சென்னைக்கூட்டுறவு சங்கம்
வட்டி குறைப்பு
சென்னைக்கூட்டுறவு சங்கத்தில் வட்டி விகிதம்
16 சதத்திலிருந்து 15 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வட்டி குறைப்பு 11/07/2016லிருந்து அமுலுக்கு வருகிறது.
வட்டிக்குறைப்பு என்பது கூட்டுறவு சங்க உறுப்பினர்களின்
நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.
வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கிறது.
கனரா வங்கி 11.65 சதம். யூனியன் வங்கியில் 12.15 சதம்.
எனவே வங்கியில் கடன் பெற்றுப் பல தோழர்கள் கூட்டுறவு சங்கக்கடனை அடைத்துவிட்டு உறுப்பினர்
நிலையினின்றும் விலகி விட்டனர்.
காலத்தே வட்டி குறைக்கப்பட்டிருந்தால்
உறுப்பினர்கள் விலகலை தடுத்திருக்க முடியும்.
மொத்தக்கடன் தொகைக்கும் ஆயுள்காப்பீடு என்பது மட்டுமே
கூட்டுறவு சங்கத்தில் பாராட்டப்பட வேண்டிய அம்சம்.
தற்போதைய 15 சதம் என்பதுவும் கூடுதல் வட்டியே.
எனவே உறுப்பினர்கள் விலகல் என்பது தொடரவே செய்யும்.
No comments:
Post a Comment