Wednesday, 6 May 2020

செ ய் தி க ள்

வழக்கு உள்ளவர்களுக்கு விடுப்புச்சம்பளம்

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்கள் மீது குற்ற வழக்குகள் இருந்தாலும் அவர்கள் விருப்ப ஓய்வில் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் அவர்களுக்கு 
VIGILANCE CLEARANCE என்ற அனுமதி வழங்கப்படாததால் 
விடுப்புச்சம்பளம்... EX GRATIA போன்ற
 பட்டுவாடாக்கள் வழங்கப்படவில்லை. 

அத்தகைய தோழர்களுக்கு விடுப்புச்சம்பளம் வழங்கலாம் என CORPORATE அலுவலகம் இன்று 06/05/2020 உத்திரவிட்டுள்ளது.
வழக்குகளில் அவர்கள் மீது ஏதேனும் பணப்பிடித்தம் செய்ய வேண்டி இருந்தால் அந்த தொகை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு மிச்சத்தொகை மட்டுமே பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அத்தகைய ஊழியர்களுக்கு வழக்கு முடியும் வரை தற்காலிக ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும். 
பணிக்கொடை... GRATUITY மற்றும் COMMUTATION
 போன்றவை வழங்கப்படாது. அவர்களது சேமிப்பான 
GPF மற்றும் விடுப்புச்சம்பளம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
 -----------------------------------------
VRS தோழர்களுக்கான MRS மருத்துவ அட்டை

தற்போதைய கொரோனா நோய்த்தொற்றுப் பிரச்சினை காரணமாக
விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களின் MRS மருத்துவ அட்டை 30/06/2020 வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவரை பழைய அட்டையை பயன்படுத்திக்கொள்ளலாம். 
அதன் பின் தோழர்கள் புதிய அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். 
புதிய மருத்துவ அட்டை பெற PPO எண் அவசியம்.
  -----------------------------------------
BSNL 4G டெண்டர் நிறுத்தம்

20/03/2020 அன்று 4G கருவிகள் பெறுவதற்காக...
நமது BSNL நிறுவனம் TENDER கோரியிருந்தது...
குத்தகையில் பங்கு பெறும் நிறுவனங்களுக்கு...
2கோடி 4G இணைப்புக்கள் கொடுத்த அனுபவம் இருக்க வேண்டும்... 
மேலும்...
கடந்த இரண்டு வருடங்களில் 8000 கோடி
அளவிற்கு வரவு செலவு இருக்க வேண்டும்
என்ற நிபந்தனைகளை விதித்திருந்தது.

மேற்கண்ட நிபந்தனைகள்
இந்திய தேசத்தின் MAKE IN INDIA திட்டத்திற்கு எதிராக இருப்பதாக TEPC – TELECOM EQUIPMENT AND SERVICE EXPORT PROMOTION COUNCIL என்னும் அமைப்பு அரசிடம் புகார் அளித்துள்ளது.

மேற்கண்ட நிபந்தனைகளால் உள்ளூர் நிறுவனங்கள் குத்தகையில் பங்கு பெறமுடியவில்லை என்பது அந்நிறுவனத்தின் வாதமாகும். அதனையொட்டி BSNL நிறுவனத்தின் குத்தகை மீது வணிக இலாக்காவும் DOTயும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

ஏனைய அனைத்து தனியார் நிறுவனங்களும் வெளிநாட்டுக்கம்பெனிகளிடம் இருந்து கருவிகளை இறக்குமதி செய்யும்போது BSNL நிறுவனம் மட்டும் தரம் குறைந்த பரிசோதனை செய்யப்படாத கருவிகளை வாங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்புவது BSNL வளர்ச்சிக்கு எதிரான திட்டமிட்ட சதியாகும். 
BSNL நிறுவனம் 3G சேவைகளுக்கு NOKIA போன்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிடக்கோரி
AUAB அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பாக 05/05/2020 அன்று பிரதமருக்கு விரிவான கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

அவசியமெனில் இன்று அனைவரும் அணிதிரண்டு 
போராட வேண்டிய கட்டாயமுள்ளது.

No comments:

Post a Comment