Thursday, 28 May 2020


திருவிளையாடல்

மதுரை... 
திருவிழாக்களுக்கும்... திருவிளையாடல்களுக்கும் பெயர் பெற்றது.
மதுரையில் கொரோனாவால்...
திருவிழாக்களே நின்று போன நிலையில்
திருவிளையாடல்கள் மட்டும் நிற்பதே இல்லை.
அதுவும் மதுரை மாவட்ட நிர்வாகத்தில் ...
திருவிளையாடல்கள் எப்போதும் போல் 
நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இப்போதைய திருவிளையாடல்....

J.E., கேடரில் மதுரைக்கு பல தோழர்கள் விருப்ப மாற்றலில்
காத்திருக்கும் நிலையில் நிர்வாகம் தனக்கு வேண்டிய
Waiting List 3ல் உள்ள தோழரை மதுரைக்கு மாற்றல் செய்தது.
BSNLEU சங்கம் இதனை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தியது.
காரணம் Waiting List 1ல் உள்ளவர் BSNLEU தோழர்.
BSNLEU சங்கத்துடன் இணைந்து நாமும் நமது எதிர்ப்பை தெரிவித்தோம்.
காரணம் Waiting List 2ல் உள்ளவர் நமது NFTE  தோழர்.

காத்திருப்போர் பட்டியலில்...
இரண்டு பேர் ஆண்டுகணக்கில் காத்திருக்கும்போது..
மூன்றாவது நபருக்கு மாற்றல் இடுவது 
முறையல்ல என்பதை எடுத்துரைத்தோம்.
முதல் இரண்டு விருப்ப மாற்றல்களை அமுல்படுத்திய பின்பு
மூன்றாவது நபருக்கு மாற்றல் இடுவதுதான்
சரியான நடைமுறை என்பதையும் சுட்டிக்காட்டினோம்.
மூன்றாவது நபருக்கு  மாற்றல் உத்திரவு போடப்பட்டதால்
முதல் இரண்டு மாற்றல்களையும் அமுல்படுத்த
நிர்வாகம் ஒத்துக்கொண்டது.

ஆனால் 26/05/2020 அன்று 
Waiting List 1ல் உள்ள முதல் நபருக்கு மட்டும் 
மாற்றல் உத்திரவைப் பிறப்பித்து விட்டு
இரண்டாவது இடத்தில் உள்ள NFTE தோழருக்கு
மாற்றல் இடாமல் நிர்வாகம் அநீதி இழைத்துள்ளது.

Waiting List 1 மற்றும் 3ல் உள்ள தோழர்களுக்கு மாற்றல் இட்ட நிர்வாகம்
Waiting List 2ல் உள்ள தோழருக்கு மாற்றல் இட மறுக்கும் 
மர்மம் நமக்குப் புரியவில்லை.

Waiting List 1ல் உள்ள  BSNLEU  சங்கத்திற்கும்
Waiting List 3ல் உள்ள FNTO சங்கத்திற்கும் தலைசாய்த்த நிர்வாகம்
Waiting List 2ல் உள்ள NFTE சங்கத்தைக்
கிள்ளுக்கீரையாக நினைக்கின்றது.

மதுரை மாவட்ட நிர்வாகம் காத்திருப்போர் பட்டியலை
எல்லாக்கேடர்களிலும் முறையாகப் பயன்படுத்த வேண்டும்.
தற்போது JE கேடரில் பாதிக்கப்பட்ட தோழருக்கு
உரிய நியாயம் வழங்க வேண்டும்.

Waiting List 1ல் உள்ளவருக்கு மாற்றல்.
Waiting List 3ல் உள்ளவருக்கு மாற்றல்.
Waiting List 2ல் உள்ளவருக்கு அல்வா என்ற அவல நிலையை...
திருவிளையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

விருப்ப ஓய்விற்குப் பின்பு எண்ணிக்கையில் 
தொழிற்சங்கங்கள் பலமிழந்து இருக்கலாம்...
ஆனால் போராட்டக்குணத்தில் 
நாம் என்றும் மழுங்கிப்போவதில்லை.

பாதிக்கப்பட்ட தோழருக்கு நிர்வாகம் உரிய நீதி வழங்க வேண்டும். 
அநாவசியமாக நம்மை வீதியில் நிறுத்தாது என்று நம்புகின்றோம்.

No comments:

Post a Comment