்யப்படாத…
டிசம்பர் மற்றும் ஜனவரி சம்பளம்….
காவல்பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களின்…
பட்டுவாடா செய்யப்படாத பிப்ரவரி மாத சம்பளம்…
இலாக்கா வசமுள்ள... கணக்கில் சேர்க்கப்படாத..
ஒப்பந்த ஊழியர்
வைப்புநிதி…
இன்னும்…
எத்தனையோ
பிரச்சினைகள்…
ஏராள… ஏராள… பிரச்சினைகள்…
தோழர்களே..
எத்தனையோ முறை...
எடுத்துக் கூறியும்...
மாவட்ட நிர்வாகத்தின்...
அணுகுமுறையில்..
எந்த மாற்றமும் இல்லை...
ஊழியர்கள் பிரச்சினை தீர்வில்...
முன்னேற்றமும் இல்லை...
எனவே போராட்டம்
தவிர்க்க இயலாததாகிறது...
கண்டு கொள்ளப்படாத..
பிரச்சினைகள் தீர
களத்தில் சந்திப்போம்..
வாரீர்... தோழர்களே...
NFTE மற்றும் NFTCL மாவட்டச் சங்கங்கள்
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்.
No comments:
Post a Comment