எத்தனை எத்தனை சிலுவைகள்…
அன்று…
கல்வாரி மலையில்…
ஒற்றைச்சிலுவையில்
தொங்கியது ஒரு
ஏசு…
இன்று
எத்தனை எத்தனை
ஏசுகள்…
எத்தனை எத்தனை
சிலுவைகள்…
விளைவிக்கும் விவசாயிக்கு
சிலுவை…
கடலோடும் மீனவனுக்கு
சிலுவை…
கல்விகற்கும் மாணவனுக்கு
சிலுவை…
வேலைதேடும் இளைஞனுக்கு
சிலுவை
வேலை செய்யும்
ஊழியனுக்கு சிலுவை
பாடுபடும் பாட்டாளிக்கு
சிலுவை
பஞ்சம் பிழைக்கும்
பாமரனுக்கு சிலுவை
மாட்டுக்கறி தின்னும்
மக்களுக்கு சிலுவை
மாட்டுத்தோல் உரிக்கும்
மனிதனுக்கு சிலுவை
மலம் அள்ளும் தொழிலாளிக்கு
சிலுவை..
குலம் தாழ்ந்த
அப்பாவிகளுக்கு சிலுவை...
எத்தனை எத்தனை
சிலுவைகள்…
எத்தனை எத்தனை ஏசுகள்…
அன்று…
ஏசுபிரான் இறுதியாய்
சொன்னார்…
ஆண்டவரே …
இவர்கள் அறியாமல்
செய்யும்
பாவங்களை மன்னியும்…
இன்றைய ஏசுக்கள்...
சிலுவையில் தொங்கியபடி கதறுகிறார்கள்...
ஆண்டவரே…
இவர்கள் அறிந்தே
பாவம் செய்கின்றார்கள்…
இவர்களை மன்னிக்காதே...
No comments:
Post a Comment