Sunday, 8 May 2016

போடப்போறோம்... ஓட்டு...

போடப்போறோம் ஓட்டு..
வாங்க மாட்டோம் நோட்டு...

என்ற உறுதிமொழி  அடங்கிய வாசகங்களுடன் 
மே - 16 தமிழகத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு 
வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

 தமிழகப் பொதுத்தேர்தலுக்கு மட்டுமல்ல..
மே 10 இந்தியா முழுவதும் நடக்கவுள்ள 
நமது தொழிற்சங்க அங்கீகாரத்தேர்தலுக்கும் 
இத்தகைய உறுதிமொழி தேவைப்படுகிறது.

நமது தேர்தலுக்காக தோழர்களைச் சந்தித்தபோது...
பணம்... பானம்...
ஆசை காட்டி தோழர்களிடம் 
ஒரு தொழிற்சங்கம் ஓட்டு கேட்டதாகக் கூறினார்கள்...
நமக்கு அதிர்ச்சியாகவும்... அருவருப்பாகவும் இருந்தது...

நமது தோழர்கள் 
அற்ப ஆசைகளுக்கு அடிபணிபவர்கள் அல்ல...

ஆனாலும் அரசியல்வாதிகளின் வியாதி..
தொழிற்சங்கவாதிகளிடமும் பரவி விட்ட 
கொடுமை கண்டு மனம் நோகிறது...

தோழர்கள் பணம்... பானம்... சாதி... மதம் 
எதற்கும் இரையாகாமல்...
தங்களது வாக்கைச் செலுத்துமாறு 
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...

வாக்கு வெல்லட்டும்...
வாய்மை வெல்லட்டும்...

No comments:

Post a Comment