Sunday, 22 May 2016

இந்திய அஞ்சல் வங்கி PBI

வரும் மார்ச் 2017 முதல் 
இந்திய அஞ்சல் வங்கிச்சேவை துவக்கப்படும் என 
தகவல் தொடர்புத்துறை அமைச்சர் 
திரு.இரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.  

அஞ்சல் துறை நாடு முழுக்க 1,54,939  கிளைகளைக்  கொண்டுள்ளது.
 7000 இந்தியர்களுக்கு ஒரு அஞ்சல் அலுவலகம் என்ற விகிதத்தில் 
அஞ்சல்  துறையின் சேவை நாடு முழுக்க விரிந்து பரந்துள்ளது. 
எனவே அஞ்சல் துறையின் கட்டுமான வசதியைப்  பயன்படுத்தி 
அஞ்சல் வங்கிச்சேவையைத் துவக்க வேண்டும் 
என  2006ம் ஆண்டிலேயே விவாதிக்கப்பட்டது. 

பல்வேறு பிரச்சினைகள் காரணமாக 
அஞ்சல் வங்கிச்சேவை துவக்கம் தள்ளிப்போடப்பட்டு வந்தது. 
கடைசியாக 2015 ஆகஸ்ட்ல் RESERVE BANK OF INDIA 
அஞ்சல்துறைக்கு வங்கிச்சேவை ஆரம்பிக்க அனுமதி அளித்துள்ளது. அனுமதி பெற்ற 18 மாதங்களுக்குள் வங்கிச்சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும். எனவே மார்ச் 2017ல் வங்கிச்சேவையை  
ஆரம்பிக்க அரசு உத்தேசித்துள்ளது.

ஏற்கனவே 2014ல் அஞ்சல் துறை ATM வசதியை
 முக்கிய நகரங்களில் ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  
அஞ்சல் நிலையங்களில் 90 சதம் கிராமப்புறங்களில் அமைந்துள்ளதால் 
அஞ்சல் வங்கி ஆரம்பிக்கப்படுவதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு வங்கிச்சேவை எளிதில் கிடைக்கும். 

அஞ்சல் துறை போலவே நமது BSNL நிறுவனமும் விரிந்து பரந்த கட்டுமான அமைப்பை உடையது.  BSNL உருவாக்கத்தின் போது 
தனியாக  BSNL நிதிக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற 
கோரிக்கை எழுந்தது. ஆனாலும் அது உருப்பெறவில்லை.

No comments:

Post a Comment