பஞ்சப்படி
இணைப்பு ஓர் கானல் நீர்….
ஜனவரி
2018 முதல் 2.6 சதம் IDA
உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
தற்போது
BSNL ஊழியர்களின் ஒரே ஆறுதல் பரிசு IDA மட்டுமே. அதுவும் சில நேரங்களில் வீழ்ச்சியடைந்து
காலை வாரி விடுகின்றது. பஞ்சப்படி 50 சதத்தை தாண்டினாலே அது அடிப்படைச்சம்பளத்துடன்
இணைக்கப்பட வேண்டும். அவ்வாறு இணைக்கப்பட்ட காலங்கள் உண்டு. இன்று பஞ்சப்படி 126.9
சதம் உயர்ந்த பின்னும் அதன் இணைப்பு பற்றி எந்த சிந்தனையோ முணுமுணுப்போ
இல்லாத நிலையே நிலவுகிறது.
2007ல் பஞ்சப்படி
68.8 சதமாக இருந்த போது
50 சதம் இணைக்கப்பட்டு பின் மிச்சமுள்ள
18.8ல் பாதியான 9.4
சதமும் சேர்த்து
78.2 (68.8+9.4) என கணக்கிடப்பட்டு
பஞ்சப்படி இணைக்கப்பட்டு
புதிய ஊதிய
மாற்றம் அமுல்படுத்தப்பட்டது.
2017ல் 2007ஐ விட ஏறக்குறைய இரு மடங்கு பஞ்சப்படி உயர்ந்த
பின்னும் அதன் இணைப்பு பேசப்படாமலே இருக்கின்றது.
இலாபம் இருந்தால்தான் சம்பள மாற்றம் உண்டு என விதிகள்
உருவாக்கப்பட்டு விட்டன. இலாபம் இருந்தால்தான் பஞ்சப்படி இணைக்கப்பட வேண்டும் என விதிகள்
உருவாகி விட்டனவா?
கானல் நீராகி
விட்டதா பஞ்சப்படி இணைப்பு?
No comments:
Post a Comment