Monday, 11 July 2016

செய்திகள்

NFTE மத்திய செயற்குழு டெல்லியில் 
ஜூலை 13 மற்றும் 14 தேதிகளில் நடைபெறுகிறது. 
-----------------------------------------------------------------------------------------------------------------
JAO இலாக்காத்தேர்வு  17/07/2016 அன்று நடைபெறுகிறது. இந்தத்தேர்வில்  JAO SCREENING  தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களுக்கும் அனுமதி உண்டு. ஆனால்  சில இடங்களில் இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது தவறென்றும் மேற்கண்ட தோழர்களுக்கு தேர்வெழுத உடனடியாக அனுமதி வழங்குமாறும்
 நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------

தேசிய, மாநில அளவில் சிறந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்கான  பரிந்துரைகளை 13/07/2016க்குள் மாநில அலுவலகத்திற்கு அனுப்பிட மாவட்ட நிர்வாகங்களை 
மாநில நிர்வாகம்வலியுறுத்தியுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------
JCM  தேசியக்குழு உறுப்பினர்களை நியமனம் செய்யக்கோரி 
NFTE மற்றும் BSNLEU சங்கங்களுக்கு நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------
02/07/2016 அன்று ஹைதராபாத்தில் அனைத்து பொதுத்துறை தொழிற்சங்கங்களின் கருத்தரங்கம் நடைபெற்றது. அனைத்து மத்திய சங்கத்தலைவர்களும் கலந்து கொண்டனர். NFTE சார்பாக சம்மேளனச்செயலர்  தோழர்.கோபாலகிருஷ்ணன் கருத்துரையாற்றினார். வரும் செப்டம்பர் 2 அன்று  நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 
-----------------------------------------------------------------------------------------------------------------
ஜூலை 11 முதல் நடைபெறவிருந்த மத்திய அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் 4 மாதங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. உள்துறை மற்றும் நிதி அமைச்சர்களுடன் நடைபெற்ற பேசசுவார்த்தையின்  அடிப்படையில் 
போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------
புதிய தெலுங்கானா மாநிலம் உருவானதையொட்டி 
நமது BSNL  தொலைத்தொடர்பு நிர்வாகமும்
 ஆந்திரா மற்றும் தெலுங்கானா என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment