Sunday, 22 May 2016

ஏழாவது...ஊதியக்குழு 

மத்திய அரசு ஊழியர்களுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட 
7வது ஊதியக்குழுவின் முடிவுகளை அமுல்படுத்துவது சம்பந்தமாக மத்திய அமைச்சரவை செயலர் தலைமையில் குழு ஒன்று  அமைக்கப்பட்டது. இந்தக்குழு தனது பரிந்துரையை 
ஜூன் 2016ல் சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது. 
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப்பின் ஜூலை 2016ல் ஊதியக்குழுவின் முடிவுகள் அமுலாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள குறைந்த பட்ச அடிப்படை ஊதியமான
 7000த்தை 18000மாக உயர்த்துவதற்கு
 7வது ஊதியக்குழு பரிந்துரை செய்திருந்தது. 
DA ரூ. 8750/= ஆக 125 சதம் உயர்ந்துள்ள நிலையில்..
 7000க்கு 18000 அடிப்படை சம்பளம் 
என்பது மிகவும் குறைவான உயர்வாகும்.  
மொத்த உயர்வு 14.29 சதமேயாகும்.

அடிப்படைச்சம்பளம்        = 7000
DA 125 சதம்                           = 8750
மொத்தம்                               = 15750
15750ல் 14.29 சத உயர்வு   = 2250
மொத்தம்                              = 18000 ( 15750 + 2250)
MULTIPLICATION FACTOR   = 2.57   ( 7000 X  2.57 = 18000)

6வது ஊதியக்குழுவில் 
30 முதல் 40 சதம் வரை ஊதிய உயர்வு கிட்டியது.
 ஆனால் 7வது ஊதியக்குழு மிகக்குறைந்த அளவில்  
சம்பள உயர்வைப் பரிந்துரை செய்துள்ளது. 

இது மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.  எனவே ஊழியர் தரப்பு  
குறைந்தபட்ச அடிப்படைச்சம்பளமாக ரூ.26000/- 
வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

ஊழியர் தரப்புக் கோரிக்கை முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும்...
அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் ரூ. 20000/=மாக 
 உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதன் மூலம் MULTIPLICATION FACTOR  
2.57லிருந்து 2.86ஆக உயரும் வாய்ப்புள்ளது. (7000 X 2.86 = 20000)
மேலும் மத்திய அரசு ஊழியர்கள் தங்களது 
ஆண்டு உயர்வுத்தொகையை 3 சதத்திலிருந்து 5 சதமாக 
உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

பிரதமரின் வெளிநாட்டுப்பயணங்கள் முடிவுற்றபின்
 ஏழாவது ஊதியக்குழுப் பரிந்துரைகள் அமுலுக்கு வரும்.. 
ஆகஸ்ட் மாதம் நிலுவை கைக்கு வரும்  
என்பது மத்திய அரசு ஊழியர்களின் நம்பிக்கையாகும்.
அவர்களது நம்பிக்கை நிறைவேற வாழ்த்துகிறோம்...

அது சரி...
நமது ஊதியக்குழு என்னாச்சு? என்ற 
உங்களின் கேள்வி காதில் விழாமல் இல்லை...
ஆறு தேர்தலில் டபுள் ஹாட்ரிக் வெற்றி பெற்று...
உலகமகா சாதனை படைத்துள்ள... 
BSNLEU சங்கம்தான் உரிய பதில் சொல்ல வேண்டும்...

No comments:

Post a Comment