Monday, 22 October 2018

BSNL  ACTIVE   FESTIVAL   SEASON
ஊக்கமது கைவிடேல்...


BSNLன் தரமிகு சேவையை…
மக்களிடம் மேலும் கொண்டு செல்லவும்…
நமது விற்பனையை அதிகரிக்கவும்,
வருமானத்தை உயர்த்திடவும்…
வாடிக்கையாளர்களை வசப்படுத்தவும்…

18/10/2018 தசரா முதல் 07/11/2018 
தீபாவளி வரையிலான திருவிழாக்காலத்தில்
உற்சாகமுடன் ஊக்கமுடன் ஓய்வின்றி உழைத்திட
அனைத்து BSNL அதிகாரிகளும் ஊழியர்களும்
CORPORATE அலுவலகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும்
18/10/2018 முதல் 07/11/2018 வரை
கதவுகள் மூடாது கனிவோடு
வாடிக்கையாளருக்காக காத்திருக்க வேண்டும்.

நமது விற்பனையாளர்களை அவர்கள்
விற்பனை செய்யும் இடங்களுக்கு நேரில் சென்று
வாழ்த்துகளைக் கூறிட வேண்டும்.

விற்பனையில் சிறந்த  விற்பன்னர்களுக்கு
நற்சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.

ஊரெங்கும் விழாக்கோலம் பூண்டு
ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் விற்பனையாளர்கள்
பங்கேற்கும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.

அனைத்து நிகழ்வுகளும் படங்களாக செய்திகளாக
தலைமையிடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.

ஊடகங்களில் உற்சாகமோடு செய்திகள் வருவதற்கு
வழிவகை செய்திட வேண்டும்.

நமது BSNLன் வளர்ச்சிக்கான இந்த செயல்திட்டத்தில்
நமது தோழர்கள் முனைப்போடு செயலாற்ற வேண்டும்.

மேற்கண்ட வழிகாட்டுதல்களை சிரமேற்கொண்டு
தசரா அன்று அசராது பணிபுரிந்த
தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்..

மேலும் கூடுதல் உற்சாகமுடன்
நமது தோழர்கள் தங்களது பங்களிப்பைச் செய்திடவேண்டும்.
முனுமுனுப்போடு செயல்படுவது தவிர்த்து
முனைப்போடு செயலாற்றிட வேண்டும்…
-------------------------------------------------------------------------------------------------------------------------
மேற்கண்ட திருவிழா செயல்திட்டத்தை  
வெற்றிகரமாக செயல்படுத்தும் பொருட்டு
24/10/2018 அன்று காரைக்குடியில் நடைபெறவிருந்த
ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
30/10/2018 அன்று நாடுதழுவிய தர்ணா போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது. அந்தப் போராட்டத்தினை  07/11/2018க்குப் பின்பு நடத்திடுவது நமக்கும் BSNLக்கும் நலம் பயக்கும்.
எனவே அனைத்து சங்கக்கூட்டமைப்பு போராட்டத்திட்ட தேதிகளை
மறுபரிசீலனை செய்திட அன்போடு வேண்டுகின்றோம். 

No comments:

Post a Comment