ஒப்பந்த ஊழியர் போராட்டம்
ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை
வலியுறுத்தி
திருச்சியில் 02/10/2017 அன்று நடைபெற்ற NFTCL கோரிக்கை மாநாட்டில்... 10/10/2017 அன்று தமிழகம் தழுவிய
கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்திடவும்... 16/10/2017 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்திடவும் தீர்மானங்கள்
இயற்றப்பட்டன.
அதனடிப்படையில் 04/10/2017 அன்று NFTCL சார்பாக
வேலைநிறுத்தக் கடிதம் நிர்வாகத்திற்கும்...
DY.CLC தொழிலாளர் ஆணையர் அவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. உடனடியாக பிரச்சினைகளைத் தீர்க்கச்சொல்லியும்...
13/10/2017க்குள் உரிய தகவல் அளிக்கச்சொல்லியும்...
தொழிலாளர் ஆணையர் 06/10/2017 அன்று
BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினார்.
10/10/2017 அன்று நமது வேலைநிறுத்தக்கடிதம்
சம்பந்தமாக DY.CLC நம்மை அழைத்திருந்தார்.
NFTCL தமிழ்மாநிலச்சங்கம் சார்பாக
மாநிலச்செயலர்
தோழர்.ஆனந்தன், மாநில செயல்தலைவர் தோழர்.மாரி ஆகியோர் DY.CLC... RLC மற்றும் ALC ஆகிய
அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினர்.
ஒப்பந்த ஊழியர்களது கோரிக்கைகள் சட்டப்படி நியாயமானது
என்றும்... அதனை BSNL நிர்வாகம் நிறைவேற்ற வேண்டியது அவர்களது கடமை என்றும்... தங்களது அலுவலகம்
அதனைக் கண்காணித்து வருவதாகவும் தொழிலாளர் ஆணையர் கூறினார். மேலும் அமைச்சருடன் அவர்
சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், தற்போதைய RLC பதவி உயர்வில் பெங்களூரு செல்வதாலும்
உடனடியாக நிர்வாகத்தை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திட இயலாத சூழல் இருப்பதை உணர்த்தினார்.
எனவே நம்முடைய போராட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனை எழுத்துப்பூர்வமாகவும்
நமக்கு கொடுத்தார்.
எனவே நமது 16/10/2017 முதல் திட்டமிடப்பட்டிருந்த காலவரையற்ற வேலை
நிறுத்தம் ஒத்தி வைக்கப்படுகின்றது. ஒப்பந்த ஊழியர்களது கோரிக்கைகள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றன
என்பதைப் பொறுத்து... முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்
நமது அடுத்த கட்டப்போராட்டம்
அமையும்.
இதனிடையே தமிழ் மாநில நிர்வாகம் அனைத்துப்
பிரச்சினைகளையும் தீர்த்திடக்கோரி மாவட்ட நிர்வாகங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. NFTCL மாவட்டச்சங்கப் பொறுப்பாளர்களும்...
மாநிலச்சங்க நிர்வாகிகளும் தங்களது பகுதியில் ஒப்பந்த ஊழியர்கள்
பிரச்சினைகள்
தீர்விற்காக கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.
No comments:
Post a Comment