தொழிலாளர் நல அமைச்சர் திரு.கங்குவார் அவர்களிடம் தோழர்கள்.மதிவாணன் - ஆசிக் அகமது ஆகியோர் கோரிக்கை மனு அளிக்கும் காட்சி |
அடிமட்ட மக்களுக்கு
செய்யும் தொண்டே…
ஆண்டவனுக்கு செய்யும்
தொண்டு என்றார் சுவாமி விவேகானந்தர்...
அந்த வழியில்…
அடிமட்ட ஊழியர்களாகிய
ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வில்…
அல்லல் அகற்றி…
ஆதங்கம் போக்கி…. இன்னல் நீக்கி…
அமைதி வழியில்
அவர்களது வாழ்வில் ஒளியேற்றும் பணியில்…
அல்லும் பகலும்
தன்னை
அர்ப்பணித்துக்
கொண்டு வருகிறது… வளருகிறது… NFTCL பேரியக்கம்…
அல்லல்படும் ஒப்பந்த
ஊழியர்களின் ஓயாத பிரச்சினைகளை…
அகில இந்தியத்தலைவர்
தோழர்.ஆசிக் அகமது அவர்களும்…
அகில இந்தியப்
பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் அவர்களும்…
அன்புள்ளம் கொண்ட
தொழிலாளர் நல
அமைச்சர் திரு.கங்குவார் அவர்களிடமும்...
முதன்மைத்தொழிலாளர்
ஆணையர்
திரு.அனில்குமார் நாயக் அவர்களிடமும்…
19/01/2018 அன்று
தலைநகர் டெல்லியில் சந்தித்து
விரிவாக எடுத்துரைத்துள்ளனர்…
உரிய தேதியில்
சம்பளம் இல்லை…
உழைப்புக்கேற்ற
ஊதிய இல்லை…
அடையாள அட்டை இல்லை…
ஆண்டுதோறும் போனஸ் இல்லை…
மருத்துவ வசதி
இல்லை…
மரித்து விட்டால்
இழப்பீடில்லை…
வாரத்தில் ஓய்வில்லை….
வைப்புநிதியில்
நிறைவில்லை….
மொத்தத்தில் மனிதநேயம்
என்பதே BSNLலில் இல்லை…
என்பதை நமது தலைவர்கள்
நேர்பட எடுத்துரைத்து…
எழுத்துப்பூர்வ
கடிதமும் கொடுத்துள்ளனர்….
அதோடு நில்லாமல்…
மூன்று மாத சம்பளம்
இல்லாமல் தன்
மூச்சை நிறுத்திக்கொண்டான்
ஒரு தோழன் என
தமிழகத்தின் கடைக்கோடியில்….நடந்த
கொடுமையை
அமைச்சரிடம்...ஆணையரிடம்
எடுத்துரைத்துள்ளனர்….
ஆவண செய்வதாக அமைச்சரும்…
ஆணையரும் உறுதி
அளித்துள்ளனர்….
அமைச்சரைச் சந்தித்து…
நிரந்தர ஊழியர்களின் பிரச்சினையை...
எடுத்து இயம்ப
இயலாத இந்நேரத்தில்…
அடிமட்ட ஊழியர்களின்
பிரச்சினைக்காக..
அமைச்சரைச் சந்தித்து
குறைகளை எடுத்துக்கூறியது…
அடிமட்ட ஊழியர்களின்
தொழிற்சங்க வரலாற்றில்
அற்புதம் மிகுந்த செயலாகும்...
எனவேதான்...
NFTCL பேரியக்கம்...
நாடு முழுக்க வளருகின்றது…
நாள் முழுக்க வளருகின்றது…
இதோ வங்கத்திலும்
வளர ஆரம்பித்துள்ளது…
மூவாயிரத்துக்கும்
அதிகமான ஒப்பந்த ஊழியர்கள்..
NFTCL இயக்கத்தில்
இணைந்திட இசைந்துள்ளனர்….
வங்கத்தில் விரைவில்
வலுவான இயக்கம் துவங்கப்படும்….
அடிமட்ட ஊழியர்களின்
வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய
அருமைத்தலைவர்கள்
குப்தா… சந்திரசேகர்… ஜெகன் வழியில்…
அனுதினமும்...
NFTCL நடைபோடும்… நலம் சேர்க்கும்…
வாழ்க NFTCL… வளர்க
NFTCL…
No comments:
Post a Comment