தேர்தல் செய்திகள்
BSNLலில் 8வது உறுப்பினர்
சரிபார்ப்புத் தேர்தல்
நடத்துவதற்கானப் பணிகள்
துவங்கியுள்ளன.
ஜூன் 3 அன்று தேர்தல் அறிவிப்பு வெளியாகும்
என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
19 சங்கங்கள் களத்தில்
உள்ளன.
தேர்தலில் பங்கு பெற
விரும்பாத சங்கங்கள்
ஜூலை 18க்குள் விலகிக்கொள்ளலாம்.
தேர்தல் செப்டம்பர்
16 அன்றும்...
வாக்கு எண்ணிக்கையும்
முடிவுகள் அறிவிப்பும்
செப்டம்பர் 18 அன்றும்
நடைபெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
தற்போதைய சங்க அங்கீகார
விதிகளின்படி
50 சத வாக்குகளுக்கு
மேல் ஏதேனும் ஒரு சங்கம் பெற்றால்
அந்த ஒரு சங்கம் மட்டுமே
அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக அறிவிக்கப்படும்.
ஏனைய சங்கங்கள் எத்தனை
சத வாக்குகள் பெற்றாலும்
இரண்டாவது சங்கம் என்ற
அங்கீகாரம் கிட்டாது.
மைசூரில் டிசம்பர்
2018ல் நடந்த
BSNLEU அகில இந்திய மாநாட்டில்
மேற்கண்ட அங்கீகார விதியில்
திருத்தம் வேண்டும் என
தீர்மானம் இயற்றப்பட்டது.
50 சதத்திற்கும் கூடுதலாக
ஏதேனும் ஒரு சங்கம் வாக்குகள் பெற்றாலும்
இரண்டாவது சங்கத்திற்கும்
அங்கீகாரம் வழங்கவேண்டும் என்று
BSNLEU தீர்மானம் இயற்றி
நிர்வாகத்திடம் அளித்திருந்தது.
ஆனால் இதுவரை நிர்வாகம்
இது பற்றி பரிசீலிக்கவில்லை.
எனவே 27/05/2019 அன்று
BSNLEU பொதுச்செயலர்
தோழர்.அபிமன்யு அவர்களும்...
NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங்
அவர்களும்
CMD அவர்களை சந்தித்து
தேர்தல் விதிமுறைகளில்
மேற்கண்ட திருத்தத்தை
அமுல்படுத்த வேண்டும்
என கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment