Tuesday, 23 May 2017

தொலைத்தொடர்புத் தீவு…
இராமேஸ்வரம் அன்று தீவு…
இன்றோ இரயில் பாலம்… பேருந்துப்பாலம் என
நிலப்பகுதியோடு நீக்கமற இணைந்து விட்டது…
ஆனாலும் நமது BSNLஐப் பொருத்தவரை…
இராமேஸ்வரம் அடிக்கடி துண்டிக்கப்பட்ட தீவாகிவிடுகிறது….

இராமேஸ்வரத்தில் அடிக்கடி OFC ROUTE துண்டிக்கப்படுகிறது…
OFC ROUTE துண்டிக்கப்பட்டால் மாற்று வழி ஏதுமில்லை…
துண்டிக்கப்பட்டவுடன் இணைப்பு சரிசெய்யப்படுவதில்லை..
மணிக்கணக்கில்… சமயங்களில் நாள்கணக்கில் ஆகிவிடுகிறது…
20/05/2017 அன்று OFC ROUTE துண்டிக்கப்பட்டது…
ஆனால் அதைச்சரிசெய்ய சுமார் 30 மணி நேரமாகிவிட்டது…
வங்கிச்சேவைகள் அனைத்தும் 
BSNL இணைப்பில் இருப்பதால்..
ATM எதுவும் வேலை செய்யவில்லை…
வங்கிப்பணிகள் முழுமையாக முடங்கி விட்டன…
இது ஏதோ ஒரு நாள் நிகழ்வல்ல…
அடிக்கடி நடக்கும் அன்றாட நிகழ்வாகிவிட்டது….

சேவை பாதிப்பால் ஏராள வருவாய் இழப்பு ஏற்படுகிறது…
வாடிக்கையாளர்கள் மிகுந்த கோபம் கொண்டு
நம்மைக் கடுமையாக விமர்சிக்கின்றார்கள்…
மக்கள் மத்தியில் இருந்த நமது மரியாதை
முற்றிலுமாக இப்போது தகர்ந்து விட்டது…
நமது ஊழியர்கள் கூட வேறுவழியின்றி
தனியார் SIMமும் கூடுதலாக வைத்திருக்க வேண்டிய
அவலத்திற்கு ஆளாகி விட்டார்கள்….

அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜவாஹிருல்லா
அவர்களின் காலத்தில் இது போன்ற பிரச்சினைகள்
அடிக்கடி ஏற்பட்டு அவர் இது சம்பந்தமாக
நமது தோழர்களிடம் விவரங்கள் கேட்டறிந்தார்…
பழுதுகள் தொடர்வது என்பது வாடிக்கையாகிப்போனால்
தாமே மக்கள் மன்றத்தில் போராட்டம் 
செய்ய வேண்டி வரும் என்றும் கூறினார்..
நல்லவேளை அவர் அடுத்த தேர்தலில் வெற்றி பெறவில்லை…

BSNLEU பொதுச்செயலர் அருமைத்தோழர்.அபிமன்யு அவர்கள்
இராமேஸ்வரம் வந்திருந்தபோது இது பற்றி முறையிட்டோம்…
அவரும் ஆவண செய்வதாக உறுதி அளித்துச்சென்றார்…
மேலும் இந்தப்பிரச்சினை நமது RJCMலும் விவாதத்தில் உள்ளது…

இந்தப்பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன…
இராமநாதபுரத்தில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் பாதையில் 
அருள்மிகு முருகப்பெருமான் கோவில் அமைந்துள்ள
பிரப்பன்வலசை என்னும் ஊர் உள்ளது…
அங்கே RING உள்ளது… RING ROUTE அமைக்க வேண்டும்…
சுமார் 22 கிலோமீட்டர் தூரம் ஆகும்…
மேலும் இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன்,
மண்டபம்,வேதாளை, உச்சிப்புளி,பெருங்குளம் வழியாக
இராமநாதபுரம் வரையுள்ள கோபுரங்களை
இணைப்பதன் மூலம் மாற்று வழி செய்ய முடியும்…

இராமேஸ்வரம் 
இந்திய தேசத்தின் மிக முக்கிய ஆன்மீக நகரம்…
ஆயிரக்கணக்கான… 
சமயங்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள்…
நமது சேவையை சிறப்பாக கொடுப்பதன் மூலம்…
மிகுந்த வருவாய்ப் பெருக்கத்தை நாம் ஈட்ட முடியும்…
தேவையெல்லாம்...
இராமேஸ்வரம் பற்றிக்கூடுதல் கவனம் செலுத்துவதே…
திரு.பாலுச்சாமி SDE அவர்கள் 
மாற்றலாகிச்சென்ற பின் ஐந்தாறு ஆண்டுகளாக…
நிலையான அதிகாரி இராமேஸ்வரம் நிலையத்தில் இல்லை…
மாவட்ட நிர்வாகமும்… மாநில நிர்வாகமும்
இராமேஸ்வரம் பகுதிக்கு 
சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும் என்பதே
இங்குள்ள ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு…
 ================================================
எதிர்பார்ப்புடன்…
இராமேஸ்வரம் வாடிக்கையாளர்கள் 
மற்றும் ஊழியர்கள் சார்பாக 
B.இராஜன் 
NFTE மாவட்ட உதவிச்செயலர்
 இராமேஸ்வரம்… 9486108856.

No comments:

Post a Comment