தொடரும்… முத்தரப்பு பேச்சுவார்த்தை…
NFTCL சார்பாக ஒப்பந்த ஊழியர்களின்
கீழ்க்கண்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி
நாம் வேலைநிறுத்த
அறிவிப்பு செய்திருந்தோம்.
- குறைந்தபட்ச போனஸ் ரூ.7000/=
- ஊதியத்துடன் கூடிய வார விடுப்பு
- ஆண்டுதோறும் 15 நாள் விடுமுறை
- 7ம்தேதி சம்பளப்பட்டுவாடா
- அடையாள அட்டை
- திறனடிப்படையில் ஊழியர்களுக்கு சம்பளம்
- காலியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களைப் பணியமர்த்துதல்..
நமது வேலைநிறுத்த அறிவிப்பையொட்டி
20/10/2017 அன்று சென்னையில் உதவித்தொழிலாளர் ஆணையர் திரு.அண்ணாத்துரை அவர்கள் முன்னிலையில்
முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழ்மாநில நிர்வாகத்தின் சார்பாக உதவிப்பொதுமேலாளர்
திரு.இராஜசேகரன் கலந்து கொண்டார்.
NFTCL சார்பாக...
மாநிலத்தலைவர் தோழர்.பாபு,
மாநிலப்பொருளர் தோழர்.சம்பத்,
உதவிப்பொருளர்.தோழர்.இரத்தினம்
NFTE சென்னை மாநில உதவிச்செயலர்
தோழர்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்கெல்லாம் போனஸ்
வழங்கப்படவில்லை…
எங்கெல்லாம் அடையாள
அட்டை வழங்கப்படவில்லை…
எந்தெந்த ஊர்களில்
சம்பளம் என்ன தேதிகளில் வழங்கப்பட்டது…
எங்கெல்லாம் விடுப்பு
வழங்கப்படவில்லை…
என்பது பற்றி தொழிலாளர்
ஆணைய அலுவலகத்திற்கு
NFTCL சார்பாக
விரிவான தகவல் அளிக்கப்பட வேண்டும்.
அதனடிப்படையில்
சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என உதவித்தொழிலாளர் ஆணையர் தெரிவித்துள்ளார்.
அனைத்துப்பிரச்சினைகளும்
விரைவில் தீர்க்கப்படும் என
BSNL நிர்வாகத்தின்
தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பட்சப்
போனஸ் வழங்குவது,
உரிய தேதிகளில்
சம்பளம் வழங்குவது…
திறனடிப்படையில்
கூலி வழங்குவது…
போன்ற முக்கிய
கோரிக்கைகள்
இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை.
எனவே சட்டரீதியான அடுத்த கட்ட
நடவடிக்கைக்கும்...
போராட்டத்திட்டத்திற்கும்
நாம் தயாராவோம் தோழர்களே….
No comments:
Post a Comment