மூன்றாவது ஊதிய
மாற்றம் சம்பந்தமாக
அங்கீகரிக்கப்பட்ட
சங்கங்களுடன் நடந்த
ஏழாவது கூட்டம்
சற்று ஏழரையாகவே முடிந்துள்ளது.
தேக்கநிலையைத் தவிர்க்க...
NE 4 மற்றும்
NE 5 ஊதியவிகிதங்களின் MAXIMUM உச்சபட்சத்தை
சற்றுக்கூடுதலாக்க
வேண்டும் என்ற
ஊழியர் தரப்பு
கோரிக்கை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
எனவே
10/09/2018 அன்று நிர்வாகம் முன்மொழிந்த
சம்பளவிகிதங்களை
நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய
நிர்ப்பந்தம் நிலவியதால்
நிர்வாகத்தின் முன்மொழிவை
ஊழியர் தரப்பு
ஏற்றுக்கொண்டுள்ளது.
சம்பள விகிதம்
முடிவுக்கு வந்து விட்டது.
அடுத்த நமது இலக்கு
ALLOWANCE என்னும் படிகள் மாற்றம்தான்…
படிகளில் முக்கிய
இடம் வகிப்பது வீட்டு வாடகைப்படியாகும்.
6வது சம்பளக்குழுவால்
30,20,10 சதம் என உயர்த்தப்பட்ட
வீட்டுவாடகைப்படி
ஏழாவது சம்பளக்குழுவால்...
24,16,8 சதம் எனக் குறைக்கப்பட்டது.
A பிரிவு நகரங்களில்
30 சதமாக இருந்த வீட்டு வாடகைப்படி
தற்போது 24 சதம்
என 6 சதம் குறைக்கப்பட்டாலும் கூட
புதிய ஊதிய விகிதத்தில்
கணிசமான உயர்வைப் பெற்றுத்தந்துள்ளது.
A பிரிவு நகரங்களில்…
தற்போது
ரூ.7760/= அடிப்படைச்சம்பளம்
பெறும் ஊழியருக்கு
30 சத அடிப்படையில்
ரூ.2328/= வீட்டு வாடகைப்படியாக வழங்கப்படுகின்றது.
தற்போதுள்ள ரூ.7760/=
அடிப்படைச்சம்பளம்
ரூ.19000/= என
புதிய சம்பளமாக மாற்றம் செய்யப்பட உள்ளது.
அப்படியானால்
24 சத அடிப்படையில் வீட்டுவாடகைப்படி
ரூ.4560/= வழங்கப்பட
வேண்டும்.
தற்போதுள்ள வீட்டுவாடகைப்படியை
விட
ரூ.2232/= கூடுதலாகக்
கிடைக்கும்.
A பிரிவு மட்டுமல்ல அனைத்துப் பிரிவு நகரங்களிலுமே
வீட்டு வாடகைப்படி கூடுதலாகவே கிடைக்கும்.
துவக்க நிலை ஊதியமான
ரூ.19000/= பெறும்
அடிமட்ட ஊழியருக்கே
வீட்டுவாடகைப்படி
மாதம் ரூ.2232/=
உயருமானால்…
மற்ற ஊதிய நிலைகளைப்
பற்றி சொல்லித்தெரியவேண்டியதில்லை.
எனவேதான் நிர்வாகம்
வீட்டுவாடகையை
புதிய ஊதிய விகிதத்தில்
தர மறுப்பு தெரிவித்துள்ளது.
இதில் நமக்கு ஆச்சரியம்
ஒன்றுமில்லை.
காலம் காலமாக ஊழியர்கள்
வீட்டுவாடகைப்படி
விவகாரத்தில் ஏமாற்றப்படுவது
இயற்கையாக நிகழும் ஒன்று.
வீட்டு வாடகைப்படி
என்பது ஊழியர் ஒருவர்
ஓய்வு பெறும்போது
அவரோடு சேர்ந்து ஓய்வு பெற்றுவிடும்.
ஆனாலும் கூட நிர்வாகம்
கண்மூடித்தனமாக இதை மறுத்துள்ளது.
ஊழியர் தரப்பும்
இதனைக் கடுமையாக எதிர்த்துள்ளது.
புதிய ஊதிய விகிதங்களில்
ஏற்பட்ட
அமைதியான உடன்பாடு போலல்லாமல்
வீட்டுவாடகைப்படி
விவகாரம் சற்று விவகாரமாகவே முடியும்.
ஆனாலும் நாம் நமது
குரலை ஓங்கி ஒலித்திட வேண்டும்.
நமது ஒற்றுமையான
போராட்டங்கள் மூலமே
புதிய ஊதியத்தில்
வீட்டுவாடகையை வென்றிட முடியும்.
நம்பிக்கையும்…
போராட்டமுமே நமது மூலதனம்….
No comments:
Post a Comment