Thursday, 28 July 2016

காரை... முற்றினால் பாறை...

காரை முற்றினால் பாறை...
இது கடலோரப் பழமொழி...

கடலூரும்.. கடலோர ஊர்களும் 
கவனத்தில் கொள்ள வேண்டிய மொழி...

காரையின் அருமை... காரையின் பெருமை...
கடலூர் அறியாமல் இருக்கலாம்...
காவேரி பாயும் தஞ்சைக்குமா தெரியாது?

காரை எளியது... காரை வலியது...
வெள்ளையனுக்கு அணை போட..
கட்டபொம்மன் கட்டினான் காரையால் கோட்டை..
காவிரிக்கு அணைபோட... 
கரிகாலன் கட்டினான்.. காரையில் கல்லணை...
காரையின் பெருமை யாரையும் விட 
களஞ்சியத் தஞ்சைக்கு கட்டாயம் தெரியும்...

காரை கடலில் பிறந்தது..
காரையைக் கண்டால்.. 
திமிங்கலங்களும் திரும்பிப்போகும்..
காரையிடம் மோதிய கப்பல்கள் மூழ்கிப்போகும்...
காரை நல்லது...
கறைதான் கொடியது...

காரை முற்றினால் பாறை...
கறை முற்றினால்  காத்திருக்கு சிறை...

1 comment:

  1. காரையின் காரம் உக்கிரம்
    முடியட்டும் இந்நிலை சீக்கிரம்

    ReplyDelete