Monday, 8 May 2017

மாவட்டச்செய்தி மடல்
CENVAT CREDIT விருது
 காரைக்குடி மாவட்டத்திற்கு  வழங்கப்படும் காட்சி
 
சென்ற நிதியாண்டில்... 
ஏறத்தாழ 25 லட்சம் அளவிற்கு CENVAT CREDITஐ
முழுமையாகப் பயன்படுத்தியமைக்காக காரைக்குடி மாவட்டத்திற்கு 
தமிழக முதன்மைப்பொதுமேலாளர் விருது வழங்கியுள்ளார். 

CENVAT CREDIT பணியில் முழுமையாக ஈடுபட்ட
CAO திருமதி.தேன்மொழி முருகேசன், 
JAO திரு.சுரேஷ் மற்றும் அலுவலக கண்காணிப்பாளர் 
NFTE இயக்கத்தின் மூத்த தோழர்.சிதம்பரம்
ஆகியோருக்கு நமது வாழ்த்துக்கள்.

சென்ற நிதியாண்டில் காரைக்குடி மாவட்டம்
வருமான இழப்பைச் சந்தித்துள்ளது. திருச்சி, மதுரை போன்ற 
பல்வேறு மாவட்டங்களிலும் இதே நிலைதான்.

காரைக்குடியில் DGMஆகப் பணிபுரிந்த 4 அதிகாரிகள் 
சென்ற நிதியாண்டில் பணி ஓய்வு பெற்றுள்ளனர். 
மண்ணின் மைந்தர் திரு.ஜெயச்சந்திரன் DGM(Admn)
விற்பனையைப் பெருக்கிய திருமதி.ராஜம்மாள் DGM(CM) 
திட்டப்பிரிவில் நீண்டநாட்கள் அனுபவம் கொண்ட திருமதி.நீலாயதாட்சி DGM, 
நிதிப்பிரிவில் நீண்ட அனுபவம் மிக்க திரு.சந்திரசேகரன் DGM(F) 
ஆகியோரின் பணிநிறைவு 
மாவட்டத்தின் பின்னோக்கிய நிலைக்கு ஒரு காரணம். 

மேலும் நிலையான பொதுமேலாளர் இல்லாத நிலையில், 
நிதிப்பிரிவிலும் நிலையான DGM இல்லாத நிலையில் 
மாவட்டத்தின் வளர்ச்சி என்பது தேக்கநிலை அடைந்துள்ளது.

வறட்சிக்குப் பெயர் போன இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டத்தில் 123 தொலைபேசிநிலையங்கள் உள்ளன. 
இவற்றில் 90 சதம் கிராமப்புற தொலைபேசி நிலையங்களாகும். 
வறட்சி காரணமாக மக்கள் பல ஊர்களைக் காலி செய்து விட்டு நகர்ப்புறங்கங்களை நோக்கிச்செல்லும் அவல நிலை சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. கிராமப்புற தொலைபேசி நிலையங்கள் அனைத்திலும் வருமான இழப்பே ஏற்பட்டுள்ளது. 
70க்கும் அதிகமான தொலைபேசி நிலையங்களில் ஈரிலக்கத்தில்தான் தொலைபேசி எண்ணிக்கைகள் உள்ளன.  காரைக்குடி மாவட்டம் விருதுநகரில் இருந்து பிரிக்கப்பட்ட காலத்தில் இருந்தே ஊழியர் எண்ணிக்கை மிகவும் குறைவு. தற்போது மிக.. மிக.. மிகக்குறைவான ஊழியர்களைக் கொண்டே மாவட்டம் செயல்படுகிறது.

பல துணைக்கோட்டங்களில் அதிகாரிகள் இல்லை. 
கூடுதல் வருமானம் தரக்கூடிய இராமநாதபுரம் பகுதியில் 
தனியாக DE இல்லை. புகழ்மிக்க இராமேஸ்வரம் மற்றும் 
வருவாய்ப் பெருக்கம் உள்ள கீழக்கரை போன்ற பகுதிகளுக்கு 
தனியாக அதிகாரிகள் இல்லை. நெசவுத்தொழில் நிறைந்த 
பரமக்குடி பகுதிக்கு DE இல்லை. SDEக்கள் இல்லை. மாவட்டத்தலைநகரான சிவகங்கையில் தனியாக DE இல்லை. 
கூடுதல் SDEக்கள் இல்லை. எண்ணெய்த் தொழிலுக்குப் பேர்போன சிங்கம்புணரி மற்றும் திருப்பத்தூர் துணைக்கோட்டங்களில் துணைக்கோட்ட அதிகாரிகள் இல்லை...

இத்தனையும் தாண்டி…
அர்ப்பணிப்பு உணர்வுள்ள பல தொழிலாளர்கள் மற்றும் ஒருசில நேர்மையான அதிகாரிகளால் இன்றும் காரைக்குடி மாவட்டம் செயல்பட்டு வருகிறது. மாநில நிர்வாகம் காரைக்குடி மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி நடக்கும் நிகழ்வுகளை நேரடியாகப் புரிந்துகொண்டு செயலாற்றினால் காரைக்குடி மாவட்டம் 
மேல்நோக்கி முன்னேறும் என்பது உறுதி.

1 comment:

  1. கடந்த ஞாயிறு முதல் கண்ணங்குடி மற்றும் மங்களகுடி இரு ஊர்களும் முற்றிலுமாக துண்டிக்கபட்டுள்ளது. இதற்கும் காரணம் நமது மாவட்ட செயலர் என்று கூறினாலும் கூறுவர் மூடர்கள் இந்த லட்சணத்தில்.................

    ReplyDelete