NFTCL செயற்குழு முடிவுகள்
NFTCL நெல்லை மாநிலச்செயற்குழு முடிவுகள்
NFTCL தமிழக மாநிலச்செயற்குழு 28/04/2017 அன்று நெல்லையில்
மாநிலத்தலைவர் தோழர்.பாபு அவர்கள் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. செயற்குழு நிகழ்ச்சிகளை
மாநில செயல்தலைவர் தோழர்.மாரி ஒருங்கிணைத்தார். மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் விவாதப்பொருளை
அறிமுகப்படுத்தி உரையாற்றினார். பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் அவர்கள் ஒப்பந்த ஊழியர்களின்
பிரச்சினைகள் அவற்றில் நாம் அடைந்துள்ள இலக்குகள் மேலும் அடைய வேண்டிய இலக்குகள் பற்றி
எழுச்சிமிகு துவக்கவுரையாற்றினார். மாநிலச்சங்க நிர்வாகிகள், மாவட்டச்செயலர்கள் மற்றும்
NFTE மாவட்டச்செயலர்கள் கருத்துரையாற்றினர். மூத்த தோழர்.ஈரோடு மாலி அவர்கள் நிறைவுரையாற்றி
செயற்குழுவை நிறைவாக முடித்து வைத்தார். செயற்குழு சிறக்க உதவிய நெல்லையின் மூத்த தோழர்.பாபநாசம்
அவர்களுக்கும், நெல்லை NFTE மாவட்டச்செயலர் தோழர்.கணேசன் மற்றும் நெல்லை மாவட்டத்தோழர்களுக்கு
நமது வாழ்த்துக்கள்.
செயற்குழுவில்
கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
- உறுப்பினர்களின் மாதச்சந்தா ரூ.20/=. ஆண்டுச்சந்தா ரூ.240/=.பகுதிப்பணம் ரூ.5/= என்ற அடிப்படையில் கிளை,மாவட்டம்,மாநிலம் மற்றும் சம்மேளனம் ஆகிய மட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட வேண்டும்.
- கடலூர் மாவட்ட மாநாடு மே 28 அன்று நடத்துவது.
- மே 5 அன்று சென்னையில் நடைபெறவுள்ள கார்ல்மார்க்ஸ் 200வது பிறந்தநாள் விழா சிறப்புக்கூட்டத்திற்கு தோழர்களை பெருவாரியாக அணிதிரட்டுவது.
- ஒப்பந்தத்தொழிலாளர் பிரச்சினைகள் பற்றித் தொழிற்சங்கங்களுடன் பேசக்கூடாது என்ற BSNL நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத உத்திரவை செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. மேற்கண்ட உத்திரவு உடனடியாக விலக்கிக்கொள்ளப்படவேண்டும். ஒப்பந்த ஊழியர் சங்கங்கள் தங்களது உறுப்பினர்களின் பிரச்சினைகளை நிர்வாகத்துடன் பேசித்தீர்க்க உரிய வழிவகை செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- ஒப்பந்த ஊழியர்களின் நம்பிக்கை இயக்கமான NFTCL சங்கத்தை வலுப்படுத்த வேண்டும். புதிய உறுப்பினர் சேர்ப்பில் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
- உலகத்தொழிலாளர்களின் உன்னதத்திருவிழாவான மேதினத்தை கிளைகள் தோறும் கொண்டாட வேண்டும். கிளைகள் தோறும் நம் செங்கொடி பட்டொளி வீசிப்பறக்க வேண்டும்.
- காரைக்குடி மாநில மாநாட்டில் இயற்றப்பட்ட 12 அம்சக்கோரிக்கைகள் தீர்விற்காக இயக்கங்கள் நடத்துவது..... மே 20 அன்று மாவட்டத்தலைநகரில் ஆர்ப்பாட்டம்…................. ஜுன் 10 அன்று மாநிலத்தலைநகரில் தர்ணா.
- NFTCL மாநில செயல்தலைவர் தோழர்.மாரி மீது தொடர்ந்து பழிவாங்குதல் நடவடிக்கைகளைத் தொடுத்து வரும் மாநில,மாவட்ட நிர்வாகங்களை செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. பழிவாங்கும் போக்கு தொடருமேயானால் வலிமையான போராட்டக்களம் காண செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.
No comments:
Post a Comment