எ தி ர் ப் பு நா ள்
மத்திய அரசுஊழியர் மகாசம்மேளனம்...
போராட்ட அறைகூவல்...
நாட்டின் அதிமுக்கிய துறைகள் தனியாரிடம் தரப்படும்
என நிதிஅமைச்சகம் அறிவித்துள்ளது.
இராணு தளவாட உற்பத்தி..
விண்வெளிஆராய்ச்சி...
விமானபோக்குவரத்து....
நிலக்கரிமற்றும்
உலோக தாதுப்பொருள் சுரங்கங்கள்..
இன்னும்... இப்படி பல...
நாட்டின் பொருளாதாரத்தை தூக்கிப்பிடிக்கும்
அனைத்து துறைகளும்.... ஒட்டுமொத்த விற்பனை....
இதன் தொடர்ச்சியாக தொழிலாளர் சட்டத்திருத்தங்கள்..
எட்டுமணி நேர வேலைக்கு வேட்டு..
12 மணி நேர வேலைக்கு முயற்சி..
முன்னோட்டமாக-
வடமாநிலங்களில்
அமல்படுத்தப்பட்ட
12 மணிநேர வேலை உத்தரவு..
கொரானா பாதிப்பு நிலவரத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு
சாதகமாக பயன்படுத்தும் மோசமான சூழ்நிலை..
அதைவிடக் கொடுமை..
கொரானா பாதிப்பு சிறப்பு நிவாரணத்திட்டத்திற்காக
அறிவிக்கப்பட்ட
20 லட்சம் கோடியும்
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே போவதற்கு
புத்திசாலித்தனமாக
வாய்க்கால் திறக்கப்பட்ட வழிமுறைகள்..
20 லட்சம் கோடியில்...
விவசாய விருத்திக்கோ.. தொழில் விருத்திக்கோ..
வேலையை விட்டு வெகுதூரம் நடந்து செத்த
இந்த நாட்டு மக்களுக்கோ..
சல்லிப்பைசா ஒதுக்கப்படவில்லை.
பாதுகாப்புத்துறையில்
தனியார் நுழைவை எதிர்த்து
அங்குள்ள சங்கங்கள் ஏற்கெனவே பல போராட்டங்களை
நடத்தியதன் விளைவாக கார்ப்பரேட் ஆக்கும் முயற்சியை
மத்தியஅரசு கைவிட்டிருந்தது.
ஆனால்
இன்றைய கொரானா ஊரடங்கு நிலவரத்தை பயன்படுத்திக்கொண்டு
பாதுகாப்புத்துறை
ஊழியர்களால் போராடமுடியாது என்ற எண்ணத்தில் அத்துறையை Ordnance
Factory Board என்ற
கார்ப்பரேட் கம்பெனியாக்கியதோடு
அந்நியநேரடி முதலீட்டை 74% வரை அனுமதித்துள்ளது.
தேசப்பாதுகாப்பில்
அந்நியர் நுழைவை அனுமதிப்பதென்பது
தேசபக்தி கொண்ட யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
எதிர்காலத்தில்...
அனைத்து மத்திய அரசு துறைகளின் மீதும்
அலுவலகங்கள் மீதும் தாக்குதல் தொடுக்கப்படலாம்.
மத்திய அச்சகத்துறை மூடல்...
மத்திய அரசு அலுவலகங்களில்
அவுட் சோர்சிங்...
ஒப்பந்தமுறை வேலை....போன்ற
நிதி அயோக் (NITI Ayog) ஆலோசனைகள்
அப்படியே அமல்படுத்தப்படுகின்றன.
மத்திய தொழிற்சங்கங்கள்
அரசின் தனியார்மயக்கொள்(ளை)கை எதிர்த்தும்....
கொரானா பாதிப்பு சிறப்பு நிவாரணத்திட்டம்
சாதாரண பாமர கூலித்தொழிலாளிகளை சென்றடைவதற்கும்...
அகில இந்தியஅளவில் முதல்கட்டமாக
எதிர்வரும்
22/05/2020 அன்று...
"எதிர்ப்பு
நாள்"
கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசுஊழியர் மகாசம்மேளனமும்
இந்தப்போராட்டத்தில்
கலந்து கொள்கிறது.
மத்திய அரசு ஊழியர்கள் தங்களது அலுவலகம் முன்பாக
கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கைக்குட்பட்டு
ஆர்ப்பாட்டங்கள்
நடத்த கேட்டுக்கொள்கின்றோம்.
தோழமையுடன்...
R.N. PARASHAR
SECRETARY GENERAL
CONFEDERATION OF CENTRAL GOVT. EMPLOYEES
தமிழில்...தோழர். ந.நாகேஸ்வரன்
மாவட்டச்செயலர்
AIBSNLPWA காரைக்குடி..
No comments:
Post a Comment