அழகிய
மதுரையின் அன்புத்தெய்வம் அழகர்…
ஆண்டுதோறும்
வைகை ஆற்றில் இறங்குவார்…
ஆனால்
பாதிவழியிலேயே பயணத்தை முடித்துக்கொண்டு
ஆற்றைத்
தாண்டாமலேயே அழகர்மலை திரும்பி விடுவார்….
நம்மிடமும்
ஒரு அழகர் இருக்கின்றார்…
அவர்
U.அழகர்… அடிமட்டத்து அழகர்….
U
என்பதே அழகரின் நாம அடையாளம்…
U. அழகர்
சிவகங்கையில் GROUP ‘D’யாகப் பணிபுரிகின்றார்…
கள்ளழகர்..
கடவுள் அவதாரம்…
ஆறு
தாண்டாவிட்டாலும்… ஆண்டுதோறும்
மண்டூக
முனிவருக்கு சாபவிமோச்சனம் அளித்து விட்டு
அழகர்
மலைக்கு ஆரவாரமாகத் திரும்பிவிடுவார்…
நமது
அழகர்…
கள்ளழகர்
அல்ல… கடைநிலை அழகர்…
கல்வி
கற்காத அழகர்…
பத்தாம்
வகுப்பு கூடப் படிக்காத
பாமர
மண்டூகத் தொழிலாளி…
எனவே
பதவி உயர்வுக்கு தகுதியற்று…
சாபம்
கொண்டவராய் விமோச்சனமே இல்லாமல்….
GROUP
‘D’யாகவே வாழ்க்கையை விசனத்துடன் ஓட்டுகின்றார்…
கள்ளழகர்
உச்சம் பெற்றவர்…
காரைக்குடி
அழகரும் உச்சம் பெற்றவர்..
வாழ்க்கையில்
அல்ல… வாங்கும் சம்பளத்தில்…
MAXIMUM
என்னும் உச்சம் பெற்றவர்…
STAGNATION
என்னும்…
தேக்கநிலைக்கு
ஆளாகி..
ஏக்கநிலைக்குத்
தள்ளப்பட்டவர்….
GROUP
‘D’ தோழர்களின் நிலையைக் கண்டால்…
மனம்
நொந்து நூலாகும்…
அழகர்
நிலையும் அதுவேதான்..
அழகர்
1991ல் பணிநிரந்தரம் பெற்றவர்…
அவரது
DOT காலத்தை விட்டுவிடுவோம்…
BSNLலில்
அவர் பட்டபாடுகளை…
கிட்டாத
பலன்களை சற்றே உற்றுப்பார்ப்போம்…
01/10/2000ல்
முதல் ஊதிய மாற்றத்தில்…
ரூ.4060
- 125 – 5935 என்ற சம்பள விகிதம் பெற்றார்…
மூன்று
ஆண்டுகள் ஆண்டு உயர்வுத்தொகை அடைந்தார்…
01/10/2003ல்
அவருக்கு ACP என்னும் பதவி உயர்வு
ரூ.4100
– 125 – 5975 என்ற சம்பள விகிதத்தில் அளிக்கப்பட்டது..
தனது
ஆண்டு உயர்வுத்தேதியான
01/02/2004க்கு
விருப்பம் தெரிவித்தார்…
01/02/2004ல்
பழைய சம்பளத்தில் ரூ.5810/= பெற்றிருந்தார்…
புதிய
பதவி உயர்வில் ரூ.5975/= அளிக்கப்பட்டது…
மகிழ்ச்சிதான்…
ஆனால் மகிழ்ச்சியல்ல…
ரூ.5975/=
என்ற அடிப்படைச்சம்பளத்தை அடைந்த அன்றே
அழகர்
STAGNATION என்னும் உச்சம் பெற்றார்.
புதிய
சம்பளத்தின் உச்சம் ரூ.5975/=
2004ல்
உச்சத்தை அடைந்ததால்…
2005ல்
ஆண்டு உயர்வுத்தொகை மறுக்கப்பட்டது….
2006ல்
தேக்க நிலை ஆண்டு உயர்வுத்தொகை அளிக்கப்பட்டது…
2007
வந்தது… அழகருக்கு ஆண்டு உயர்வுத்தொகை கிடையாது…
ஆனால்
2007ல் இரண்டாவது ஊதியமாற்றம் வந்தது…
2007
இரண்டாவது ஊதியமாற்றம்…
ஏதேனும்
மாற்றத்தைக் கொண்டுவருமென…
சற்றே
ஆனந்தப்பட்டார் நமது அடிமட்டத்து அழகர்…..
இரண்டாவது
ஊதியமாற்றத்தில் அழகருக்கு…
ரூ.7900
– 14880 என்ற ஊதியவிகிதம் அளிக்கப்பட்டது…
01/01/2007ல்
ஊதியமாற்றம் பெற்றார்… அடுத்த ஆண்டு…
01/02/2008ல்
ஆண்டு உயர்வுத்தொகை பெற்றார்….
ரூ.14880/=
என்ற நிலையில் ஆண்டு உயர்வுத்தொகை பெற்று
ஒரே
ஆண்டு உயர்வுத்தொகையோடு உச்சம் பெற்றார்..
மச்சமில்லாத…
மிச்சமில்லாத நமது அழகர்…
2008ல்
STAGNATION தேக்கநிலை அடைந்ததால்…
2009ல்
அழகருக்கு ஆண்டு உயர்வுத்தொகை கிடைக்கவில்லை…
2010
வந்தது…
இப்போது
நாலுகட்டப்பதவி உயர்வு வந்தது…
நாலுகட்டப்பதவி
உயர்விலாவது
நல்லது
நடக்காதா என
நப்பாசை
கொண்டார் நமது அழகர்….
ஆனால்
நாலுகட்டப்பதவி உயர்வும்
அழகரை
நட்டாற்றில் தள்ளியது..
நாலுகட்டப்பதவி
உயர்வுத்தேதியான
01/10/2010ல்
அழகர் பழைய சம்பள விகிதத்தில்
ரூ.15330/= என்ற அடிப்படைச்சம்பளம்
பெற்றிருந்தார்…
அவருக்கு
ரூ.8150 – 15340/=
என்ற புதிய சம்பள விகிதம் அளிக்கப்பட்டு..
ரூ.15340/=
என்ற அடிப்படைச்சம்பளம் அளிக்கப்பட்டது…
அந்தோ
பரிதாபம் அழகர்…
வெறும்
10 ரூபாய் மட்டுமே பதவி உயர்வில் பணப்பலன் அடைந்து
பதவி
உயர்வு பெற்ற அன்றே உச்சம் பெற்றார்… பாவப்பட்ட அழகர்…
2010ல்
STAGNATION தேக்கநிலை அடைந்ததால்…
2011ல்
அவருக்கு ஆண்டு உயர்வுத் தொகை கிடைக்கவில்லை…
2012ல்
முதலாவது
தேக்கநிலை ஆண்டு உயர்வுத்தொகை அளிக்கப்பட்டது…
2013ல்
அவருக்கு ஆண்டு உயர்வுத் தொகை கிடைக்கவில்லை…
2014ல்
இரண்டாவது
தேக்கநிலை ஆண்டு உயர்வுத்தொகை அளிக்கப்பட்டது…
2015ல்
அவருக்கு ஆண்டு உயர்வுத் தொகை கிடையாது….
2016ல்
மூன்றாவது
தேக்கநிலை ஆண்டு உயர்வுத்தொகை அளிக்கப்பட்டது…
இதோடு
தேக்கநிலை ஆண்டு உயர்வுத்தொகையும்
தேக்கம் பெற்றது…
மூன்று
தேக்கநிலை உயர்வுத்தொகைக்கு மேல்
ஆண்டு உயர்வுத்தொகை எதுவும் கிடைக்காது….
இனி
2017 வந்துவிட்டது…
இரண்டு
ஊதியமாற்றங்கள்
அழகருக்கு ஏமாற்றங்களாகவேப் போயின…
மூன்றாவது
ஊதியமாற்றமாவது
அழகருக்கு ஆறுதலைத் தருமா?
என்பதுதான்
அழகரின் தற்போதைய ஏக்கமும்…
நமது எதிர்பார்ப்பும்…
ரூ.8150
– 15340/= என்ற ஊதியவிகிதத்திற்கு
ரூ.19900
– 56200/= என்ற புதிய ஊதியவிகிதம்
பேச்சுவார்த்தையில்
முன்மொழியப்பட்டுள்ளது…
புதிய
ஊதியவிகிதத்தில் 15 சத ஊதிய உயர்வில்..
அழகர்
ரூ.42460/= என்ற அடிப்படைச்சம்பளத்தில்
01/01/2017
முதல் பொருத்தப்படுவார்…
01/10/2017ல்
புதிய ஆண்டு உயர்வுத்தொகை பெறுவார்…
01/10/2018ல்
அடுத்த
ஆண்டு உயர்வுத்தொகையும் தடையின்றி கிடைக்கும்…
01/10/2018ல்
அடுத்த
நாலுகட்டப்பதவி உயர்வு அளிக்கப்படவேண்டும்…
நாலுகட்டப்பதவி
உயர்வு
NE-5
என்னும் ரூ.21300 – 59600/=
ஊதிய விகிதத்தில் அளிக்கப்படும்…
அழகருக்கு
01/10/2018ல்
நாலுகட்டப்பதவி உயர்வுப்பலன் நன்றாகவே கிடைக்கும்…
2019ல்
அடுத்த ஆண்டு உயர்வுத்தொகை
அமோகமாகக் கிடைக்கும்…
2020ல்
ஆண்டு உயர்வுத்தொகை தங்கு தடையின்றி கிடைக்கும்…
2021ல்
ஆண்டு உயர்வுத்தொகை
தானாகக் கிடைக்கும் தடுப்பார் யாருமில்லை…
2022ல்
ஆண்டு உயர்வுத்தொகை
தேக்கமின்றி ஊக்கமாகக் கிடைக்கும்…
2023ல்
ஆண்டு உயர்வுத்தொகையைப் பெற்று
ஒரு
பாதிப்புமின்றி அழகர் ஓய்வும் அடைந்து விடுவார்….
இரண்டு
ஊதியமாற்றங்களில் ஆறு தாண்டாத அழகர்…
இதோ
மூன்றாவது ஊதியமாற்றத்தில்
ஆறு
ஆண்டுகளாகத் தொடர்ந்து
ஆண்டு உயர்வுத்தொகை அடைந்து..
ஆறு
தாண்டி விடுவார்…. ஆறுதலை அடைந்து விடுவார்..
ஆனாலும்….
அழகர்கள்
ஆறு தாண்டுவது மரபல்ல… வழக்கமல்ல போலும்…
2023ல்
பணிநிறைவு பெறும் அழகர்
2027
வரைப் பணியில் இருந்தால்…
2025க்குபின்
மீண்டும் உச்சம் பெற்று தேக்கநிலை அடைவார்..
நல்லவேளை நமது அழகர் மூன்று ஆண்டுகள் முந்திப் பிறந்தார்…
ஆனாலும்
நாடுமுழுவதும்...
பின்பிறந்த அழகர்கள் இருக்கவே செய்வார்கள்…
அழகர்கள்
2017ல் இருந்து 2026 வரை
ஆண்டு
உயர்வுத்தொகை தடையின்றிப் பெற்றால்தான்
ஊழியர்
தரப்பு சரியான பொருத்தமான
சம்பள
விகிதங்களைப் பெற்றுள்ளது
என்று
நாம் பெருமிதமாகக் கூற முடியும்…
எனவே
தற்போது உத்தேசம் செய்யப்பட்டுள்ள
NE-4
என்னும் சம்பள விகிதத்திலும்….
NE-5
சம்பள விகிதத்திலும்…
தேக்கநிலை
வரத்தான் செய்யும்…
எனவே
உச்சநிலை ஊதியம்
இன்னும்
உயர்த்தப்பட வேண்டும்…
அடிமட்ட
ஊழியர்களின் பதவி உயர்வு மேம்படுத்தப்பட்டு
அடுத்த
ஊதியநிலைக்கு விரைந்து செல்ல வழிவகுக்கப்பட வேண்டும்…
என்பதுவே
அழகர் போன்ற அடிமட்ட ஊழியர்களின்
இன்றைய
கோரிக்கையும்… எதிர்பார்ப்புமாகும்…
அழகர்கள்…
வாழ்வில்
உச்சம் பெறவேண்டும்…
வாங்கும்
சம்பளத்தில் உச்சம் பெறலாகாது…
அழகர்கள்
தடை தாண்ட வேண்டும்…
2027
வரை ஆறு தாண்டவேண்டும்…
என்பதுவே
அடிமட்ட ஊழியர்களின் ஏக்கமாகும்….
அதுவே
நமது நோக்கமாகும்….
இது
அழகர் புராணமல்ல…
அடிமட்ட
ஊழியர்களின் பலகால வேதனையாகும்…
பாதிப்பின்
அளவு கூடுதலாக இருந்ததனால்…
பதிப்பின்
அளவும் கூடுதலாகி விட்டது…
தோழர்கள்
பொறுத்தருள்க… படித்துணர்க…
No comments:
Post a Comment