அங்கீகார உத்திரவுகள்
நடந்து முடிந்த BSNL தொழிற்சங்க
அங்கீகாரத் தேர்தல் முடிவுகளையொட்டி
வெற்றி பெற்ற சங்கங்களுக்கான
அங்கீகார உத்திரவை BSNL நிர்வாகம்
இன்று 19/05/2016 வெளியிட்டுள்ளது.
50 சதத்திற்கும் குறைவாக...
15 சதத்திற்கும் அதிகமாக..
வாக்குகள் பெற்ற சங்கங்கள்
அங்கீகாரம் பெறும் முதன்மைச் சங்கம் - BSNLEU
அங்கீகாரம் பெறும் இரண்டாவது சங்கம் - NFTE BSNL
அங்கீகார காலம்: 19/05/2016 முதல் 18/05/2019 வரை மூன்று ஆண்டுகள்
அங்கீகார வசதிகள்:
- தகவல் பலகை
- தொலைபேசி வசதி
- மாற்றலில் இருந்து விதிவிலக்கு
- JCM கூட்டுக்குழுவில் உறுப்பினர் நியமனம்
- சிறப்பு சிறு விடுப்பு
- சம்பளத்தில் சந்தாப்பிடித்தம்
- ஊழியர் சம்பந்தபட்ட உத்திரவுகளின் நகல்களை வழங்குதல்
2 சதத்திற்கும் அதிகமாக...
7 சதத்திற்கும் குறைவாக...
வாக்குகள் பெற்ற
FNTO மற்றும் BTEU சங்கங்களுக்கு
கீழ்க்கண்ட வசதிகள் வழங்கப்படும்.
- தகவல் பலகை
- தொலைபேசி வசதி
- சம்பளத்தில் சந்தாப்பிடித்தம்
- இலாக்கா வளர்ச்சி சம்பந்தமாக கடிதம் எழுதுதல்
JCM கூட்டுக்குழு
அகில இந்தியஅளவிலும்...
மாநிலம் மற்றும் மாவட்டங்கள் அளவிலும்...
JCMல் BSNLEUவிற்கு 9 இடங்களும்
NFTEக்கு 5 இடங்களும் ஒதுக்கப்படும்.
JCM உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின்
உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள்
மறுசீரமைப்பு செய்யப்படும்போது
JCM குழுவும் அதற்கேற்றவாறு
மறுசீரமைப்பு செய்யப்படும்.
தோழர்களே...
அங்கீகாரம் என்னும் அகங்காரம் கொல்வோம்..
அங்கீகாரம் என்னும் ஆயுதம் கொள்வோம்...
நமது நிறுவனத்தைக் காப்போம்...
நமது நியாயமான உரிமைகளை மீட்போம்...
நாளைய வாழ்விற்கு நல்வழி காண்போம்...
கரித்துக்கொட்டும் காட்சி மாற்றுவோம்...
அங்கீகரித்து... வாழ்வோம்... வளர்வோம்...
No comments:
Post a Comment